SVP
12/11/2018
இன்று பிறந்தநாள் காணும் இந்துக்களின் போர்ப்படை தளபதி...
ஸ்ரீவிவேகானந்தர்பேரவை & ராஷ்ட்ரீயஹிந்து பரிசத்தின் ஸ்தாபகர்...
எங்களின் உயிரினும் மேலான தலைவரே...
சிவதிரு GR.ஐலேந்த்ரன்ஜி
அவர்களை இன்று காலை இளைஞர் அணி சார்பாக சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டோம்...
===========================
ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத்
கோவை மாவட்ட இளைஞரணி
===========================
11/11/2018
இன்று பிறந்தநாள் காணும் இந்துக்களின் போர்ப்படை தளபதி...
இந்துக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே ஒடி வந்து குரல் கொடுக்கும் மக்களின் தலைவரே...
14 வயதில் இருந்து இந்து சமுதாயத்திற்காகவும், இந்துக்களுக்காகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தி...
ஹிந்து ராஷ்ட்ரீயம் அமைத்தே விடவேண்டும் என்ற சிந்தனையோடு, மக்களுக்காக பிறந்து அனைத்து உள்ளத்திலும், என்னத்திலும் குடியிருக்கும் எங்களின் உற்றவரே...
ஸ்ரீவிவேகானந்தர்பேரவை & ராஷ்ட்ரீயஹிந்து பரிசத்தின் ஸ்தாபகர்...
எங்களின் உயிரினும் மேலான தலைவரே...
சிவதிரு GR.ஐலேந்த்ரன்ஜி
அவர்களை வாழ்க பல்லாண்டு வாழிய பல்லாண்டு என வாழ்த்தும்
===========================
ராஷ்ட்ரிய ஹிந்து பரிஷத்
கோவை மாவட்ட இளைஞரணி
===========================
11/11/2018
24/02/2018
அருள்மிகு ஸ்ரீகோனியம்மன் தேர்திருவிழாவை முன்னிட்டு
ஸ்ரீகோனியம்மன் கோவிலில் நேற்று நடந்த வாழ்வியல் சிந்தனை பட்டிமன்றம் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து
கொள்ள வருகை தந்த
ரூட்ஸ் நிருவனங்களின்
இயக்குனரும்
சச்சிதானந்த
ஜோதி நிகேதன்
பன்பாட்டு பள்ளியின்
செயலாளர் ஆகிய
சிந்தனை கவிஞர் டாக்டர்.கவிதாசன் அய்யா அவர்களுக்கு
#பேரூர்தமிழ்சங்கத்தின்
தலைவர் திரு.ராஜ்மோகன் அவர்களும்
#ஸ்ரீவிவேகானந்தர்பேரவை மற்றும்
#ராஷ்ட்ரீயஹிந்துபரிசத்தின்
ஸ்தாபகரும்
#பேரூர்தமிழ்சங்கத்தின்
செயலாளர் ஆகிய
சிவதிரு.ஜலேந்த்ரன் அவர்களும்
#ராஷ்ட்ரீயஹிந்துபரிசத்தின் சார்பில்
கோவைமாவட்ட தலைவர்
ஆகிய நானும்
#ராஷ்ட்ரீயஹிந்துபரிசத்தின்
கோவை மாவட்ட மாணவர் அணி தலைவர் திரு.தியாகு அவர்களும் பொன்னாடை போர்த்தி
வாழ்த்துக்களை தெரிவித்தோம்
31/01/2018
சிலம்பம்.....
Class contact no: 9791677237 Guru
31/01/2018
கோட்டை மேடு சங்கமேஸ்வரர் கோவில் தைபூசம் தேரோட்டம் நடைபெற்றது!
கோவை கோட்டை ஶ்ரீசங்கமேஸ்வரா் திருக்கோவில் ஶ்ரீசண்முக சுப்ரமணியா் தைபூச தேர் திருவிழா
27/01/2018
நாட்டு மாடு இனங்களை பாதுகாப்போம்
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி அவ்வை நகரில் ஓம்கார் பவுண்டேசன் அமைப்பின் சார்பில் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க 27.1.2018 இன்று காலை 8மணியளவில் "கோ சாலை திறப்பு இனிது நடைப்பெற்றது அதில் அவ்வைநகர் பொது மக்களும் இளைஞர்கள் மற்றும் SVP&RHP அமைப்பு நிர்வாகிகளும் கலந்து விழாவை சிறப்பித்தனர் மேலும் கோ சாலையில் நாட்டு மாடு இனங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டுமெனவும் கலப்பின ஜெர்சிமாடு வகைகளை வளர்க்க வேண்டாம் எனவும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோ சாலை நிர்வாகிகளிடம் கோரிக்கை செய்யப்பட்டது கோ சாலை நிர்வாகிகளும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்தனர் மற்றும் நாளை நடைபெறும் கோவை ஜல்லிக்கட்டு விழாவில் அதிக அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பதாக அவ்வைநகர் பொதுமக்கள் தெரிவித்தனர்
அனைவரும் வருக
நன்றி
Jeeyar fasting.........enters 2nd day
12/01/2018
சுவாமி விவேகானந்தர் பிறந்ததினம் மற்றும் இளைஞர் தினம் சிறப்பு கட்டுரை...
என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்.?.
1. இன்றைய இந்துமதம் சுவாமி விவேகானந்தரின் படைப்பு. துண்டு துண்டாக பிரிந்தும் முரண்பட்டும் கிடந்த பல்வேறு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து இன்றைய இந்து மதத்தை அவர் தந்துள்ளார். பண்டைய சாஸ்திரங்களையும் கருத்துக்களையும் இன்றைய சிந்தனைப் போக்கில் அவர் நமக்கு வார்த்து அளித்தார்...
2. துறவியரை சமுதய சேவையில் ஈடுபடச்செய்து இந்துத்துறவு நெறிக்கு ஒரு புதிய, நவீன பரிமாணத்தை அளித்தார்...
3. முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு சுவாமி விவேகானந்தருக்கு உண்டு. ஏழைகளுக்காக அழுத முதல் தீர்க்கதரிசி அவர். ஏழைகளுக்காக பேசிய முதல் இறையுணர்வாளர் அவர். நாடு குடிசையில் வாழ்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் அந்தோ அவர்களுக்காக யாரும் எதையும் எப்போதும் செய்ததில்லை என்று கூறினார். இந்த மணி, சாமரம் போன்ற (கோவில் வழிபாடுகளை) எல்லாவற்றையும் கங்கையில் எறிந்துவிட்டு, வாழும் கடவுளை, மனித உருவில் காண்கின்ற கடவுளை வழிபடுங்கள். மனித உருவிலுள்ள ஒவ்வொருவரும் எங்கும் நிறைந்த அதே இறைவனே, அவர்களை வழிபடுங்கள் என்றார்...
4. இந்தியாவை முன்னேற்ற சமுதாய சீர்திருத்தம் தான் ஒரே வழி என்று நினைத்திருந்த காலத்தில், இந்தியாவின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் உயர்சாதி மக்கள், தாழ்ந்த சாதி மக்களை புறக்கணித்ததே காரணம் என்று முழங்கிய முதல் மனிதர் அவர்...
5. இந்தியா முழுவதும் யாத்திரை சென்றதன் விளைவாக ஏழைகளை முன்னேற்றுவதற்கு, அவர்களை விழிப்புறச்செய்வதற்கு பரந்த கல்வித்திட்டத்தை வகுத்தார். அதற்காக பணம் பெற வெளிநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். (ஆனால் அவரது காலத்தில் இது நடக்கவில்லை, வெளிநாட்டினர் இந்திய ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை)...
6. ராமகிருஷ்ணமிஷன் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம், ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்தார்...
7. மக்களுக்கு செய்யும் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு என்ற சேவை தர்மத்தை உருவாக்கினார். மக்களுக்கு தொண்டாற்றுவதன் மூலம் இறைநிலையை அடைய முடியும் என்று போதித்தார்...
8. கடல் கடந்து சென்று இந்து மதத்தை பரப்ப கூடாது என்ற விதியை உடைத்து, இந்து மதத்தை அனைத்து நாடுகளிலும் சென்று பரப்பினார். வெளிறாட்டினர் இதன் மூலம் இந்து மதமே, தத்துவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உயர்ந்த சமயம் என்பதை ஏற்றுக்கொள்ளச்செய்தார்...
9. மேலை நாடுகளுக்குச் சென்று, நமது ஆன்மீக பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் அங்கே அறியச்செய்தபோது இந்தியர்களின் ஆழ்மனத்தை சுவாமிஜி தட்டி எழுப்பினார். நீங்கள் அடிமைகள், நீங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், உங்களுக்கு எந்த பாரம்பரியமும் இல்லை, எல்லாம் நாங்கள் வந்தபிறகே உங்களுக்கு தந்தோம். எனவே நீங்கள் எங்களுக்கு கைகட்டி சேவகம் செய்யுங்கள் என்று வெள்ளையர்கள் கூறியதைக்கேட்டு இந்தியர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலம் அது. நாங்கள் எதற்கும் உதவாதவர்கள், எங்கள் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் கற்பனைகள் என்றே படித்த இளைஞர்கள் நினைத்தார்கள். இந்தியாவின் பெருமையை, அதன் ஆன்மீப் பாரம்பரியத்தை சுவாமிஜி மேலை நாடுகளில் எடுத்துக் கூறியபோது வியப்பில் ஆழ்ந்தது மேலைநாடு மட்டுமல்ல, இந்தியாவும் தான். நாம் உண்மையிலேயே இவ்வளவு பெருமைவாய்ந்தவர்களா.?.
உலகிற்கே ஆன்மீகத்தை போதிக்கும் குருவாக விளக்க நம்மிடம் தகுதி இருக்கிறதா.?.
நமது மத்தில் ஆழ்ந்த விஞ்ஞானம் இருக்கிறதா.?.
நமது மதம் உலகத்திலேயே இவ்வளவு பெருமை வாய்ந்ததா.?.
என்று இந்தியர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்...
10. சுவாமிஜி மட்டும் இல்லாதிருந்தால், இந்தியாவில் இந்துமதம் இருந்திருக்காது. அது மட்டுமல்ல இந்தியாவையே இணைத்து வந்த இந்துமதம் இல்லாமல் போனால் இந்தியாவே இருந்திருக்காது. நாம் பல்வேறு சிறுசிறு நாடுகளாக பிரிந்து நமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருப்போம்...
11. இந்தியாவின் குடிசைவாழ் மக்கள், வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லீம்களின் காலடியிலும், கிறிஸ்தவர்களின் காலடியிலும், அது மட்டுமல்ல சொந்த நாட்டு மக்களே ஏற்படுத்திய சாதி கொடுமையினாலும் மிதிபட்டு, நாம் இவ்வாறு மிதிபட்டு சாவதற்கே பிறந்திருக்கிறோம் என்று வாழ்ந்து வந்த காலத்தில், அவர்களின் தனித்துவத்தை மீண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் சமஅந்தஸ்துடன் வாழவேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். அதற்காக அவர் வகுத்த திட்டம்தான், ஒவ்வொரு கிராமத்திலும் இலவசபள்ளிகளை ஏற்படுத்துவது. அந்த காலத்தில் குடிசைமக்கள் சிறுவர்கள் முதல், ஆண்கள், பெண்கள் என அனைவரும் முதுகொடிய வேலை செய்து கால்வயிறு உணவை பெற்றார்கள். ஆகவே இவர்களுக்கு கல்விசாலைகளை ஏற்படுத்தினாலும், இவர்களால் வந்து படிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டார். ஆகவே இவர்கள் கல்வி சாலைக்கு வரவேண்டியதில்லை. கல்வி இவர்களை தேடி இவர்களின் குடிசைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதையே அவர் தமது சீடர்களுக்கு கடிதங்கள் வாயிலாக எழுதினார்...
சுயநலமற்ற ஆண்களையும் பெண்களையும் நூற்றுக்கணக்கில் ஒன்று சேருங்கள். அவர்களை ஏழைகள் வாழும் குடிசைகளுக்கு அனுப்புங்கள். அவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்த பிறகு அவர்களுக்கு கல்வி கற்பியுங்கள்...
அதுவும் எப்படிப்பட்ட கல்வி.?.
அரசியல், வரலாறு, புவியியல், மதம், சுயதொழில் போன்றவை...
இவ்வாறு கல்வி கற்பதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற சுயமரியாதை வரும்...
12. அதேபோல் பெண்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே உள்ள அதிகப்படியான வேறுபாட்டை கண்டு வேதனைப்பட்டார். ஒவ்வொரு மனிதனும் இறைவன் இருக்கிறார். அவர் ஆணிலும், பெண்ணிலும் சமமாகவே இருக்கிறார். அப்படி இருக்கும் போது பெண்களை இவ்வாறு அடிமைப்படுத்தி வைப்பது நியாயமா.?. என்று கேட்டார். பெண்களுக்கு தனியாக பள்ளிகளை ஆரம்பிக்க விரும்பினார்...
எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படவில்லையோ அந்த நாடு விரைவில் அழிந்துவிடும் என்று கூறினார்...
சுவாமி விவேகானந்தரின் எதிர்கால திட்டம் இது தான்.!.
வேதாந்த கருத்துக்களை கற்று தேர்ந்த, ஆயிரக்கணக்கான ஆண்களும், ஆயிரக்கணக்கான பெண்களும் காட்டுத்தீயைப்போல் இமயத்திலிருந்து குமரிமுனைவரையிலும், உலகம் முழுவதிலும் பரவவேண்டும்...
இது குழந்தை விளையாட்டல், அதற்கு நேரமும் இல்லை. குழந்தை விளையாட்டிற்காக வந்திருப்பவர்கள் விரைவில் வெளியேறட்டும், இல்லாவிட்டால் அவர்களுக்கு பேராபத்து நிகழ்வது உறுதி...
உங்களுள் யாரெல்லாம் சற்று மூளை உள்ளவர்களோ, அவர்களின் பாதங்களில் நான் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஒன்று கேட்டுக்கொள்கிறேன் தீப்பொறியாக பரவுங்கள். எங்கும் நிறைந்த இந்த கடவுளின் இந்த வழிபாட்டை பிரச்சாரம் செய்யுங்கள். இது நமது நாட்டில் இதுவரை பிரச்சாரம் செய்ப்படவில்லை. கிராமம் கிராமமாக சென்று, வீடுவீடாக சென்று இந்த கருத்துக்களைப் பரப்புங்கள்...
= என்றும் உங்கள் நட்பை விரும்பும் =
▂ ▃ ▅ ▆ ▇ █ PvS █ ▇ ▆ ▅ ▃ ▂
12/01/2018
= இன்று ஜனவரி 12 =
************************
விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி சிறப்பு பகிர்வு...
சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்தநாள்...
தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது...
மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி.!.
நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு குட்டிப் பிசாசு. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் பயில்வான் சாமி. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு விவேகானந்தர் என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது.!.
கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ், ஆக்குவதாக மாமனார் சொன்னார். என்னோடு இருந்துவிடேன் என்று ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது.!.
புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்தத் தத்துவத்தையும் ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்ன ஒரே சாமியார் இவர்தான்.!.
விவேகானந்தருக்கு ஞானத் தாயாக இருந்தவர் அம்மா புவனேஸ்வரி. எனக்கு ஞானம் ஏதாவது இருக்குமாயின் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.!.
சிலம்பு, மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே எடுத்துக்கொண்டவர். உடலைப் பலமாகவைத்துக் கொண்டால்தான் உள்ளம் பலமாகும் என்பது அவரது போதனை.!.
கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா.?. யாரைப் பார்த்தாலும் நரேந்திரன் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். பார்த்திருக்கிறேன் உனக்கும் காட்டுகிறேன் என்று சொன்னவர் ராமகிருஷ்ணர் மட்டுமே.!.
புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அடியில் தியானம் செய்ய ஆசைப்பட்டுத் தனது நண்பர்களுடன் சென்றார். புத்தகயாவில் தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்.!.
விவேகானந்தர் நிறைய பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் அதை அப்படியே சொல்லும் ஆற்றலும் அவருக்கு இருந்திருக்கிறது.!.
விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத் தான் அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார். அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது, கேக்திரி மன்னர் தான் 'விவேகானந்தர்' என்ற பெயரைச் சூட்டினார்.!.
ராமகிருஷ்ணர் மறைவுக்குப் பிறகு தட்சிணேஸ்வரத்துக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே வர நகரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினார். சில நாட்களில் அதைக் காலி செய்துவிட்டார். நிரந்தரமாகத் தங்கினால் அந்த இடத்தின் மீது பற்று வந்துவிடும். மூன்று நாட்களுக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது என்ற திட்டம்வைத்து இருந்தார்.!.
கொஞ்சம் அரிசி, சிறிது கீரை, ஒரு துளி உப்பு இவைதான் உணவு. மன்னர்களின் அரண்மனைகளில் தங்கினாலும் ஆடம்பர உணவைத் தவிர்த்தார்.!.
ஐந்து ஆண்டு காலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். கையில் காசு இல்லாமல் புறப்பட்டார். யார் பணம் கொடுத்தும் வாங்கவில்லை. மைசூர் மகாராஜா மொத்தச் செலவையும் ஏற்கிறேன் என்றபோது திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும் என்று மறுத்துவிட்டார்.!.
தாஜ்மஹால் அவரது மனம் கவர்ந்த இடம். அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார்.!.
எழுமின், விழுமின் குறிக்கோளை அடையக் குன்றாமல் உழைமின் என்ற வார்த்தையை முதன்முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம்.!.
வெற்றிலை, புகையிலை போடுவார். ராமகிருஷ்ணருக்கு ஆட்படுமுன் உல்லாசமாக இருந்தவன். அதன்பின்னும் பழைய பழக்கங்களை என்னால் விட முடியவில்லை. பெரும் லௌகீக இச்சைகளை எல்லாம் துறந்த பின் இந்த சிறிய விஷயங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பதால், இவற்றைக் கைவிட முயற்சிக்கவில்லை' என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.!.
புத்தகங்களை அவர் அளவுக்கு வேகமாக யாராலும் வாசிக்க முடியாது. வரிவரியாக நான் படிப்பது இல்லை, வாக்கியம் வாக்கியமாக, பாரா பாராவாகத்தான் படிப்பேன் என்பார்.!.
அமெரிக்கா செல்லும் முன் கன்னியாகுமரி வந்தவர், கரையில் நின்று பார்த்தபோது தெரிந்த பாறைக்கு நீந்தியே போய் தியானம் செய்தார். அதுதான் விவேகானந்தர் பாறை. அமெரிக்காவில் இருந்து வரும்போது சென்னையில் தங்கிய இடம், கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம்.!.
தமிழ்நாட்டுக்கு மூன்று முறை வந்திருக்கிறார் விவேகானந்தர். முதலில் மூன்று மாதங்கள். அடுத்து 20 நாட்கள் தங்கினார். மூன்றாவது முறை வரும்போது அவரை கப்பலைவிட்டு இறங்கவிடவில்லை. கொல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய காலம் என்பதால், இவரைக் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்கவில்லை.!.
நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். அப்படிப் பேசினால் யாராவது விஷம்வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று மைசூர் மகாராஜா சொன்னபோது, நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்.?. என்று திருப்பிக் கேட்டார்.!.
பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான்.!.
அடிமைப்படுத்தி வந்த ஆங்கில அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஆங்கில அரசாங்கம் என்னைக் கைது செய்து சுட்டுக் கொல்லட்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கைவைத்தார்.!.
விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும் என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும்.!.
கலிஃபோர்னியாவில் இவர் நடந்து போனபோது துப்பாக்கி பயிற்சி நடந்துகொண்டு இருந்தது. சுட்டவருக்கு குறி தவறியது. பார்த்துக்கொண்டு இருந்த இவர் வாங்கி ஆறு முட்டைகளையும் சரியாகச் சுட்டார். துப்பாக்கியை இன்றுதான் முதல்தடவையாகப் பிடிக்கிறேன். இதற்குப் பயிற்சி தேவையில்லை. மன ஒருமைப்பாடுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தார்.!.
ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ, சமயத்திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது என்று இவர் சொன்ன வார்த்தைகள் சீர்திருத்தவாதிகளையும் திரும்பிப் பார்க்கவைத்தது.!.
விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்...
முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்.!.
= என்றும் உங்கள் நட்பை விரும்பும் =
▂ ▃ ▅ ▆ ▇ █ PvS █ ▇ ▆ ▅ ▃ ▂
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
Big Bazaar Street
Coimbatore
641001
Opening Hours
| Monday | 6am - 12am |
| Tuesday | 6am - 12am |
| Wednesday | 6am - 12am |
| Thursday | 6am - 12am |
| Friday | 6am - 12am |
| Saturday | 6am - 12am |
| Sunday | 6am - 12am |