Fight Intellectually
அனைவருக்கும் அனைத்து உரிமையும் யாரும் பாதிக்காதவாறு கிடைக்க அறிவாயுதம் ஏந்தி சட்டப்படி போராடுவோம்.
18/06/2026
வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு தரக்கூடாது என்றும் MBC பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதெல்லாம் அரசியலுக்காக சாதிய மோதலை உருவாக்க பேசும் செயல்.
உங்களால் முடிந்தால் சட்டப்படி மோதுங்கள் பார்க்கலாம்.
இந்த வன்னிய சமுதாயத்தில் உண்மையான தலைவரின் ஆலோசனைகளை கேட்காமல் இருப்பதால் தான் இன்று நினைப்பவர்களெல்லாம் சீண்டிப்பார்க்கின்றனர்.
10.5% உள்ஒதுக்கீட்டை தடுக்க நினைப்பதும் வன்னிய சமுதாயத்தை ஏளானமாக நினைத்து பேசுவதும் சரியல்ல.
10.5% சட்டப்படி ஐயா சிஎன்ஆர் வன்னியர் கூட்டமைப்பு மூலம் நீதிமன்றத்தில் போராடி பெற்றது.
அதை தடுக்க நினைப்பவர்கள் 69% இடஒதுக்கீட்டையே தடுக்க நினைப்பதே.
அருந்ததியின மக்களுக்கு 3% உள்ஒதுக்கீடும் முஸ்லீம் இன மக்களுக்கு 3.5% உள்ஒதுக்கீடும் வழங்கியது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
அதே பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2012 ஆம் ஆண்டு ஐயா சிஎன்ஆரின் வழக்கிற்கு வழங்கிய பரிந்துரை தான் 10.5% உள்ஒதுக்கீடு.
வன்னிய சமுதாயம் யாருடைய உரிமையையும் பரிக்கவும் இல்லை. எடுக்கவும் இல்லை. சட்டப்படி போராடி தான் உரிமையை பெறுகிறது.
தவறாக சித்தரிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் பொதுமேடையில் மக்கள் முன் விவாதம் செய்ய வாருங்கள். ஆவணத்தோடு பேசுவோம். ஈன அரசியல் செயல்பாடு வேண்டாம்.
09/06/2026
பாண்டிச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு ஐயா ரங்கசாமி போல் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் செய்தால் மட்டுமே அரசியலில் கோலோச்ச முடியும்.
வன்னிய சமுதாயம் 1989 கள் வரை சாதியை முன்னிறுத்தாமல் அனைவருக்குமான போராட்டமாக போராடியதால் தான் அந்த போராட்டம் இன்றவும் சகோதர சமுதாயத்தால் ஏற்கப்படுகிறது.
அதன் பிறகு இராமதாசும் அன்புமணியும் இன்றுவரை சாதி அரசியலை வெளிப்படையாக செய்ததால் அரசியலில் வன்னிய சமுதாயத்தின் முக்கியத்துவம் குறைந்ததற்கு காரணமாகும்.
இவர்களோடு இணைந்து அதிமுகவும் இந்த அரசியலை செய்ததால் அதிமுகவுக்கு இருந்த சமூகநீதி பெயரும் கெட்டுப்போனது.
அரசியல் அதிகாரம் வேண்டுமானால், அனைத்து சகோதர சமுதாயத்தையும் அரவணைத்து செல். அதிகாரம் உன்னைத் தேடி வரும்.
இந்த சமுதாயம் ஏன் அடிமட்டத்தில் இருக்கிறது என்றால்,
நிலையானதை உருவாக்கவும் தெரியவில்லை.
நிலையாக வாழ முன்னோர்கள் உருவாக்கிய செல்வங்களை பாதுக்கவும் தெரியவில்லை.
சட்டப்படி பாதுகாத்து சமுதாய மக்களுக்கு கொடுத்த சிஎன்ஆர் ஐயா அவர்களை மதித்து செயல்படுத்த வைக்கவும் தெரியவில்லை.
இந்த சமுதாய சொத்துக்களை கொள்ளையடித்து தன் குடும்பத்தை மட்டும் கோடிகளில் போரள வைத்தவனெல்லாம் தலைவனாக ஏற்றுக்கொண்டதன் விளைவு அடிப்படை அரசியலே கிடைக்காமல் இந்த சமுதாயம் அரசியலில் அநாதைகளானார்கள்.
இந்த கொள்ளை கும்பல்கள் நல்ல தலைவர்ளை திமுக மற்றும் அதிமுக கைகூலிகளாக சித்தரித்து மட்டுமே வைத்துள்ளார்கள். அதனால் தான் ஒன்றுமே செய்யாதவர்களை அரசியலில் தலைவர்களாக நோக்கி பயணப்படுகிறோம்.
இது வெட்கக்கேடு.
05/06/2026
இப்போதுள்ள வளர்ந்த நாகரிகத்தில் வாழும் நாம் சுயஒழுக்கம், கட்டுப்பாடு, மனிதநேயம் இதையெல்லாம் நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வளர்ந்தவுடன் அவர்களின் பிடிவாத குணத்தால் நல்லது கெட்டது தெரியாமலேயே தவறு செய்கின்றனர்.
சமூகவலைதள தவறான பழக்கத்தால் ஒரு குடும்பமே அழிந்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
#தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தவறான உறவின் காரணமாக, அக்ஷயா என்ற பெண்ணை அரிவாளால் தாக்கிய நபரை தர்மராஜ் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் முகத்தில் பலத்த காயமடைந்த அக்ஷயா, தற்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணின் தவறான நடத்தையே காரணம் என்று சொல்கிறார்கள். இதற்கிடையில், தங்களது ஐந்து வயது மகனுடன் தப்பியோடியதாகக் கருதப்படும் தர்மராஜைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காலையில் ஐந்து வயசு சின்ன பையன் அப்பா பயமாக இருக்கிறது என்று அழுது கொண்டு இருக்கும் வீடியோவை பார்க்கவே முடியல பாவும் அந்த பையன் 💔💔
#கலாச்சாரசீர்கேடு
04/06/2026
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்
1980 களில் வன்னியர் சங்க மாநில மகளிர் அணிச் செயலாளராக திறம்பட செயலாற்றி பூம்புகாரில் மகளிர் அணி மாநாட்டை திறம்பட வெற்றிகரமாக செய்துகாட்டிய வீரப்பெண்மணி அம்மா நவமணி சீனுவாசன் அவர்கள் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறோம்.
இராமதாசு அவர்கள் பயந்த ஒரே பெண்மணி அம்மா நவமணி சீனுவாசன் அவர்களே.
வன்னிய சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் வன்னிய சமுதாய மக்களின் இடஒதுக்கீட்டு போராட்டத்திற்காகவும் தன்னிடம் இருந்த அனைத்து செல்வங்களையும் இழந்தவர்.
இன்றைய இளைய சமுதாயம் வன்னியர் சங்க தலைவர்களின் தியாக வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். நமக்கு 20% இடஒதுக்கீடு கிடைக்க போராடிய எண்ணிலடங்க வன்னிய தலைவர்களின் தியாகங்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும்.
புதுச்சேரி மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஐயா என். ரங்கசாமி அவர்களின் பெருமதிப்பை பெற்றவர் ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்கள்.
இனவுணர்வுள்ள ஒரு மாபெரும் தலைவர் என்றால் அது ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்களே!
அரசியலுக்காக இவர் புகழை வேண்டுமென்றே மறக்கடித்தாலும் இதுபோன்ற ஒரு தலைவர் இனி இந்த இனம் காண முடியாது.
நல்ல தலைவர்களை மதிக்காததின் விளைவே தமிழ்நாட்டில் வன்னிய சமுதாயத்துக்கு அரசியலில் அங்கிகாரம் கிடைக்கவில்லை.
10.5% உள்ஒதுக்கீடு,
வன்னியர் பொதுச்சொத்து வாரியம் மற்றும்
வன்னியர் நலவாரியம்,
அமைக்க சி.என். இராமமூர்த்தி ஐயா சட்டப்படி போராடி இந்த வன்னியர் சமூகத்துக்காக போராடினார். போராடுகிறார்.
ஆனால் இந்த அரசியல்வாதிகள் ஈசியாக அடுத்தவர் உழைப்பை திருடிக்கொள்கின்றனர்.
மக்கள் சிந்திக்காதவரை மாற்றம் என்பது நிகழாது.
ஆராய கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிவசத்தால் மதியிழக்காதீர்கள். அதனால் தான் இத்தனை காலம் ஏமாற்றப்படுகிறீர்கள்.
உண்மையான விசுவாசமான தலைவரை ஆதரித்தால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வரும்.
01/06/2026
வீர மங்கை கடலூர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் புகழஞ்சலி அறிக்கை
வெளியீடு:
திரு. சி.என். இராமமூர்த்தி
நிறுவனத் தலைவர், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், தென்னாட்டு ஜான்சி ராணி என்று மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட வீர மங்கை, கடலூர் மண்ணின் ஈடுஇணையற்ற தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த தினத்தில், அவரது பாதம் பணிந்து எனது வீர வணக்கத்தைச் செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
தியாகத்தின் திருவுருவம்
அஞ்சலை அம்மாள் அவர்கள் வெறும் போராட்ட வீரர் மட்டுமல்ல; அவர் துணிச்சலின் அடையாளம்.
நீலன் சிலை அகற்றும் போராட்டம்: ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக நீலன் சிலையை அகற்றத் தன் ஒன்பது வயது மகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி சிறை சென்றவர்.
சிறைவாசம்: நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்று, அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்த தியாகச் செம்மல்.
காந்தியப் பற்று: கடலூர் வந்த காந்தியடிகள் இவரைச் சந்திக்க ஆங்கிலேய அரசு தடை விதித்தபோது, பர்தா அணிந்து குதிரை வண்டியில் சென்று காந்தியைச் சந்தித்துத் தனது போராட்ட உணர்வை வெளிப்படுத்தியவர்.
வரலாற்றை மீட்டெடுக்கும் "வன்னியர் குரல்"
நமது மண்ணின் மைந்தர்களான இது போன்ற எண்ணற்ற தியாகிகளின் வரலாறு காலப்போக்கில் மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அந்த நோக்கில், நமது "வன்னியர் குரல்" மாத இதழில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல், அஞ்சலை அம்மாள் போன்ற மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் இந்த மண்ணிற்காகச் சிந்திய ரத்தத்தையும், வியர்வையையும் ஆவணப்படுத்தி வருகிறோம்.
"வரலாற்றைப் படிப்பவர்களே வரலாற்றைப் படைக்க முடியும்."
என்ற கருத்திற்கேற்ப, இளைய தலைமுறைக்கு நமது முன்னோர்களின் வீரத்தை எடுத்துச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
நமது கடமை
அஞ்சலை அம்மாள் அவர்கள் காட்டிய அந்தத் துணிவும், அர்ப்பணிப்பும் இன்று சமூக முன்னேற்றத்திற்காகப் போராடும் நம் ஒவ்வொருவருக்கும் உந்துசக்தியாக விளங்க வேண்டும். பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தும், சமூக உரிமைகளுக்காகவும் அவர் காட்டிய வழிநின்று பாடுபட இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.
தியாகத்தாய் அஞ்சலை அம்மாளின் புகழ் ஓங்குக!
அவர் ஏற்றிய விடுதலைச் சுடர் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கட்டும்!
இப்படிக்கு,
சி.என். இராமமூர்த்தி
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.
01/06/2026
தென்னகத்து ஜான்சிராணி என்றழைக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி வீரமங்கை திருமதி. அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
வரலாற்றை மறைத்தவர்கள் மத்தியில் வன்னிய சமுதாய வரலாற்றை வெளியே கொண்டுவர பாடுபட்ட CNR ஐயா , 2012 ஆண்டு வெளிவந்த நமது வன்னியர் குரல் இதழில் அஞ்சலை அம்மாள் பற்றிய ஒரு சில வரலாற்று பதிவுகளை சி.என். இராமமூர்த்தி ஐயா எழுதியது.
01/06/2026
செய்தி அறிக்கை
நாள்: 31-05-2026
வெளியீடு: தலைமை நிலையம், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி, சென்னை.
தலைப்பு: "அரசுத் துறைகளில் நிலவும் 5.50 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புக! இடைத்தரகர்கள், முறேகடுகள் இன்றி வெளிப்படையான நேரடித் தேர்வை உறுதி செய்க!" – தமிழக அரசுக்கு சி.என். இராமமூர்த்தி விரிவான அறிக்கை!
சென்னை:
தமிழக அரசின் பல்வேறு முதன்மைத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிலவி வரும் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் துரிதமாக நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்றும், எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் நேர்மையான அதிகாரிகள் குழுவின் நேரடி கண்காணிப்பில் வெளிப்படையான முறையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. சி.என். இராமமூர்த்தி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள விரிவான செய்தி அறிக்கை வருமாறு:
தமிழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரம் தொய்வின்றி இயங்குவதற்கும், அடித்தட்டு மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் தங்குதடையின்றிச் சென்றடைவதற்கும் அரசுத் துறைகளில் போதிய பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் துறைவாரியான தணிக்கை அறிக்கைகளின்படி, தமிழகத்தில் தற்போதைய சூழலில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் சுமார் 5,50,000 (ஐந்தரை லட்சம்) பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது.
துறைவாரியான துல்லியமான காலிப்பணியிட புள்ளிவிவரங்கள்:
அரசுத் தரப்பு மற்றும் ஊழியர் கூட்டமைப்புகளின் அண்மைக்காலத் தரவுகளின்படி மிக முக்கியத் துறைகளின் காலிப்பணியிட நிலவரம் பின்வருமாறு:
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை: அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 1,10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியிடங்கள் (Non-teaching staff) காலியாக உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள்): துப்புரவுப் பணிகள் முதல் பொறியியல் மற்றும் இளநிலை உதவியாளர்கள் வரை ஒட்டுமொத்தமாக 1,15,000-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாகம்: அடிமட்ட நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் கிராம நிர்வாக அலுவலர் (VAO), வருவாய் ஆய்வாளர் (RI) மற்றும் அலுவலக உதவியாளர்கள் பிரிவில் 15,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதால் ஒரு அதிகாரியே கூடுதல் கிராமங்களைக் கவனிக்கும் அவலநிலை நீடிக்கிறது.
பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை: மக்களின் அத்தியாவசியத் தேவையான மருத்துவக் கட்டமைப்பில் 22,000-க்கும் மேற்பட்ட மருத்துவர், செவிலியர் மற்றும் ஆய்வகப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள்: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் துறையில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட காவலர் மற்றும் இதர பணியிடங்கள் பற்றாக்குறையாக உள்ளன.
போக்குவரத்துக் கழகங்கள்: பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தை உறுதி செய்யும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 20,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 1 கோடிக்கும் அதிகமான தமிழக இளைஞர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகக் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், தேர்வு முகமைகள் (TNPSC, TRB, MRB, USRB) மூலமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் முக்கியக் கோரிக்கைகள்:
ஒருங்கிணைந்த வெள்ளை அறிக்கை (Consolidated Master Data): தமிழக அரசு உடனடியாக அனைத்துத் துறைகளிலும் உள்ள துல்லியமான காலிப்பணியிட விவரங்களை ஒருங்கிணைத்து, அதிகாரப்பூர்வ 'வெள்ளை அறிக்கை'யாக உடனடியாக வெளியிட வேண்டும்.
இடைத்தரகர்கள் இல்லாத நேரடித் தேர்வு: அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் எவ்விதமான அரசியல் தலையீடுகளோ, முறைகேடுகளோ, வெளிப்படைத்தன்மையற்ற நிலைகளோ இருக்கக் கூடாது. எந்தவொரு இடைத்தரகர்களின் ஆதிக்கமும் இல்லாமல், தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞர்கள் மட்டுமே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
உயர் அதிகாரிகள் குழுவின் நேரடி கண்காணிப்பு: தொழில்நுட்பக் கோளாறுகளோ, வினாத்தாள் கசிவுகளோ அல்லது தேர்வு முடிவுகளில் குளறுபடிகளோ ஏற்படாத வண்ணம், நேர்மையான அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவின் நேரடி மற்றும் கவனமான கண்காணிப்பில் அனைத்துத் தேர்வுகளும், நேர்காணல்களும் நடத்தப்பட வேண்டும்.
ஒப்பந்த முறைக்கு முற்றுப்புள்ளி: அரசுத் துறைகளில் சமூக நீதியைப் புதைகுழியில் தள்ளும் தற்காலிக, ஒப்பந்த மற்றும் குத்தகை அடிப்படையிலான (Outsourcing) நியமனங்களை முழுமையாகக் கைவிட்டு, முறைப்படியான காலமுறை ஊதியத்துடனான நிரந்தரப் பணியிடங்களாக இவற்றை நிரப்ப வேண்டும்.
காலமுறை அட்டவணை: காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு ஏதுவாக, அடுத்த ஓராண்டிற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணையை (Exam Calendar) காலதாமதமின்றி வெளியிட்டு, போர்க்கால அடிப்படையில் புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், மாநிலத்தின் தடையற்ற சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகளை உடனே துவங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
(சி.என். இராமமூர்த்தி)
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Vanur
Chennai
605109