Nammabooks.com
Welcome to the Official page of - www.nammabooks.com. India's Favorite Online Book Store fo We love books and you! We are trying to connect you both.
தமிழ் அன்பர்களுக்கு நற்செய்தி!!!
இப்போது நினைத்த தமிழ் நூல்களை இணையத்திலே வாங்கலாம், இந்த வலைத்தளம் தமிழ் நூல் விற்பனைக்கென்றே ப்ரெத்யேகமாக உருவாக்கப்பட்டது. நல்ல தமிழ் நூல்கள், மொழி பெயர்ப்புகள், வரலாறு, தலைவர்கள், புதினங்கள் போன்ற வகை நூல்கள் உள்ளன.
மேலும், இந்த வலைதளத்திற்கு முகநூல் பகுதியும் உண்டு. நண்பர்கள் இந்த வலைதளத்தை தமிழ் நூல்கள் பல கற்க பயன்படுத்திக் கொள்ளவும்.
உலகளவிய சேவை !
ஆன்ல
03/01/2022
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது.
To get this book delivered to your place:
https://nammabooks.com/udayar-combo-pack
Quotes from Udayar:
“இதுதான் வாழ்க்கையின் சுழற்சி, இது எப்போது மீறப்பட்டாலும் பிரச்சினை வரும். பெண்களைத் தாங்குவது என்பது ஆண்களின் கடமை. தன்னைத் தாங்கும் ஆண்களுக்குப் பணிவிடை செய்து, அவனைக் காரியங்கள் செய்யச் செய்வது பெண்களின் கடன். இது இரண்டிற்கும் அடிப்படை அன்பு. பரஸ்பரம் மதிப்பு. இந்தச் சோழ தேசத்தில்”
“மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார் வள்ளலே. கள்ளமே பேசி குற்றமே செய்யினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைப்பலச் செய்தேன்”
02/01/2022
தமிழின் முக்கியமான பெண் எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது இந்த ஆண்டு கவிஞர் மு.முருகேஷுக்கு வழங்கப்படுகிறது.
நாட்டின் 24 மொழிகளில் இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பெண்ணியம் சார்ந்து படைப்புகளை எழுதி வருபவர்களில் முக்கியமானவர் அம்பை. தமிழில் இயங்கிவரும் எத்தனையோ பெண் படைப்பாளிகள் மத்தியில் சமரசமில்லாத பெண்ணியக் கோட்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது படைப்புகளின் மூலம் பெண்ணியம் சார்ந்த வலிமிகுந்த உணர்வுகளை கூர்மையோடும் அழகியலோடும் வெளிப்படுத்திய வகையில் அம்பையே முதல் இடத்திலும் முன்னோடியாகவும் நிற்கிறார். அவரது ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’, ‘காட்டில் ஒரு மான்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘சிறகுகள் முறியும்’ போன்ற படைப்புகள் வாழ்க்கையில் பெண்ணுக்கான இடத்தையும் வெளியில் சொல்ல இயலாத மன இயல்புகளையும் ஆழ்ந்த சிரத்தையோடு வெளிப்படுத்தியுள்ளன.
https://nammabooks.com/sivappu-kazhuththudan-oru-pachchai-paravai
02/01/2022
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக மு.முருகேஷூக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, ஹைக்சு, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக மு.முருகேஷ் எழுதி வருகிறார். 2010-ம் ஆண்டு முருகேஷ் எழுதிய குழந்தைகள் சிறுகதைகள் என்ற நூல் தமிழக அரசின் புத்தக பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது.
தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். --முனைவர் வே.வசந்திதேவி நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர்களுக்கு ஆதரவாக இத்தொகுப்பின் கதைகள் பல நிற்பது. என் ரசனைக்கு மிக நெருக்கமான விசயம். பலம் கொண்டவை, தந்திரம் நிறைந்தவை, வஞ்சகம் செய்பவைக்கு எதிராகச் சிறிய உயிர்கள் நடத்தும் போராட்டத்தைக் கதைகளில் வாசித்துக் களித்தேன். --பேராசிரியர் ச. மாடசாமி
To get this book delivered to your place:
https://nammabooks.com/ammavuku-magal-sona-ulagin-muthal-kadhai
19/12/2021
Like if you agree
15/03/2021
இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்லாத பணம் Sellatha panam,crea,imayam,sakthiya accaemdy award
14/03/2021
இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
To get this book delivered to you:
https://nammabooks.com/sellatha-panam-imayam
07/06/2020
108 வைஷ்ணவ திருத்தல மகிமை- இந்நூலில் ஒவ்வொரு தலமும் இருக்கும் இடம், மூலவர் - தாயார் விவரங்கள், ஆழ்வார்களின் மங்களாசாசன விவரங்கள்,
எவர் எவருக்கு மூலவர் பிரதிட்சயம் ஆனார் என்ற விவரங்கள், தலபுராணம், தலபுஷ்கரணி, தல விமான அமைப்பு, போக்குவரத்து வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.
இந்நூலின் மூலமாய் நூற்றி எட்டு வைஷ்ணவத் தலங்களை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிய முடிவதோடு மனதுள் அத்தலத்திற்கே சென்று எம்பெருமானை சேவித்திடும் உணர்வினையும் பெற்றிடுவோம்.- To get this book online- https://nammabooks.com/108
07/06/2020
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்- புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தனி நபர் பெயரா? அது ஒரு குடும்பப் பெயரா? அல்லது பட்டமா? என்ற ஐயப்பாடும் உள்ளது
மேலும் மன்வந்தரங்கள் பலவற்றில், 28-ஆவது மன்மந்தரத்தில் வாழ்ந்தவரே இந்த வியாசர், இவருடைய இயற்பெயர் கிருஷ்ண துவைபாயனர் என்றும், வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் தேவதவியாசர், அல்லது வியாசவேதர் என்ற பெயர் அவருக்குண்டு என்பதும் அறியலாகிறது.
ஒவ்வொரு மன்வந்தரத்தில் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் ஒரு புராணப்பட்டியல் காட்டுகிறது- To get this book online-https://nammabooks.com/ashtaa-dhasa-puranamenum-pathien-puranam
26/02/2020
Get your favorite books delivered to your door step.
Check out new arrivals: www.nammabooks.com
09/01/2020
ஒற்றன் - அசோகமித்திரன் ❤️
இந்த தலைப்பை பார்த்த பின் இது எதோ துப்பறியும் நாவல் போல பிம்பம் இருந்தது. ஒரு பக்கம் சங்கடமாகவும் இருந்தது. ஏன் என்றால் அசோகமித்திரன் இது போல நாவல்களை எழுதி இருக்கிறாரே, அவர் இந்த வகை இல்லயே என்று.
ஆனால் ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது, இது முழுக்க, முழுக்க வேறு விதமான நாவல் என்று. அசோகமித்திரன் அமெரிக்காவில் உலக அளவில் நடக்கும் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு செல்கிறார். அங்கு இவரை போல அவர் அவர் நாட்டில் பிரபலமான சிறந்த எழுத்தாளர்கள் வருகிறார்கள்.
அதில் இவருக்கு கிடைத்த அனுபவம் என்ன, இவர் சந்தித்தது, சோதனைக்கு ஆள் ஆனது, சந்தோஷம், ஏக்கம், சிரிப்பு என பகிர்ந்து கொள்கிறார்.
இதில் முக்கியமாக காணப்படும் விசியம் என்னவென்றால், உலக இலக்கியவாதிகள் கூடும் விசயத்தை சொல்கிறார்., ஆனால் அவர்களின் மேதமையையோ அல்லது தன்னுடைய Intellectual தனத்தையோ எழுதாமல், அந்த எழுத்தாளர்களிடம் இருக்கும் சிறு பிள்ளைத்தனம், அசடு, அறியாமையை எழுதுகிறார்.
இதை கட்டுரை போல் இல்லாமல், கதை போல எழுதுகிறார்.
அசோகமித்திரன் எழுதியதில் மூன்று புத்தகம் படித்து விட்டேன். மூன்றும் எந்த வகையிலும் உலகத்தரம் குறைந்தவை அல்ல.
https://nammabooks.com/ottran-ashokamitran
13/12/2019
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ் பெற்றதாகும்.மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்கள் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்துவந்திருக்கிறது. https://nammabooks.com/index.php?route=product/product&product_id=14014
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Coimbatore
642001
07/08/2021