Tamilnadu Rains

Tamilnadu Rains

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilnadu Rains, Blogger, Kumaran Kudil, Chennai.

வானிலை தொடர்பான அனைத்து செய்திகள் மற்றும் விரிவான தகவல்களை உங்களுக்கு தெளிவாகவும் துல்லியமாகவும் எளிமையான முறையில் தெரிவிக்க விரும்புகிறேன்..!

நான் உங்கள் கோபிநாத்...!

05/06/2026

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்ரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டம், மதுரை, நாகை மாவட்டம், இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதால், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்யும்..!

https://m.facebook.com/story.php?story_fbid=951232527296067&id=100072279842903&mibextid=Nif5oz

ஏப்ரல் 9ஆம் தேதி பதிவில் இந்த ஆண்டு சக்தி வாய்ந்த El-Nino ஆண்டாக இருக்கும் என்றும் இதனால் கடுமையான வெப்பமும் அதீத பருவமழையும் இருக்கும் என குறிபிட்டு இருந்தேன்..!

தமிழகம் முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசியது.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை போன்ற பல மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளை விட அதிக பகல் நேர வெப்பநிலை பதிவாகியுள்ளது..!

தற்போது ஜூன் முதல் செப்டம்பர் வரை - மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்து உள்ள தமிழக பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அவ்வப்போது மட்டுமே மழை இருக்கும்..!

வடகிழக்கு பருவமழை பொருத்த வரையில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிவர மழை பெய்யாத இடங்களிலும் இ‌ந்த ஆ‌ண்டு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

30/05/2026

வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!

மேலும் நாளை வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!

ஜூன் 1 முதல் தமிழகம் முழுவதும் வெப்ப அலைகள் முற்றிலும் குறையும்..!

26/05/2026

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை நோக்கி வலுவான மழை மேகங்கள். வரும் நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்..!

21/05/2026

நேற்று சென்னையில் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலையாக 42°C பதிவானது..!

சனிக்கிழமை வரை இதே நிலை தொடரும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சனிக்கிழமை வரை 40°C முதல் 42°C வரை வெப்பநிலை நிலவும். மிகக் குறைந்த ஈரப்பதம் காரணமாக, இந்த 40°C முதல் 42°C வெப்பநிலையானது 50°C போல உணரப்படும்..!

மற்ற கொங்கு, தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு 38°C முதல் 40°C வரை வெப்பநிலை நிலவும்..!

வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 38°C முதல் 40°C வரை வெப்பநிலை பதிவாகும்..!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில் 35°C முதல் 38°C வரை வெப்பநிலை பதிவாகும்..!

சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் மாலை முதல் இரவு வரை லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!

செவ்வாய்கிழமை முதல் வெப்ப சலன மழைக்கு வாய்ப்பு உள்ளது..!

15/05/2026

வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

ஞாயிற்றுக்கிழமை வரை கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி மாவட்டத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது..!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது..!

மேலும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது..!

Photos from Tamilnadu Rains's post 09/05/2026

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், நாம‌க்க‌ல், சேலம், திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது..!

இன்றும் நாளையும் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், நாம‌க்க‌ல், சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புது‌க்கோ‌ட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்..!

Photos from Tamilnadu Rains's post 14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤️..!

இன்று முதல் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்..!

இன்று முதல் அடுத்த 7 நாட்கள் கொங்கு, தென் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் பகல் நேர வெப்ப நிலை 38°C முதல் 41°C (100°F முதல் 106°F வரை) வரை அதிகரிக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, கரூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு 38°C முதல் 41°C (100°F முதல் 106°F வரை) வரை வெப்பநிலை இருக்கும்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு 35°C முதல் 38°C (96°F முதல் 100°C வரை) வெப்பநிலை இருக்கும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி போன்ற வடக்கு மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி போன்ற டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த 7 நாட்களுக்கு 35°C முதல் 38°C (96°F முதல் 100°C) வரை வெப்பநிலை இருக்கும்..!

கடலோர மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் மட்டும் கடல் காற்றின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக தெரியும்..!

அரிதான சூப்பர் எல்-நினோ..!

2026 ஜூன் மாதத்திற்கு பிறகு அரிதான சூப்பர் எல்-நினோ அமைப்பு உருவாக 60% வாய்ப்புகள் இருப்பதாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளது..!

எல்-நினோ அல்லது சூப்பர் எல்-நினோ என்றால் என்ன..?

இந்தக் காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடல் மிகவும் வெப்பமாக இருந்து, வெப்பக் காற்றை வங்காள விரிகுடாவை நோக்கித் தள்ளும். இது வெப்பமான கோடை நாட்களுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த நாட்களில் காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவாகவும், இரவு நேர வெப்பநிலையும் அதிகமாகவும் இருக்கும்..!

எனவே, கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழ்நாடு கடுமையான வெப்ப அலைகளுடன் உச்சகட்ட கோடை நாட்களைக் காணும்..!

ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான சூப்பர் எல்-நினோ - கடந்த ஆண்டு இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் நல்ல மற்றும் அதிகப்படியான மழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ காரணமாக இந்த 3 மாதங்களும் வறண்டதாகவும், மிகக் குறைந்த மழைப்பொழிவுடனும் இருக்கும்..!

வடகிழக்குப் பருவமழையின் மீதான தாக்கம் - அது எல்-நினோவாக இருந்தாலும் சரி, சூப்பர் எல்-நினோவாக இருந்தாலும் சரி, அவை வடகிழக்குப் பருவமழைக்கு மிகவும் சாதகமானவை. இதன் விளைவாக தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் புயல் பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்..!

தமிழ்நாட்டில் இதற்கு முந்தைய எல்-நினோ ஆண்டுகள் - 2023, 2015, 1997..!

06/04/2026

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..!

திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரு‌ம் நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

18/03/2026

இன்று சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..!

மேலும் ஈரோடு, விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புது‌க்கோ‌ட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

17/03/2026

வெப்பச்சலன மழை..!

கோவை, ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெ‌ய்து வரு‌கிறது..!

மேலும் இன்று மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

மேலும் 18 முதல் 20 தேதிகளில் அதாவது நாளை முதல் வெள்ளி கிழமை வரை தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

நாளை திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

19ஆம் தேதிகளில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது..!

Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Kumaran Kudil
Chennai
600097