TRLM CTU
Tamilnadu Rural Labour movement Central General Trade Union
21/04/2026
19-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஈரோடு சவாணா கார்டன் அரங்கில் தமிழ்நாடு மின்சார வாரியம் பயிற்சி பெற்றார் (அப்ரன்டீஸ்) தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் திருமிகு மகேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, பொதுச்செயலாளர் திருமிகு நந்தகுமார் அவர்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்துரை மாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் திருமிகு சுவாமிநாதன் மற்றும் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் திருமிகு முனைவர் செல்ல செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.....
23/03/2026
On Saturday, March 21, 2026, at 11:00 AM, the organizational meeting of the Tamil Nadu Electricity Board Independent Contract Workers' Union was held in Union Office of Dr Ambedkar Employees / Engineers Union at Mettur Thermal Power Station, Salem District.
Hon.KP Swaminathan,Hon. Jayakumar State President, Hon. Dr. Chella Selvakumar General Secretary of ILU Tamilnadu and Hon. Sasikala Madam AD, and Contract Labours Mettur Thermal Power Station were participated in the meeting.
Resolved in the meeting that after July this year, inauguration function of TNEB Independent Contract Labour Union of Mettur Thermal Power Station. We also decided to invite National President & ILU delegation from Nagpur to participate in the function.
21/03/2026
வணக்கம் தோழர்களே நமது தொழிற்சங்கத்தின் (TRLMCTU)மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 14-03-2026 சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் TRLMCTU தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் திருமிகு ராஜாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் திருமதி ஜெயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் முனைவர் செல்ல செல்வகுமார் சிறப்புரையாற்றிய பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர் அதன் பிறகு புதிய மாவட்ட செயலாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது அவர்களுக்கு பொறுப்பு சான்றிதழ் மாநில தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் வழங்கினார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முடிவில் திருமிகு இராஜேஸ்வரி மாநில துணைப் பொதுச் செயலாளர் நன்றி கூறினார்.
07/03/2026
*சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்*( *விடுதலை*) *உலக மகளிர் தினம்* (*சர்வதேச பெண்கள் நாள் *)
எதிர் பாராத பல புரட்சிகளை இந்த உலகம் சந்தித்து இருக்கின்றது.1759 ஆம் ஆண்டு, ஐரோப்பியக் கண்டத்தையே அச்சுறுத்திய பிரெஞ்சுப் புரட்சியின்போது, லூயி மன்னன் மாளிகையைச் சுற்றி எட்டாயிரம் பெண்கள் கையில் ஆயுதங்களோடு இருந்தார்கள்.
1889 ஆம் ஆண்டு, கிளாரா ஜெட்கின் என்கிற வீராங்கனை, ‘அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தில் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும்’ என்று உரிமைக்குரல் எழுப்பினார். 1907 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷியலிச மாநாட்டில், உலக மகளிர் அமைப்பின் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், ‘எங்களுக்குத் தொழிற்சங்க உரிமை வேண்டும்; பணிபுரிகின்ற இடங்களில் சமநீதி கிடைக்க வேண்டும்’ என்று ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வந்தார்கள். அவர்கள் வெற்றி பெற்றதை வாழ்த்திப் பாராட்டி, மூன்று ஆண்டுகள் கழித்து, ‘இனிமேல் இந்த நாள்தான் உலக மகளிர் நாள்’ என்று கிளாரா ஜெட்கின் அறிவித்தார்.
சோவியத் புரட்சியின்போது, ஆரோரா கப்பலில் பீரங்கிகள் வெடித்தபோது, 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் நாள், பெட்ரோகாம் நகரில் எட்டாயிரம் பெண்கள் அணிவகுத்து வந்தார்கள். உரிமை வேண்டும்; ஒடுக்குமுறையை எதிர்ப்போம் என்று முழங்கினார்கள். அவர்கள் உயர்த்திய உரிமைப் பதாகை, சோவியத் புரட்சிக்கு நுழைவாயில் ஆயிற்று.
ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில், கையில் சிலம்போடு மன்னனின் அவையில் கண்ணகி நிகழ்த்திய மாபெரும் புரட்சியைச் சிலப்பதிகாரம் எடுத்து இயம்புகின்றது. மணிமேகலை அமுத சுரபியை ஏந்தி அமுது படைத்தாள். அரசனுக்கு அறிவுரை கூறிய மகளிர் வாழ்ந்தனர். அள்ளுர் நன்முல்லையார், ஆதி மந்தியார், ஊண் பித்தையார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், காவற் பெண்டு, காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், காமக்கணிப் பசலையார், குறமகள் இளவெயினி, நக்கண்ணையார், நெட்டிமையார், பாரி மகளிர், பொன் முடியார், மாறோக்கத்து நப்பசலையார், முடத்தாமக் கண்ணியார், வெள்ளி வீதியார் என எண்ணற்ற பெண் பாற்புலவர்கள் பாடிய பாடல்கள், சங்க இலக்கியத்தில் இடம் பெற்று இருக்கின்றன. உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் பார்க்க முடியாத மாபெரும் சமுதாயப் புரட்சி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றது.
இந்தியத் துணைக்கண்டத்தில், வடபுலத்தில், ‘தாய், தங்கை இவர்களோடு கூட ஓர் ஆண் தனியாக உட்காரக் கூடாது; மாதர்கள் விபசார தோஷம் உடையவர்கள்; மாதர்கள் சிருங்கார சேஷ்டைகளால் மக்களைக் கெடுப்பவர்கள்; மாதர்கள் கற்பு நிலை இல்லாதவர்கள்; மனத்திண்மை இல்லாதவர்கள்; நிலையான புத்தி இல்லாதவர்கள்’ என்று, மநுஸ்மிருதிகளும், வேதங்களும் புகட்டிய கருத்துகளை கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சத்தில் விதைத்தன. அந்தக் கருத்துகள் தமிழகத்திலும் ஊடுருவின.
அந்தக் கொடுமைகளை எதிர்த்து, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பினார். பெண் விடுதலையை வலியுறுத்தினார்; விதவைத் திருமணங்களை ஆதரித்தார்; பேரறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் தந்தார்; டாக்டர் கலைஞர், பெண்களுக்குச் சொத்து உரிமை வழங்கினார். மகளிர் கல்வியில், இந்தியாவில் முன்னோடியாகத் தமிழகம் திகழ்கின்றது.
நாளும் நாளும் எத்தனையோ சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள். அவர்களுக்கு மென்மேலும் ஊக்கள் அளிக்கின்ற வகையில், மார்ச் 8 உலக மகளிர் நாள் கொண்டாட்டங்கள் அமையட்டும் என வாழ்த்துகிறேன்.
இவன்
*முனைவர் செல்ல செல்வகுமார்
மேனாள் உறுப்பினர் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்.
மாநில பொதுச்செயலாளர்
TRLMCTU & ILU-TN
மாநில பொதுச்செயலாளர் சமகல்வி இயக்கம்-தமிழ் நாடு.
28/02/2026
28-02-2026 இன்று TRLMCTU அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தலைவர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திரு.ராஜா விளக்கவுரை ஆற்றினார், மற்றும் து.தலைவர் திருமதி சுபாஷிணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை அதிகப்படுத்தவும், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களையும் வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அவர்கள் நலன் பெற தீவிரமாக செயல்படுவது எனவும் மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்..
06/02/2026
இன்று சென்னை எக்மோரில் உள்ள HMS நக்கீரன் அரங்கில் நடைபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்யவும் தமிழ் நாட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டபூர்வமான தொழிலாளர் சமூக பாதுகாப்பு நல வாரியங்களை பாதுகாக்கவும் நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற மூன்றாவது வாரத்தில் தொடர் உண்ணாவிரதம் மற்றும் மாவட்டந்தோறும் ஒரே நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நமது TRLMCTU சங்கத்திலிருந்து மாநில பொதுச்செயலாளர் முனைவர் செல்ல செல்வகுமார் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் திருமதி தெய்வமலர் மற்றும் தலைவர் நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
17/12/2025
Sakshi and CSED Avinashi organized today (17-12-25)at Tirupur Pappy's tower hotel
TIC - Working Group Meeting with Trade Unions
Driving Women's Safety in Indian Textile Sector by way of,
* strengthening implementation corporate and public laws and policies.
* Promoting locally - Owned women's Safety solution.
* Transforming social norms, attitude and behaviours.
More than 10 unions and Ngos repercenties are participating and Discussed above the valuable points for further better implementation
10/12/2025
அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில்இன்று (10-12-25) காலை 11 மணியளவில் சென்னை பெரியார் சிலை அருகில் நடந்து கொண்டிருக்கும் மத்திய புதிய தொழிலாளர் சட்டங்களை இரத்து செய்யவும், மாநில சட்டங்களை பாதுகாக்கவும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பெரும்பான்மை தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டத்தினில் நமது TRLMCTU தொழிற்சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் திருமதி தெய்வமலர்,தலைவர் திரு. நரேன் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் திரு இராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்து உரிமைக்குரல் எழுப்பினர்.... திருமிகு கீதா இராமகிருஷ்ணன் தேசிய அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அவர்கள் தலைமயேற்று நடத்தினார்கள், என்னற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்!! தொழிற்சங்க ஒற்றுமை ஓங்கட்டும்!! தொழிலாளர் உரிமையை மீட்டெடுப்போம்!!!.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Address
Erode
638001