Cellfuel
Cellfuel Herbals is a supplement selling company. We are having 3 unique products to overcome from Sugar, Varicose Vein and Joint pain.
19/08/2025
சீதாப்பழம், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு சுவையான பழம். இது எலும்புகளை வலுவாக்கும், செரிமானத்திற்கு உதவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தை அளவாக சாப்பிட வேண்டும், ஏனெனில் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்,
சீதாப்பழத்தின் முக்கிய நன்மைகள்:
எலும்பு ஆரோக்கியம்:
சீதாப்பழத்தில் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே உள்ளது, இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது, எலும்பு பலவீனம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது,
செரிமானம்:
சீதாப்பழம் நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
சீதாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
மன அழுத்தம்:
சீதாப்பழத்தில் உள்ள சில சேர்மங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது.
சரும ஆரோக்கியம்:
சீதாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
கர்ப்பிணி பெண்களுக்கு:
சீதாப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது கருவின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு வளர்ச்சியை ஆதரிக்கிறது,
எச்சரிக்கை:
சீதாப்பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை அளவாக சாப்பிட வேண்டும்,
சீதாப்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவது சிலருக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்,
எப்படி சாப்பிடுவது?
சீதாப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவோ, இனிப்புகளில் சேர்க்கவோ செய்யலாம். சீதாப்பழத்தை ஜூஸாக சாப்பிடும்போது, சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், அதனால் பழமாக சாப்பிடுவது நல்லது,
18/08/2025
16/08/2025
*சியா விதைகள் மருத்துவப் பயன்கள்.*
சியா விதைகள் அளவில்
சிறியதாக இருக்கலாம்,
ஆனால் அதில் நம்பமுடியாத
அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில்
*நார்ச்சத்து,*
*புரதம்,*
*ஒமேகா -3*
*கொழுப்பு அமிலங்கள்*
மற்றும் பல்வேறு
நுண்ணூட்டச்சத்துக்களால்
நிரம்பியுள்ளன.
*சியா விதை நன்மைகள்
மற்றும் பயன்கள்*
*செரிமான ஆரோக்கியம்*
சியா விதையில் போதுமான நார்ச்சத்து அதிகம் உள்ளது.
இதனால் மலச்சிக்கல்
பிரச்சனையை தடுக்கிறது
மற்றும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக
வைத்திருக்க உதவுகிறது.
*இரத்த சர்க்கரை அளவை
குறைக்க உதவும்*
சியா விதைகளை நமது உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில்
சர்க்கரை அளவை கட்டுக்குள்
வைத்துக் கொள்ளலாம்.
சியா விதைகள் நார்ச்சத்து
மற்றும் ஒமேகா -3 கொழுப்பு
அமிலங்களின் சிறந்த மூலமாகும்,
மேலும் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும்
நீரிழிவு நோயில்
இன்சுலின் உறிஞ்சுதலை
மேம்படுத்தவும் உதவும்.
இதில் உள்ள நார்ச்சத்து
அதிக நேரம் பசி தாங்க
கூடியதாக இருக்கும்,
இது அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்வதை தடுக்கும்.
*எலும்பு ஆரோக்கியம்*
சியா விதைகளில்
மெக்னீசியம்
மற்றும் பாஸ்பரஸ்
உள்ளிட்ட எலும்புகளின்
ஆரோக்கியத்திற்கு முக்கியமான
பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இது ஆரோக்கியமான
எலும்பு, தசை மற்றும்
நரம்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கும்.
சியா விதைகளில்
பால் பொருட்களை விட
அதிக கால்சியம் உள்ளது.
*இதய நோய்
அபாயத்தை குறைக்கும்*
சியா விதைகளில்
நார்ச்சத்து
மற்றும் ஒமேகா 3 கொழுப்புகள்
அதிகம் இருப்பதால்
இதை உட்கொள்வதன் மூலம்
இதய நோய் அபாயத்தை குறைக்கும்.
இது உயர் ரத்த அழுத்தத்தை
குறைக்க உதவுகிறது.
*உடல் எடை குறைக்க உதவும்*
சியா விதைகளை முக்கியமாக உடல் எடையை குறைக்க பயன்படுத்துகின்றனர்.
உடல் பருமனை குறைக்க
மற்ற உணவுகளை காட்டிலும்
சியா விதைகள் மிகவும்
உதவிகரமாக இருக்கும்.
சியா விதைகளை
21 வாரங்கள் தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால்
நல்ல பலனை பார்க்க முடியும்.
*எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது*
உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள்,
இந்த சியா விதியை உட்கொள்ளுவதன் மூலம் சரி செய்ய முடியும்.
இதில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது.
இது நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல்,
நோய்க்கிருமிகளை எதிர்த்து
போராட உதவும்.
*சியா விதை சாப்பிடும் முறை.*
உங்கள் உணவில்
சியா விதைகளை சேர்க்க
பல வழிகள் உண்டு.
அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
எளிமையான வழி தண்ணீரில்
சேர்த்து சாப்பிடுவது.
இரண்டு ஸ்பூன் சியா விதைகளை
ஒரு கப் தண்ணீரில் 20-30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் பருகவும்.
ஒரு டம்ளர் தண்ணீரை மிதமாக சூடாக்கி,
அதில் அரை எலுமிச்சை பழச்சாறு
ஒரு ஸ்பூன்
சியா விதைகள் சேர்த்து
காலை வேளையில் பருகலாம்.
எல்லாவித பழச்சாறுடனும்
சேர்த்து சாப்பிடலாம்.
சியா விதைகளை அரைத்து,
சப்பாத்தி மாவுடன் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.
ஃப்ரூட் ஜாம் செய்யும் போது
அதனுடன் சியா விதைகளையும்
சேர்த்து சாப்பிடலாம்.
சியா விதைகளை
தண்ணீரில் போட்டு ஊற வைத்தால்
அதன் அளவில் இருந்து 10-12 மடங்கு பெரியதாக மாறும்.
*சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.*
*ஊட்டச்சத்துக்கள்100 கிராமில்.*
*தண்ணீர்5.80 கி*
*ஆற்றல்486 கி.கலோரி*
*புரதம்16.54 கி*
*கொழுப்பு30.74 கி*
*கார்போஹைட்ரேட்42.12 கி*
*நார் சத்து34.4 கி*
*தாதுக்கள்*
*கால்சியம்631 மி.கி*
*இரும்புச்சத்து7.72 மி.கி*
*மெக்னீஷியம்335 மி.கி*
*பாஸ்பரஸ்860 மி.கி*
*பொட்டாசியம்407 மி.கி*
*சோடியம்16 மி.கி*
*துத்தநாகம்4.58 மி.கி*
*வைட்டமின்கள்*
*வைட்டமின் சி1.6 மி.கி*
*வைட்டமின் பி10.620 மி.கி*
*வைட்டமின் பி20.170 மி.கி*
*வைட்டமின் பி38.830 மி.கி*
*வைட்டமின் ஏ54 மி.கி*
*வைட்டமின் ஈ0.50 மி.கி*
*கொழுப்புகள் / கொழுப்பு அமிலங்கள்*
*செறிவூட்டப்பட்ட (சாச்சுரேட்டட்)3.330*
*மோனோஅன்சாச்சுரேட்டட்2.309*
*பாலிஅன்சாச்சுரேட்டட்23.665*
*டிரான்ஸ்0.140*
உலகில் உள்ள ஆரோக்கியம் நிறைந்த விதைகளில், சியா விதைகளே முதன்மை வகிக்கின்றன.
🙏🙏🙏🙏🙏🙏
*வாழ்க வளமுடன்!*
🙏🙏🙏🙏🙏🙏
14/08/2025
13/08/2025
கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) – முழுமையான விளக்கம்
1. கல்லீரல் மற்றும் அதன் பங்கு
கல்லீரல் என்பது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. அது ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வடிகட்டும், சத்து பதிப்பித்து சேமிக்கும், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் செய்து, உடலின் சுகாதாரத்தை பராமரிக்கிறது.
---
2. கொழுப்பு கல்லீரல் என்றால்
கல்லீரலில் அசாதாரணமாக அதிகமாக கொழுப்புகள் சேரும்போது, அது கல்லீரல் செயற்பாடுகளை பாதிக்க தொடங்கும். இது முதலில் எளிதில் திருத்தக்கூடிய நிலையாக இருக்கும், ஆனால் கவனிக்காமல் இருந்தால், கல்லீரல் அழற்சி, தழுவல் (fibrosis), கடைசியில் கல்லீரல் வியாதிகள் (cirrhosis) ஆகும்.
---
3. கொழுப்பு சேரும் காரணங்கள்
அதிக உடல் எடை (Obesity)
இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance), பெரும்பாலும் Type 2 Diabetes உடன்
அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள்
உடல் இயக்கம் குறைவு
அதிக மதுவுடன் கூடிய பழக்கம்
சில மருந்துகள் (உதா: ஸ்டீராய்ட்கள், சில ஆன்டி-ஹைபர்டென்சிவ் மருந்துகள்)
பிற காரணிகள்: வேதியியல் மாற்றங்கள், மரபணு காரணிகள்
---
4. கொழுப்பு கல்லீரல் பிரிவுகள்
Simple fatty liver (Steatosis): கொழுப்பு சேர்வதற்கே மட்டுமே பாதிப்பு.
Non-alcoholic steatohepatitis (NASH): கொழுப்புடன் கல்லீரல் அழற்சி உண்டு.
Fibrosis: அழற்சியின் விளைவாக கல்லீரல் திசுக்கள் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பிக்கும்.
Cirrhosis: கல்லீரல் வேலை சரியாக செய்யாமல், கடுமையான தழுவல் மற்றும் செயலிழப்பு ஏற்படும்.
---
5. அறிகுறிகள்
ஆரம்பத்தில் பெரும்பாலும் எந்த அறிகுறியும் இல்லாது இருக்கலாம்.
சோர்வு, பலவீனம்
வயிற்று வலி அல்லது கனிவான உணர்வு (வலது மேல் பகுதி)
பசி குறைவு, குமட்டல், வாந்தி
பருத்தி, தோல் மஞ்சள் நிறம் (சிறிது முன்னேறியதும்)
தீவிர நிலைகளில், தொந்தரவு, மன குழப்பம், எளிதில் காயம் ஆகுதல்
---
6. கண்டறிதல்
இரத்த சோதனை: Liver enzymes (ALT, AST) அதிகரிக்கலாம்.
அல்ட்ராசவுண்ட் / CT / MRI: கல்லீரலில் கொழுப்பு இருப்பதை காண்பிக்கும்.
Liver biopsy: கடுமையான நிலைகள் மற்றும் உறுதி செய்ய தேவையானது.
---
7. சிகிச்சை மற்றும் பராமரிப்பு
உடல் எடை குறைத்தல்: மெதுவாக 5-10% எடை குறைப்பு கல்லீரல் கொழுப்பை குறைக்கும்.
ஆரோக்கிய உணவு பழக்கம்:
குறைந்த கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்
அதிகமான காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள்
சரியான புரத உணவு
தினசரி உடற்பயிற்சி: குறைந்தது 30 நிமிடங்கள், வாரத்திற்கு 5 நாட்கள்.
மதுவை தவிர்க்கவும்: Alcohol மட்டும் அல்லாமல், கல்லீரல் பாதிப்பை அதிகரிக்கும் எந்தவொரு உள்நாட்டு நச்சுத்தன்மைகளையும் தவிர்க்கவும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள்: சில நேரங்களில், இன்சுலின் எதிர்ப்பு, கொழுப்பு குறைக்கும் மருந்துகள்.
---
8. முன்னெச்சரிக்கை
உடல் எடையை கட்டுப்படுத்துதல்
சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகளை கட்டுப்படுத்துதல்
உடற்பயிற்சி
மாதாந்திர மருத்துவ பரிசோதனைகள்
---
9. பின்னடைவு
காலையில் புது சோம்பல், வயிற்று வலி போன்ற எளிய அறிகுறிகளையும் கவனித்து, மருத்துவரை அணுகுவது முக்கியம். ஆரம்பத்தில் கண்டுபிடித்து சரியான பராமரிப்பு செய்தால், கொழுப்பு கல்லீரல் முழுமையாக குணமாக வாய்ப்பு உண்டு.
மேலும், உங்கள் உடல் நிலை, வயது, மருத்துவ வரலாறு என்ன என்பதைப் பொறுத்து மருத்துவரை அணுகி சிறந்த ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
முடிந்தவரை அனைவருக்கும் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள் நன்றி 🙏
12/08/2025
ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்குதாம் பாஸ்..!
குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறனும் ஒரு காரணம்.
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் குத்தறிந்து செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
வாகனம் ஓட்டுதல்:
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம் பயணிக்கும் திசை வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால் பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புகளை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம் பெண்களின் பல பணிகளை செய்யும் மூளைத் திறன் ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையை கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும். ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால்தான் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
பேச்சு:
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்போது பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70 சதவீத மொழியையும் 20 சதவீத உடல் மொழியையும் 10 சதவீத வாய்மொழியையும் உணர்த்துகின்றனர். அதனால் ஆண்கள் மூளையால் பெண்கள் கூறுவது பொய் என்பதை உணர முடியாது.
தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்க ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும் இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால் பெண்களின் மூளை தனித்தனியே பிரித்தறியாது…யாராவது ஒருவரிடம் தமது மொத்த பிரச்சனைகளையும் சொல்லி விட்டால் பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக தூங்கிவிடுவார்கள். ஆண்களின் மூளையின் வேகம் பதிப்பு வெற்றி செயலாக்கம் என்ற வகையில் அமைந்திருக்கும். பெண்களின் மூளை குடும்பம்இ உறவுகள்இ நட்பு ரீதியாக அமைந்திருக்கும்.
மனம்:
வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்தாது. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்கள் மனம் உறவுகளில் கவனம் செலுத்தாது. பெண்கள் உரையாடும் பொழுது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
ஞாபக சக்தி:
ஆண்களால் எதையும் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள் திருமணநாள் இவற்றை அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஆனால் பெண்களால் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல வெளியில் உள்ள ஊறவினர்களின் முக்கிய தினங்களை கூட ஞாபகம் வைத்திருக்க முடியும்.
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆனால் ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள். ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணங்களை தெரிந்து நடந்தால் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கலாம். வாழ்வும் இன்பமயமாகும்.
10/08/2025
தினமும் 3 நிமிடம்
தோப்புக்கரணம் உடலை
வலுவாக்கும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும். நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காது
மடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்
இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்
போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்
கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.
வலது கை
விரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கை விரல்களால் வலது காது
மடல்களையும் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -
சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க
இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத்
தொடர்ந்து செய்தால் வேறு
எந்த உடற்பயிற்சியும் செய்ய
வேண்டியதில்லை.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Erode
641006