Dr.M.Wasim Raja
Social Worker, Natural Lover, Farmers Supporter
27/08/2026
27/08/2026
😳 ஒரே வீடு... ஆனா ரெண்டு மாநிலம்!
யோசிச்சு பாருங்க, சமைக்கிறது தெலுங்கானாவில், சாப்பிட்டு முடிச்சு படுக்க போறது மகாராஷ்டிராவில். கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல?
சந்திராபூர் பக்கத்துல இருக்கிற மகாராஜ்குடா கிராமத்தில் பவார் குடும்பத்தோட வீடு தான் இப்படி அமைஞ்சிருக்கு.
1969-ல் நடந்த எல்லை அளவீட்டில் அவங்க வீடு சரியா ரெண்டா பிரிஞ்சிருச்சு. வீட்டுல இருக்கிற 8 ரூம்ல, 4 ரூம் மகாராஷ்டிராவிலும், மீதி 4 ரூம் தெலுங்கானாவிலும் விழுந்துடுச்சு.
இதுல என்ன ஸ்பெஷல்னா, அவங்க சமையலறை தெலுங்கானா பக்கம் இருக்கு, ஆனா ஹாலும் படுக்கையறைகளும் மகாராஷ்டிரா பக்கம் இருக்கு.
அதனால இந்த குடும்பம் ரெண்டு மாநிலத்துக்கும் வரி கட்டிட்டு வராங்க, அதே சமயம் ரெண்டு மாநில அரசுகளோட திட்டங்களின் பலனையும் அனுபவிச்சிட்டு வராங்க. இப்படி ஒரு அதிசய வீடு இந்தியாவில இருக்கிறது உண்மையிலேயே ஆச்சரியம் தான்!
நீங்க இப்படி ஒரு வீட்ல இருந்தா எப்படி இருக்கும்?...
26/08/2026
1980க்கு முன்பு 300 வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் 50 வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும்.
மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.
இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.
ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .
அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும்.
வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.
இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.
அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.
1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும்.
ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.
சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.
சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.
அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.
இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.
எப்படி ஆயினும்.... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன...
26/08/2026
அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
26/08/2026
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்...
25/08/2026
படித்ததில் பிடித்தது ஒரு முயற்சி செய்து பார்ப்போம்...
முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள்...
24/08/2026
இந்த மூலிகை பெயர் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நன்றி...
23/08/2026
V S செங்கோட்டைய்யா நினைவு உயர்நிலைப் பள்ளியில் கால்பந்தாட்ட வெற்றி வீரர்களுக்கு இ எம் மஜீத் நினைவு கோப்பையை பரிசாக வழங்கிய மகிழ்ச்சியான தருணம் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையும் பணப்பரிசும் வழங்கப்பட்டது...
23/08/2026
V S செங்கோட்டையா நினைவு பள்ளியில் கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியை துவக்கி வைத்த மகிழ்ச்சியான தருணம்...
14/08/2026
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
இந்தியாவில் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்...
மீண்டு வருவோம்...
மீண்டும் வருவோம்...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chettipalayam
Coimbatore
641201
Opening Hours
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 5pm |