C.Jagan DMK

C.Jagan DMK

Share

தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினர்

22/04/2026
Photos from C.Jagan DMK's post 15/04/2026

தாம்பரம் தோகுதி திமுக வேட்பாளர் Dr.கிருத்திகாதேவி MBBS DGO அவர்களுக்கு ஆதரவு கோரி மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் மற்றும் தாம்பரம் மாநகர மகளிர் அணி தலைவர் பரிமளா சிட்டிபாபு ஆகியோர் 15-04-2026 அன்று காலை வீடு வீடாக வாக்கு சேகரித்தனர்

14/04/2026

*24 மணி நேரத்திர்குல் உயர்த்தப்பட்ட குடிநீர் வரி செயலாக்கம் திரும்பப்பெறப்பட்டது*

வீட்டின் சதுர அடி பரப்பளவின் அடிப்படையில் குடிநீர் வரியை உயர்த்தும் நடைமுறை, தமிழ்நாடு முழுவதும் பொதுவான வரி விதிப்பு முறையை மாற்றியமைப்பதன் மூலம் அமல்படுத்தி உள்ளதை *தாம்பரம் மாநகராட்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன்* அவர்கள் தகவல் அறிந்து பலரிடம் விவாதித்து, நீண்ட உரையாடல்களையும் மேற்கொண்டு இருந்தார். மாநகராட்சி மன்றத்தில் இது குறித்த எந்தவிதமான ஒப்புதலோ அல்லது தீர்மானமோ பதிவு செய்யப்படவில்லை. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இந்தக் காலகட்டத்தில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் மூலம் குடிநீர் வரி உயர்வு 12-04-2026 அன்று திடீரென அமல்படுத்தப்பட்டது.

இப்பிரச்சினையை *மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன்* அவர்கள் *மாண்புமிகு மேயர், ஆணையர், துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர்களின்* கவனத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்வாறு திடீரென வரி உயர்வு அமல்படுத்தப்பட்டதைக் கண்டு அவர்களே அதிர்ச்சியடைந்தனர். *மாமன்ற உறுப்பினர் C.ஜெகன்* அவர்கள் புகார் அளித்தன் பேரில், தாம்பரம் மாநகராட்சியின் மதிப்பிற்குரிய ஆணையர் அவர்கள் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திடம் இதுகுறித்து விளக்கிப் பேசினார்; இந்த நடவடிக்கை தவறானது என்றும், இணையதளத்தில் (Portal) உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், உயர்த்தப்பட்ட வரி விகிதத்தை (13/4/2026) 24 மணி நேரத்தில்பழைய நிலைக்குத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டார். *மாமன்ற உறுப்பினர் C.ஜெகன்* அவர்களின் கோரிக்கையை ஏற்று, அமல்படுத்தப்பட்ட வரி உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்த தாம்பரம் மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் துணை மேயர் ஆகியோருக்கு ஜெகன் அவர்கள் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இந்த குடிநீர் வரி உயர்வு குறித்த தகவலை அவரது கவனத்திற்குக் கொண்டு சென்ற சிட்லபாக்கம் குடியிருப்பு நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. விஸ்வநாதன் மற்றும் திரு.சந்துரு ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

குடிநீர் வரி அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் இத்தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாலும் அவர் அது குறித்து அவர் மேயர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக கொண்டு சென்றதாலே உடனடியாகச் செயல்பட்டு இந்தத் தீர்வைப் பெற முடிந்தது என்று அவர் தெரிவித்தார். குடியிருப்போர் நலச்சங்கங்களும் ஜெகனுக்கும் இதர்க்கு உதவிய ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டினர்.

13/04/2026

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரான டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி, தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்—குறிப்பாக சிட்லப்பாக்கத்திலுள்ள ஜார்ஜ் காலனி மற்றும் பாபு தெரு, அத்துடன் சர்வ மங்களா நகர் மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய இடங்களில்—வீதி வீதியாகச் சென்று வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின் போது, ​​பெண்கள் வேட்பாளர் மீது மலர்களைத் தூவியும், அவருக்கு மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். இப்பிரச்சாரப் பயணத்தில், தாம்பரம் மாநகராட்சிச் செயலாளர் எஸ் ஆர் ராஜா, பகுதிச் செயலாளர் ஆர். சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் சி.ஜெகன் மற்றும் ராஜா, வார்டு செயலாளர் தேவேந்திரன் ஆகியோருடனும், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடனும் இணைந்து அவர் பங்கேற்றார்.

Photos from C.Jagan DMK's post 08/04/2026

2026 தேர்தலில் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளரை Dr.R.S.கிருத்திகாதேவி MBBS., DGO அவர்களை அறிமுகம் செய்வதற்கு சிட்லபாக்கம் 43வது வார்டில் 07-04-2026 மாலை மிக கன்னியாமான முறையில் பொது நலத்துடன் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை நிறைவேற்றி கொல்லும் மிக பழையான சங்கமாக விளங்கும் சிட்லபாக்கம் கோமதி நகர் குடியிருபோர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்திக்கு சமையம்
அச்சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் வேட்பாளரிடம் அச்சங்கத்தின் தேவைகளை எடுத்துரைத்தனர். பெரும்பாலான அனுபவசாலிகள் இச்சங்கத்தில் உள்ளதால் அவர்கள் முக்கிய கோரிக்கைகளாக நியாய விலை கடை வெகுதூரம் செல்வதை தவிர்க்கும் அளவில் கோமதி நகரிலேயே நியாய விலை கடை அமைக்கவும், செம்பாக்கம் ஏரியை உடனடியாக சீரமைப்பதற்கு ஆவணம் செய்யவும் மற்றும் மின் கம்பிகளை அனடர்கிரவுண்டு கேபில்களாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

என் அழைப்பை ஏற்று வேட்பாளரை சந்திக்க உறுப்பினர்களை ஒருங்கிணைத்த சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
சிட்லபாக்கம் சி.ஜெகன் MC

On the evening of April 7, 2026, in Ward 43 of Chitlapakkam, I had the privilege of personally meeting with the office bearers and members of the Chitlapakkam Gomathi Nagar Residents' Welfare Association. This association is a long-standing and esteemed organization, known for its dignified approach to public service—specifically, by drawing the attention of elected representatives to community needs and ensuring their effective resolution. The purpose of this visit was to introduce Dr. R.S. Kruthikadevi (MBBS, DGO), the DMK candidate contesting the Tambaram Assembly constituency in the 2026 elections.

During this meeting, the President and Secretary of the association presented their community's specific requirements to the candidate. Given that the association comprises a large number of experienced individuals, they put forward several key demands: the establishment of a Fair Price Shop within Gomathi Nagar itself (to eliminate the need for residents to travel long distances), immediate measures to restore the Sembaakkam Lake, and the conversion of overhead power lines into underground cables.

I extend my heartfelt gratitude to the association's office bearers for accepting my invitation and coordinating the members for this meeting, as well as to all the members who participated.

Sincerely,
Chitlapakkam C. Jagan, MC

Photos from C.Jagan DMK's post 08/04/2026

2026 தேர்தலில் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் தி.மு.கழக வேட்பாளரை Dr.R.S.கிருத்திகாதேவி MBBS., DGO அவர்களை அறிமுகம் செய்வதற்கு சிட்லபாக்கம் 43வது வார்டில் 07-04-2026 மாலை அனைத்து பொது தேவைகளை நேர்மையான முறையில் அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவ்வழியே பணிகளை நிறைவேற்றி கொல்லும் மிக பாரம்பரியான சங்கமாக விளங்கும் சிட்லபாக்கம் முத்துலெட்சுமி நகர் குடியிருபோர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நேரில் சந்திக்கு சமையம்
அச்சங்கத்தின் தலைவர் வேட்பாளர் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் முக்கிய கோரிக்கைகளை எடுத்துரைத்து மனு அளித்தனர்.

என் அழைப்பை ஏற்று வேட்பாளரை சந்திக்க உறுப்பினர்களை ஒருங்கிணைத்த சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
சிட்லபாக்கம் சி.ஜெகன் MC

On the evening of April 7, 2026, in Ward 43 of Chitlapakkam, Dr. R.S. Krithikadevi (MBBS, DGO)—the DMK candidate contesting the Tambaram Assembly constituency in the 2026 elections—was formally introduced. This introduction took place during a personal visit to the office-bearers and members of the Chitlapakkam Muthulakshmi Nagar Residents' Welfare Association. This association is a highly traditional and esteemed organization known for honestly bringing various public needs to the attention of the government and elected representatives, thereby ensuring the successful ex*****on of necessary civic works.

During this meeting, the President of the Association presented a petition outlining key demands to the candidate and the Corporation Mayor.

I extend my heartfelt gratitude to the Association's office-bearers for accepting my invitation and coordinating the members for this meeting, as well as to all the members who participated.

Yours Sincerely,
Chitlapakkam C. Jagan, MC

Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


19, ACB Complex , Pamban Swamigal Salai
Chennai
600064

Opening Hours

Monday 7am - 6pm
Tuesday 7am - 6pm
Wednesday 7am - 6pm
Thursday 7am - 6pm
Friday 7am - 6pm
Saturday 7am - 6pm
Sunday 7am - 1pm