Farmers Protection Association
1. Protect Farmers Lifes and Agriculture's Land.
2. Protect Rivers and Natural Resources.
3. Protect Ours Indian Breed Cow's and Bulls.
4. All Type Awarnes
26/08/2025
26/08/2025
Add this group farmers
07/11/2024
விவசாயி நேரடி விற்பனையில் சின்ன வெங்காயம் தொடர்பு கொள்ள வேண்டிய 7904858513
31/08/2022
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா மேட்டுப்பாளையம் வனச்சாரத்திற்குட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள VN தோட்டத்தில் இன்று மாலை சுமார் 2.30 மணி அளவில் தோட்டத்தில் இருந்த சேவலை பிடிக்க முயற்சி செய்திருந்த மலைப்பாம்பை விவசாயின் தகவல் அடிப்படையில் வனத்துறையுடன் சென்று பாம்பை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் பிடிபட்ட மலைபாம்பு விடுவிக்கப்பட்டது.
22/08/2022
இந்த குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் கீழ்க்கண்ட முகவரியை பயன்படுத்தி கால்நடை வளர்க்கக்கூடிய விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய் தொற்று மற்றும் வியாதிகளை உடனுக்குடன் உயர்தர சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளும் வசதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை இல் முழுமையாக மருத்துவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் விவசாயிகள் இந்த தகவலை பயன்படுத்தி உங்களுடைய கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று மற்றும் வியாதிகளை அறிந்து உயர்தர சிகிச்சை பெற்று நம்முடைய கால்நடைகளை காப்பாற்றிக் கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு அனைத்து விவசாயிகளும் இதை பயன்படுத்திக் கொள்ளவும் மேலும் இந்த செய்தி படிக்கும் அனைத்து நண்பர்களும் அவர்களுடைய whatsapp மற்றும் பேஸ்புக் குழுவில் இந்த செய்தியை பதிவிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
TANUVAS Veterinary Clinical Complex/ Veterinary hospital, Namakkal
04286 220 650
TANUVAS Veterinary Clinical Complex/ Veterinary hospital, Namakkal · Trichy Main Rd, Andavarnagar East, Namakkal, Tamil Nadu 637001, India ★★★★☆ · Animal hospital
22/08/2022
கோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது .1 டிஎம்சி தண்ணீர் எடுத்தால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பி.ஏ.பி பாசன பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கூறி பிஏபி விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் 3000 பேர் திருப்பூரில் போராட்டம் நடத்தியுள்ளனர். பேரணியாக மேலும் இதை அரசு ஒரு மாதத்திற்குள் தடை செய்ய வேண்டும் அல்லது இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். செய்யாவிட்டால் 100 இளைஞர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
(முக்கிய குறிப்பு)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாவட்ட கூட்டுக்கு குடிநீர் திட்டம் பல செயல்படுத்தப்பட்ட வருகின்றன ஏன் நமது பகுதியில் இது போன்ற விவசாயிகளும் இளைஞர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது?
குடிநீர் தேவைக்காக ஏன் பவானிசாகர் அணைக்கட்டில் இருந்து திருப்பூருக்கு தண்ணீர் எடுத்துச் செல்லக் கூடாதா?
நமது மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தன்னார்வலர்களும் விவசாயிகளும் ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் ஏன் இதை தடுக்க மாபெரும் ஆர்ப்பாட்டங்களோ கண்டன பொதுக்கூட்டமோ பேரணியோ இதுவரை மிகப்பெரிய அளவில் நடத்தப்படவில்லை ஏன் அரசு இதை தடை செய்யக்கூடாது ஏன் இந்த திட்டத்தை மாற்றி அமைக்க கூடாது?
இனிவரும் காலங்களில் இது போன்ற கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து மட்டுமே அரசு கூட்டு குடிநீர் திட்ட நீர்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.
இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் தாழ்மையாக இந்த சமூக வலைதளத்தில் இதை பதிவிடுகின்றோம்.
ITC நிர்வாகத்தின் குற்ற செயல்கள் சில உங்கள் முன் சமர்ப்பித்து உள்ளேன்.உங்கள் கருத்து என்ன?
கடந்த வாரம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா தேக்கம்பட்டி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டு இயங்கி வரும் ஐடிசி என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தை ஆய்வு செய்ய வந்த மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச் சார்ந்த அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வுக்கு வந்தார்கள். அப்படி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் அந்த பகுதியைச் சார்ந்த எந்த ஒரு விவசாயியும் அழைத்து அந்த பகுதியில் நடைபெறும் விவரங்கள் குறித்து கேட்டு அறியவில்லை. இதற்கு மாறாக itc அவர்களுக்கு ஒதுக்கிய உல்லாச விடுதியில் தங்கி ஓய்வெடுத்து விட்டு தேவையான அளவு சாப்பிட்டு விட்டு மேலும் பல்வேறு வகையான ஆதாயம் பெரும் விஷயங்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டு நிர்வாகத்திற்கு சாதகமாக சில முடிவுகளை ஆய்வு அறிக்கையாக தயாரித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள் இதுதான் இன்றைய நிலை!
இந்த நாட்டின் பிரதமர் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்குகிறார். ஆனால் தமிழகத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதா? இப்படி தவறு செய்த ஐடிசி நிர்வாகத்திற்கு யார் காரணம் ?மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏன் இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பக் கூடாது?
மேலும் தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஏன் இந்த ஐடிசி நிர்வாகத்தை எதிர்த்து இதுவரை எந்த ஒரு வழக்கு தொடரவில்லை?
தன்னார்வலர் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சில தன்னார்வலர்களும் ஏன் இதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன? ஏன் இந்த பகுதியைச் சார்ந்த ஊடகவியலாளர்களும் பத்திரிகை நண்பர்களும் இந்த நிர்வாகத்தின் மீது எந்த ஒரு செய்திகளையும் பகிரங்கமாக வெளியிடுவதில்லை? மேலும் இந்த ஐடிசி நிர்வாகம் இயங்கி வரும் தொழிற்சாலைக்கு மிக அருகாமையில் தான் நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது, மேலும் ஐடிசி நிர்வாகம் இந்த மலைப்பகுதி அடிவாரம் வரை தன்னுடைய நிலங்களை வாங்கி வைத்துள்ளது. நீலகிரி மேற்கு தொடர்ச்சி பகுதி மலையில் யானை மான் காட்டுப்பன்றி மற்றும் இன்னும் அறிய வகையான உயிரினங்கள் வசித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐடிசி நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எந்த இடத்தில் வெளியேற்றப்படுகிறது? ஐடிசி நிர்வாகத்தின் கழிவுநீர்கள் முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றனவா? அப்படி சுத்திகரிப்பு நிலையம் இருந்தால் எந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளது? எவ்வளவு கொள்கலம் திறன் உள்ளது? சுத்திகரிக்கப்பட்ட நீர் எவ்வளவு? அது எங்கே செல்கிறது? ஐடிசி நிர்வாகம் அந்த நீரை என்ன செய்கிறது? போன்ற மேலும் பல வகையான ஆயிரமாயிரம் கேள்விகள் சந்தேகத்தை எழுப்புகின்றன? மேலும் ஐடிசி நிர்வாகத்தால் பாதிக்கப்படும் சுற்றுப்புற விவசாயிகளை ஐடிசி நிர்வாகம் மிரட்டி வருகிறது என்று சிலர் சொல்கிறார்கள் அது உண்மைதானா? ஐடிசி நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக் காட்டக் கூடிய விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் மற்றும் மேலும் போலீஸ் நிலையத்தில் உங்கள் மீது பொய்யான வழக்குகள் கொடுத்து உங்களை ஜெயிலுக்கு அனுப்புவோம் என்று ஒரு சில கை கூலிகளை விட்டு மிரட்டுகிறார்கள் இது உண்மைதானா? இப்படி இன்னும் ஏராளமான கேள்விகள் ?இந்த தேக்கம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஐடிசி நிர்வாகத்தை சுற்றி பல்வேறு சந்தேக கேள்விகள் கிளம்பி வருகின்றன. ஏன் யாரும் இதை எதிர்த்து கேள்விகளை கேட்பதில்லை? பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏன் இது தொடர்பாக பேசுவதில்லை? என்று பல்வேறு வகையான கேள்விகள் விவசாயிகள் சார்பில் குவிந்த வண்ணம் இருக்கிறது .இதற்கு ஒரு தீர்வு இல்லையா ?என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளில் ஒருவனாக நான் இதை உங்கள் முன்னிலையில் இந்த சமூக வலைதளத்தில் வைக்கிறேன். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? அல்லது கார்ப்பரேட் நிர்வாகத்திற்கு சாதகமாக தான் அரசு நடைபெறுமா? என்பதுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாகவும் ஒரு விவசாயினுடைய மகன் என்ற என்னுடைய மன ஆதங்கத்தை இந்த சமூக வலைதளத்தில் பதிவிடுகிறேன்.
29/12/2017
Flash Report:
1)Ponnusamy, age 56, S/o.Chinnaiah Gouder, Kendepalayam, Salaiyur-Village, Mettupalayam Taluk,
Karamadai Range limit.
2)Maniammal @ Rajamani, age 48
3)Priyadharshini, age 8
The above family members (husband, wife & daughter) travelled by his bike in Kendepalayam to Maruthur Road, near Gounder Thottam at 6am today(29.12.17) and an elephant pushed down. Immediately first aid at Mettupalayam GH & admitted at CMCH, CBE. Ponnusamy & his daughter has no issues. His wife have bleeding in her nose & head pain. Treatment is going on.
GPS of spot:
N11.23496°, E76.89367°, Elevation 446m.
As per DFO's direction, initial compensation amount ₹10,000/- by cash handed over to the patient's (Mrs.Maniammal ) husband Mr.Ponnusamy now.
Respective Karamadai Range FG Mr.Sagadevan & nearest Mettupalayam Range Forester Mr.Ravi are with patient at CMCH, CBE.
விவசாயிகள் கவனத்திற்கு...
ஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.
விவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் தாக்க ஆரம்பித்துவிடும்.
யானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.
‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.
நம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்…
13/12/2017
கோவை மாவட்டம் பகுதியில் யானைகள்அட்டகாசம் குறித்த தகவல்கள்.[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/a3u6AWsfkcQ
[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/tHdAlvmGWH8
[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/Xz3QVR_V2dI
[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/MZgnppTw_9s
[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/a3u6AWsfkcQ
[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/KwgzVvuQ3Do
[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/QCyaZEiNSu0
[12/13, 9:58 PM] Babu Prees: https://youtu.be/tHdAlvmGWH8
கோவை: ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம் | Elephant | Coimbatore Serious steps taken to drive away elephants in Coimbatore areas Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: h...
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Tharisaikkadu Thottam, Mangalakarai Pudhur Post, Karamadai
Coimbatore
641104