QubePix Health Tips
Daily Health Tips
04/06/2020
Lemon drinks for weight loss | Fat burning drink | Boost immune system
Lemon drinks for weight loss | Fat burning drink | Boost immune system INGREDIENTS: Day - 1 - Lemon - Chia seeds - Salt - Honey Day - 2 - Lemon - Salt - Mint leaves - Cucumber Day - 3 - Lemon - Salt - Mint leaves - Ginger Day - ...
13/02/2020
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க நம் முன்னோர்கள் சாப்பிட்டது இந்த நாட்டு உணவுகளை தான்...
உயர் நார்ச்சத்து உள்ள உணவுகள் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுவதால் நீரழிவு நோயாளிகள் இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்கும் சில உணவு பற்றிய குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
முள்ளங்கி :-
முள்ளங்கியில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளி என்றால் முள்ளங்கி கொண்டு சாலட், பரோட்டா , சாம்பார் போன்றவற்றை உட்கொள்ளலாம். முள்ளங்கியில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு மற்றும் சில காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து சாலட் போல் உண்பதால் அதன் நன்மைகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கின்றன.
பாகற்காய்:-
பாகற்காய் கசப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கசப்பாக இருக்கும் மருந்து விரைவில் உடலை குணப்படுத்துவது போல் பாகற்காயும் உடலுக்கு நன்மை அளிக்கிறது. பலருக்கும் அதன் கசப்பு தன்மை காரணமாக பாகற்காயை பிடிக்காமல் இருந்தாலும், எடை இழப்பில் சிறந்த முறையில் உதவும் பாகற்காய், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாலிபெப்டைடு - பி அல்லது பி-இன்சுலின் என்னும் கூறு பாகற்காயில் உள்ளது. இதனால் நீரிழிவு கட்டுப்படுகிறது.
கேழ்வரகு :-
கோதுமையில் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது . அதனால் நீரிழிவு நோயாளிகள் அதன் அளவைக் குறைப்பது நல்லது. கோதுமைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகைப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ராகி என்று அறியப்படும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் இதன் ஊட்டச்சத்து மிக அதிகம். நீரிழிவு நோயாளிகள் ராகி தோசை அல்லது ராகி பரோட்டா செய்து சாப்பிடலாம்.
நெளிகோதுமை (Buckwheat):-
விரத காலத்து உணவாக அறியப்படுவது இந்த நெளிகோதுமை. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய உணவாக இது கருதப்படுகிறது. குறைந்த க்ளைசீமிக் குறியீடு கொண்ட இந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.
29/11/2019
Instant healthmix - உடல் எடையை அதிகரிக்க இந்த Health Mix சாப்பிடுங்க ....
http://bit.ly/2QYCWUF
29/11/2019
How to make instant coconut milk - தேங்காய் பால் செய்வது எப்படி ??
http://bit.ly/2rpzAiA
14/02/2018
உடல் சோர்வை போக்கும் வேப்பம்பூ:-
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும், அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக, மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.
சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து, காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும்.
கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன வெயிலால் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.
கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `
அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.
காய்ந்த வேப்பம்பூ , உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும்.
வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
13/02/2018
கருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை:-
மாதவிலக்கு கோளாறால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கருமுட்டை சிதைவு, கருப்பை சுவர்களில் நீர்க்கட்டி போன்ற காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அத்தகைய நிலையை தவிர்க்கவும், சீரான மாதவிலக்கை தூண்டவும் பக்கவிளைவில்லாத இயற்கை மூலிகைகளை கொண்டு தீர்வு காண்பது பற்றி பார்க்கலாம்.
பெண்மைக்குரிய முக்கிய ஹார்மோன் சுரப்பியாக ஈஸ்ட்ரோஜன் இருந்து வருகிறது. இந்த ஹார்மோனின் குறைபாட்டினால் கருப்பையில் கட்டிகள், மாதவிலக்கு கோளாறு, குழந்தை இன்மை, மாதவிலக்கின் போது இடுப்பு வலி, உபாதைகள், அடிவயிற்று வலி ஏற்படுகிறது. ஆண்களின் சுரப்பியான ஆன்ட்ரோஜன் அதிகப்படியாக உடலில் சுரக்கப்படுவதால் தேவையற்ற இடங்களில் முடி வளர்தல், தலை முடி மென்மையாதல், உடல் சோர்வு போன்ற நிலை ஏற்படுகிறது. இதனுடன் நச்சுகளும் உடலில் சேர்ந்து கொண்டு உடல் பருமனடைய செய்கிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு சதக்குப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம், கொள்ளு, இலந்தை இலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்கலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் உடல்பருமனை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் பொடி, பனைவெல்லம்.பாத்திரத்தில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் சதக்குப்பை, கால் ஸ்பூன் மரமஞ்சள் பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் ஆகியன நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்ற மூலிகைகள். இவை கலந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர கருப்பை நீர் கட்டிகள் கரைந்து வெளியேறும். மேலும் இது ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் மாதவிடாய் கோளாறால் உடலில் தேங்கும் சிதைந்த கருமுட்டை உள்ளிட்டவற்றை வெளித்தள்ளுகிறது. மேற்கண்ட பானத்தை வழக்கமான மாதவிடாய் காலத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் எடுத்து வருவதால் வலியற்ற, முறையான மாதவிடாய் ஏற்படும்.
கெட்ட கொழுப்புகளை அகற்றும் கொள்ளு கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கொள்ளு-50 கிராம், பார்லி அரிசி-50 கிராம், மிளகு- 10 கிராம், உப்பு.பார்லி அரிசி, கொள்ளு, மிளகு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் 2 ஸ்பூன் பொடித்த கலவையுடன், உப்பு மற்றும் நீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிடவும். இந்த கஞ்சியை 3 மாதம் குடித்து வர சீரான மாதவிடாய் ஏற்படும். உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கும்.
கருப்பை வீக்கத்தை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: இலந்தை இலை, பூண்டு, மிளகு. இலந்தை இலையை கையளவு எடுத்து பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன் சிதைத்த பூண்டு, மிளகு சேர்த்து கொதிக்கவிடவும். இந்த பானத்தை ஓரிரு வேளை அன்றாடம் குடித்து வரும்போது, வீக்கம் குறைவதோடு, கருப்பை பலம் பெறும். இலந்தை இலையில் மாவு சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவை கொண்டுள்ள இலந்தை இலையில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது.
இந்த இலை உடலின் ஜீரணசக்தியை அதிகரித்து பசியை தூண்ட செய்யும் தன்மையுடையது. முதுகுவலி, இருதய நோயால் அவதிப்படும்நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். குறிப்பாக பெண்களின் பிரச்னையான கருப்பை வீக்கத்தை சரிசெய்கிறது.
இலந்தை வேர்பட்டை-40 கிராம், மாதுளம் பட்டை-40 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் நன்கு கொதிக்கவிடவும். இந்த நீர் 125 மி.லிட்டராக குறையும் போது இறக்கி வடிகட்டி கொள்ளவும். இதனை தினமும் 4 வேளை அருந்துவதால் மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.கருப்பை வீக்கத்தை போக்கும் இலந்தை
19/10/2017
இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்புகளை போக்கும் சுரைக்காய்!!!
நமது கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் காணப்படும் ஒரு தொன்மையான காய் வகை, சுரைக்காய். கொடிகளில் படரும் தன்மையுள்ள சுரைக்காயின் இலை, பிஞ்சு, காய் மற்றும் பழங்கள் மனிதர்க்கு நன்மையளிப்பவை. வீடுகளின் கூரைகளில், வேலிகளின் மேல், அல்லது தரையில் எங்கும் பரவி வளர்பவை, சுரைக்காய்.
சுரைக்காய் பெரிய நீர்க்குடுவை போன்ற வடிவத்தில் இருப்பதால், நன்கு முற்றிய சுரைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதிகளை நீக்கி, அவற்றை வெயிலில் காய வைத்து, அக்காலங்களில் நீரை சேமிக்க, மற்றும் வைத்தியர்களின் மருந்துகளை சேகரித்து வைக்க, வெளியூருக்கு எடுத்துச்செல்ல, பயன்படுத்தி வந்தனர். இந்த சுரைக்காய் குடுவை பொருளை சேமிக்க மட்டுமல்லாமல், பொருள்களை நீண்ட காலம் கெடாமல், பாதுகாக்கும் தன்மையும் மிக்கது.
கிராமங்களில் நாட்டுக்காய்கள் என்று சில காய்கறிகளை, குறிப்பிடுவார்கள், அதில் சற்று விலையில் குறைந்தது இந்த சுரைக்காய், ஆயினும் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது. கிராமங்களில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சிறுவர்கள் அல்லது அந்த பேச்சுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அவர்களிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்கும்போது, "சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சொன்னேன்" என்று குறும்பாக, பதில் சொல்வார்கள்.
எங்கள் பேச்சில் நீங்கள் குறுக்கிடவேண்டாம், மேலும், எங்களுக்கு, உங்களை பேச்சில் சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லை என்பது, இதற்கு பொருள். அதை உணர்ந்து அவர்களும், விலகிச் சென்று விடுவர்.
புரோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தாதுக்கள் அதிகம் உள்ள சுரைக்காய்களில், மிக அதிக அளவில் நீர்ச்சத்தும் உள்ளதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகிறது. உடல் சூட்டை தடுத்து, உடலை கோடைக்கால வெப்ப வியாதிகளில் இருந்து காக்கிறது
சுரைக்காய் உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து, செரிமான பாதிப்புகளை நீக்கி, எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியை அளிக்கிறது.
சிலருக்கு, முகத்தில் எண்ணை வழியும் சருமமாக இருக்கும், இதனால் அவர்களின் முகம் எப்போதும், ஒரு வாடிய தன்மையில் காணப்படும், இந்த நிலையை மாற்றி, அவர்களின் முகத்தை பொலிவுடன் திகழ வைக்க, சுரைக்காய் சாறெடுத்து சிறிது இந்துப்பு கலந்து அதை பருகிவர, முகத்தில் எண்ணை வடிவது நிற்கும்.
பொதுவாக அதிக குளிர்ச்சித் தன்மை மிக்க சுரைக்காய் போன்ற காய்கறிகளை குளிர் காலத்தில் சாப்பிடும்போது, அதில் இந்துப்பு, சுக்கு, மிளகு, மல்லித்தூள் இவற்றை கலந்து, காய்கறி கலவை போல, சாப்பிடுவதன் மூலம், குளிர்ச்சியான பொருளை உட்கொண்டதால் ஏற்படும் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம். மேலும், நன்கு பசியெடுக்கும்.
இந்த சுரைக்காய் சாறே, அதிக உடல் எடையை குறைக்கும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடி கருமையாக வளர்வதை, ஊக்கப்படுத்தும்.
சுரைக்காய் சாற்றில் சிறிது நல்லெண்ணை கலந்து பருகி வர, இரவில் உறக்கமின்மை வியாதி நீங்கி, நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
பெண்களின், இரத்த சோகை வியாதியை போக்கி, இரத்தத்தை சுத்திகரிக்கும் அருமருந்தாக, சுரைக்காய் ஜூஸ் விளங்குகிறது.
சுரைக்காய் தேன் கலந்த ஜுஸ், உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சமமாக்கி, உடலின் சீரான இயக்கத்திற்கு, வழி செய்கிறது.
உடலில் வெளியேறாமல் தேங்கும் சிறுநீரை வெளியேற்றி, சிறுநீரக நச்சுத் தொற்றுகள், கற்கள் மற்றும் சிறுநீரகத்தை தூய்மை செய்து, சிறுநீரகத்தை காக்கிறது.
சுரைக்காய் ஜூஸ் கல்லீரல் நோயை சரியாக்கும் ஆற்றல்மிக்கது, வயிற்றில் புண்களை ஏற்படாமல் காக்கும் தன்மை மிக்கது, மேலும், மன அழுத்தத்தை குறைத்து, மன இறுக்கத்தை சரியாக்குகிறது.
நலன்கள் பல நமக்கு தந்தாலும், சுரைக்காயை ஒருபோதும், பச்சையாக சாப்பிடக்கூடாது, பெரிய வயிறு உள்ளவர்கள், குரலை காக்க வேண்டிய பாடகர்கள் யாவரும், சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டும், அது போல, பெண்களின் மாத விலக்கின் போது சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டுமென, வைத்திய சாத்திரங்கள் சொல்கின்றன.
18/10/2017
உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்கும் மூலிகைகள்!
நீங்கள் உங்களது முழு உள் உடலை எப்போது கடைசியாக சுத்தம் செய்தீர்கள் என்று நியாபகம் இருக்கிறதா? நமது வெளி உடலை எப்படி தினமும் குளித்து செய்யாவிட்டால் அதிகப்படியான அழுக்கு சேர்ந்து உடல் நலம் பாதிக்கப்படுமோ அதை விட அதிகமாக உள் உடல் பாதிக்கப்படும். எனவே நமது முழு உடலையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இல்லை என்றால் உடலின் உட்பகுதியில் அங்காங்கே நச்சுக்கள் சேர்ந்துவிடும்.
உடலில் அதிகமாக நச்சுக்கள் சேர்ந்துவிடுவதால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இந்த நச்சுக்களை நீக்க மூலிகைகளே மிகச்சிறந்த தீர்வாகும். இது நச்சுக்களை நீக்க உங்களது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
கொத்தமல்லி - கொத்தமல்லியில் ஆன்டி மைக்ரோபையல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கும் திறன் ஆகியவை அடங்கியுள்ளன. இது வயற்று கோளாறுகளை சரி செய்கின்றன. அதுமட்டுமின்றி இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை நீங்கள் ஜூஸ் செய்தும் பருகலாம்.
திரிபலா - திரிபலா ஒரு ஆயுர்வேத மருந்தாகும். கடுக்காய், தான்றி, நெல்லிக்காய் ஆகிய மூலிகைகளை ஒன்றாக சேர்ந்து அரைப்பதால் கிடைப்பதாகும். தினமும் இரவில் அரை டீஸ்பூன் திரிபலா சூரணத்தை அரை கப் சூடான நீரில் கொதிக்க 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பருகலாம்
மில்க் த்ரிஸ்டில் - இது ஒரு ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதன் விதைகளை உணவுக்கு முன்னர் வேறும் வயிற்றில் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். இது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் அகற்றும் தன்மை கொண்டது.
வேம்பு - வேம்பு இலை மிகவும் கசப்பானதாக தான் இருக்கும். ஆனால் இதில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் உள்ளன. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. தினமும் வேம்பின் இலைகளை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் அழியும். இது வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா என அனைத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டது.
புதினா - புதினாவில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. புதினா டீ வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இது குடல் எரிச்சலை போக்கும் தன்மை உடையது. இது வயிற்றை குளுமைப்படுத்துகிறது. தோல் அரிப்பு, பற்களை வெண்மையாக்குதல், வாய்துர்நாற்றம் போக்குதல், இரத்தம் செய்தல், உடலில் உள்ள நஞ்சுகளை போக்கவும் உதவுகிறது.
17/10/2017
பல நோய்களுக்கு மருந்தாகும் நாம் மறந்து விட்ட இலந்தைப்பழம்!!!
இலந்தை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதில் மாவுப்பொருள், புரதம் , தாது உப்புக்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. இலந்தை பழத்தில் மட்டுமல்லாமல், இலந்தை இலையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புகள் மிக்க இலந்தையின் மருத்துவ குணங்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
எலும்புகள் வலு பெற - உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும்.
பித்தம் குறைய - பித்தம் அதிகரித்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல் என பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பித்தத்தை குறைக்க இலந்தைப்பழம் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.
வாந்தி, தலைசுற்றல் - நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
உடல்வலி - சிறிய வேலை செய்தால் கூட உடல் ரொம்ப வலியாக இருக்கிறதா? இந்த உடல் வலியை போக்கி உடலை வலுவாக வைத்துக்கொள்ள இலந்தை பழம் சாப்பிடுவது சிறந்த மருந்தாக அமையும்.
பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனை - பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இலந்தை உள்ளது. இலந்தையின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.
மாதவிலக்கு கால பிரச்சனை - மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை குறைக்கவும், உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.
புத்திகூர்மைக்கு - மந்த புத்தி உள்ளவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை புத்துணர்சி பெறும். இதனை பகல் உணவிற்கு பின்னர் சாப்பிட வேண்டும். மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன
16/10/2017
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காயின் நன்மைகள்!!!
கோவைக்காய் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இதை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்க்கிறார்கள்? வாரம் ஒருமுறையாவது இறைச்சி சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை, ஈர்ப்பு, வெறி இருக்கும் நம்மிடம், அதே அளவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லையே, ஏன்?
கோவைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் என தெரியாது... ஆனால், இதில் இத்தனை நன்மைகள் இருக்கிறது என தெரிந்தால் நீங்களும் இதை விரும்பி சாப்பிடுவீர்கள். சாம்பார், பொரியல் எப்படி வேண்டுமானாலும் இதை சமைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை வெறுமென கழுவி மென்று வந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
கல்லீரல் பலம்! - மிக எளிதாக, விலை குறைவாக கிடைக்க கூடியது கோவை காய். இது கல்லீரலின் பலத்தை அதிகரிக்கும். நீரிழிவு நோய்க்கு உகந்த மருந்தாகவும் செயற்படுகிறது.
நோய் எதிர்ப்பு! - கோவைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இது சரும நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. சரும அரிப்பு, சரும எரிச்சல் போன்றவைக்கு கைவந்த மருந்து கோவைக்காய். மேலும், இது சளியை குறைக்கவும் உதவும்.
கோவை செடி இலைகளை எடுத்து சரும பிரச்சனைகளுக்கு மருந்து உருவாக்கலாம். ஐந்து கோவை இலைகளை எடுத்து சுத்தம் செய்து, நீரில் கொதிக்க வைத்த நீரை அதில் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பிறகு, இலைகளை வடிக்கட்டி நீரை குடித்து வந்தால் சரும தடிப்புகள், அரிப்பு போன்றவை குணமாகும்.
கோவைக்காய், இலைகள் மட்டுமின்றி, கோவைக்காய் செடி தண்டும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. இதன் இலைகளை எடுத்து, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அந்த பசையை தைலம் போல காய்ச்சிக்கொள்ளவும். இந்த தைலத்தை சொறி, சிரங்கு, படை போன்ற சரும கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
வாய் புண்! - இதன் இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து மென்று சாப்பிட்டு வந்தால் வாய் புண், வயிற்று புண், குடல் புண் போன்றவை சரியாகும். உதட்டு வெடிப்புகளும் குணமாகும். மேலும், இந்த கோவைக்காய் நுரையீரல் தொற்று, நெஞ்சு சளி போன்றவற்றையும் போக்கும் குணம் கொண்டுள்ளது.
15/10/2017
லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் ஆச்சரியப்படுத்தும் பலன்கள்
அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பால், தயிர்,மோர் போன்றவற்றினால் மட்டுமல்ல தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதாலும் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். உடனடியாக புத்துணர்சி அளிப்பதால் பலரும் லஸ்ஸியை விரும்பி குடிக்கிறார்கள்.
இதைத் தவிர லஸ்ஸி பல மருத்துவ பயன்களையும் தருகிறது. தயிருடன் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். சிலர் இதில் தேன், ஏலக்காய் உட்பட பல பொருட்களை மிக்ஸ் செய்தும் குடிக்கிறார்கள்.
பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.
மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.
லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 குறைபாட்டு நோய் நீங்கும்.
லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு. கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
14/10/2017
புற்று நோயை தடுக்கும் பூசணி விதைகள்!!
அறிவியலின் வளர்ச்சியால் நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கேள்விப்படுகிறோம். மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் பங்கு இன்றியமையாதது. பல நோய்க்கு , அதன் அறிகுறிகள், அதற்கான மருந்துகள் போன்றவற்றை கண்டுபிடிக்க ஆரய்ச்சிகள் பெருமளவில் உதவுகின்றன.
இப்படி சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு குழுவினர் நடத்திய ஆய்வில், ஜிங்க் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் உடலில் புற்று நோய் உருவாக்கும் அணுக்களின் வளர்ச்சி தடைபடுவதாக கூறப்படுகிறது. இதனை பற்றிய விளக்கம் தான் இந்த தொகுப்பு.
யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் நடத்திய ஒரு ஆய்வில், ஜிங்க் மாத்திரைகள் உணவு குழாய் புற்று நோய் பெருக்கத்தை கணிசமாக குறைப்பதாக கூறப்படுகிறது..
ஜிங்க் மாத்திரைகள் புற்று நோய் அணுக்களில் இருக்கும் தேவைக்கு அதிகமான கால்சியம் சிக்னல்களை தடுக்கிறது. இவை சாதாரண அணுக்களில் நடப்பதில்லை . இதன்மூலம், புற்று நோய் செல்களை ஜிங்க் குறிப்பாக தடுப்பதை நம்மால் கணிக்க முடிகிறது.
உணவு குழாயின் மேற்புற அணுக்களுக்கு இந்த மாத்திரையால் எந்த ஓரு விளைவும் ஏற்படுவதில்லை. புற்று நோயை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சி மட்டுமே கட்டுப்படுகிறது, என்று இந்த குழுவின் தலைவர் ஸுய் பான் கூறுகிறார். உணவுக்குழாய் புற்றுநோயின் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு இந்த கண்டுபிடிப்பு நல்ல ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஜிங்க் சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. பல மருத்துவ ஆய்வுகளும் , குறிப்புகளும் ஜிங்க் சத்தின் தேவை ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது என்று கூறுகின்றன. புரதம் மற்றும் என்சைம்களில் ஜிங்க் ஒரு முக்கிய சத்தாக உணரப்படுகிறது. இதன் குறைபாடு , அணுக்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்று ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது.
ஜிங்க் குறைபாடு, புற்று நோயை உண்டாக்கும் அல்லது வேறு பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு என்பது ஒரு அச்சமூட்டும் செய்து தான். கீரை, ஆளி விதைகள், மாட்டிறைச்சி, பூசணி விதைகள் , இறால் , கடல் சிப்பி போன்றவற்றில் ஜிங்க் அதிகம் உள்ளது. இவற்றை நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
கால்சியம் மற்றும் ஜிங்க் ஆகிய இரண்டுக்கும் ஒரு வித இணைப்பு உள்ளது. அவை நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திகின்றனவா என்பதை பற்றிய ஆராய்ச்சியில் விரைவில் நல்ல தகவல்கள் நம்மை வந்து சேரும். இந்த இணைப்பின் தகவல் மூலம் நமக்கு பல நோய்களின் தடுப்பு மற்றும் சிகிச்சைகளின் வழிமுறைகள் எளிதாக கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Coimbatore
Coimbatore
641024