PSR

PSR

Share

Writer & Politican

14/04/2026

EPS ❤️‍🔥TTV 🔥🔥🔥

15/03/2026
23/02/2026

விஜய் அயோக்கியத்தனமான மனசாட்சி அற்ற பேச்சு

இன்றைக்கு, "கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டார்கள்" என்கிறார் விஜய். அப்படியென்றால், கரூர் பேரவலத்தில் விஜய்க்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? எந்தவிதத்திலும் அவர் காரணமில்லையா? எப்படி இப்படியெல்லாம் பேச விஜய்க்கு மனம் வருகிறது?

இப்போதுவரை கரூர் மரணங்கள் விஜய்க்கு எந்த உறுத்தலையும், குற்ற உணர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அவரது இந்தப் பேச்சே உதாரணம்.

விஜய் என்றைக்கும் திருந்தப் போவதுமில்லை; வருந்தப் போவதுமில்லை. தன்னிடமிருக்கும் பணத்தையும், திரைக்கவர்ச்சியையும் முதலீடாகக் கொண்டு மக்களை ஆண்டுவிடத் துடிக்கும் விஜய் மிக மோசமானக் காரியக்கிறுக்கன். கடந்தக் கூட்டத்தில் இறந்தவரின் பெயரைச் சொல்லி இரங்கல்கூட தெரிவிக்காத விஜய்யின் தலைக்கனமும், ஆணவமும் மிக மிக ஆபத்தானது.

23/01/2026

அண்ணன் TTV தினகரன் புகழாரம்

"அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தான் கழக பொதுசெயலாளர்"🔥

"தமிழ்நாடு NDA தலைவர்" 😍😍

எங்க பகை எல்லாம் முடிஞ்சது, என்னை திமுக ஒழிப்பது தான் பாக்கி - TTV Dhinakaran

13/01/2026

இன்று பார்த்தேன் . அருமையான படம். இன்று தான் பட்ஜெட் பார்த்து அதிர்ச்சி ஆனேன். வெறும் 5 கோடியில் எடுத்து 50 கோடி லாபம் ஈட்டியிருக்கிறார்கள். அதுவும் உலக தரமான படைப்பு !

தமிழ் சினிமாக்காரர்கள் 300 கோடி செலவழித்து 400 கோடி வியாபாரம் செய்து 100 கோடி லாபம் ஈட்டுவதைப் பெருமையாக பேசுவது அவலம். அதிலும் எல்லோரும் ஒரே கமர்சியல் குப்பையைத் தான் கிண்டி வைக்கிறார்கள்.

மலையாள சினிமா போல் தமிழ் சினிமா கதை, திரைக்கதை, உருவாக்கத்தில் மூளையையும், முதலீடையும் செலுத்துவது எப்போது?

26/11/2025

தெங்காசி: துரைசாமியபுரம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஏழு பயணிகள் உயிரிழந்தனர் ,

ஏழு பேரில் உயிரிழந்தவர்களில் ஒருவர் புளியங்குடி நேதாஜி தெருவைச் சேர்ந்த, பீடி சுழற்றும் தொழிலாளி எம். மல்லிகா (55). அவரது மகள் கீர்த்திகா (33) பார்வை குறைபாடு கொண்டவர். தனது எதிர்காலத்தைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசும் போது திடுக்கிட்டு அழுதார்.

“நான் 5ஆம் வகுப்பில் படிக்கும் போது என் தந்தை இறந்துவிட்டார். என் பெரிய சகோதரர் திருமணம் செய்து கொண்டு தனியாகப் போய்விட்டார். என் தாய்தான் இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஒரே ஆதாரம். பீடி சுழற்றி எனக்கு MA, B.Ed படிக்கச் செய்தார். நான் அவரை ஒருமுறையும் பார்க்கவில்லை, இனி என்றுமே பார்க்க முடியாது.

முதல்-அமைச்சர் எனக்கு போதுமான நிவாரணத் தொகையும், ஒரு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு ஆசிரியர் பணிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்,” என்றார் அவர் உணர்ச்சி வசப்பட்டது கண் கலங்க வைக்கிறது. மாநில அரசு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. நிராவாரண தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்

பார்வை திறன் குறைபாடு உள்ள அந்த பெண்ணிற்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

*-* | Chief Minister of Tamil Nadu |
M. K. Stalin | Edappadi K. Palaniswami | Singai G Ramachandran |

23/11/2025

பெண்களோட காதலுக்கு, அழகும், 8 packs, அதீத பணம் போன்றவை எல்லாம் ஒரு பத்து சதவீத பெண்களுக்கு வேண்டுமானால் பெரிதான விஷயமாக இருக்கலாம்... பெரும்பான்மையான பெண்களுக்கு, இன்னும் சொல்லப்போனால் புத்திசாலி பெண்களுக்கு, காதலில், அல்லது காதலன் கொடுக்கும் சுயமரியாதையும், பாதுகாப்பு உணர்வும், கொஞ்சம் நகைச்சுவை உணர்வும், அவனிடம் இருக்கும் உண்மையுமே போதுமானது.❤️

சமீபத்தில் நான் பார்த்து வியந்து, ரசித்து, மனமெங்கும் சந்தோஷமாக இருக்கக்கூடிய காதலாக இவர்களுடைய காதலை பார்க்கிறேன்...
திருமண பந்தமே வேண்டாம் என்று முடிவு எடுத்த பின், காது கேட்காத கண் பார்வை தெரியாத மனிதர்களின் சைகை மொழி கற்றுக்கொள்ள போக... அங்கே அந்த பெண்ணுக்கு காதல் பூத்து இருக்கிறது...

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், நொடிக்கு நொடி வீடியோ காலில் ஃபோனில் நம் உணர்வுகளை கடத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவருக்கு காதும் கேட்காது, கண்ணும் தெரியாது... அவர் பெயர் மிரண்டா தாம் கின்சன்...

உதாரணத்திற்கு முதல் நாள் ஒரு கடிதம் அவருக்கு அனுப்பினால் அதனை மறுநாள் தான் அவர் படித்து புரிந்து கொள்ள முடியும்...

சென்னையில் முட்டுக்காடு ஏரி பாலத்துக்கு முன்பாக அந்த பிரம்மாண்ட பிரவுன் கலர் கட்டிடம் தனித்து நிற்கும்
அதுதான் National Institute for Empowerment of Persons with Intellectual Disabilities (NIEPID) அங்கேதான் மிரண்டாத்தான் கின்சன் பேராசிரியராக பணிபுரிகிறார்... அவரிடம் சைகை மொழி படிக்கப் போய் காதலில் விழுந்தவர்தான் அவருடைய மனைவி...

இத்தனைக்கும் அவர் மனைவியின் அம்மாவுக்கு காதலால் பெரும் துயரம் நிகழ்ந்திருக்கிறது அதனால் தன் வாழ்வில் காதலோ அல்லது திருமணமோ தேவை என்ற புரிதலில் இருந்தவர் தற்போது அவர் மீது காதல் கொண்டு நிறைய எதிர்பர்களை சந்தித்து திருமணம் செய்து தற்போது ஒரு மகனோடு வாழ்கிறார்...

இத்தனைக்கும் அந்த வீட்டுக்கான பிரட் வின்னர் பேராசிரியர் மிராண்டா தாம் கின்சன் தான்...
உதாரணத்திற்கு அவரால் பார்க்க முடியாது காதும் கேட்காது... அவர் தன்னுடைய காதலிக்கு தன்னுடைய உணர்வை தெரிவிக்க வேண்டும் என்றால்... போனில் பேசுவார்... அதை முழுதாக கேட்டுக்கொண்டு அதற்கு பதிலை மறுநாள் ஈமெயிலாக இவர் அனுப்புவார்... ஏனெனில் அவரால் பேச மட்டுமே முடியும் காது கேட்காது என்பதால் அவருக்கு சொன்னாலும் புரியாது யோசித்துப் பாருங்கள்...

ஒரு செய்தியை ஒரு உணர்வை கடத்த 24 மணி நேரங்கள் தேவையாக இருக்கிறது என்பதை தெரிந்து அந்தக் காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
உங்கள் காதல் எங்கே பூத்தது என்ற கேள்விக்கு...
நீ காற்று நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் பாடல் மூலமாக எனக்கு அவர் காதலை தெரிவித்தார்... ❤️❤️

அந்த காதலை பார்த்தபோது என் கண்கள் நெகிழ்ச்சியில் கலங்கியது... அந்த காதலை கொண்டாட தோன்றியது... எந்த குறைகளும் இன்றி வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இயற்கை துணை புரியட்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளத் தோன்றியது...
நிறைய சூழல்களில் பெண்களுக்கு இருக்கும் மன தைரியம்... பார்த்து வியந்திருக்கிறேன்... அந்தப் பெண்மணி நினைத்திருந்தால் எல்லோரை போன்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்க முடியும்...

ஆனால் comfort zone என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றிக் காட்டி இருக்கிறார்...
அந்த பெண்மணியின் மனோ தைரியத்துக்கும், காதலுக்கும், தலை வணங்குகிறேன்...
உண்மைதான்...காதல், எல்லாத்தையும் கற்றுக் கொடுக்கும், எதையும் தாங்கும் சக்தியை கொடுக்கும்.

-

03/11/2025

கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.

இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு , வெட்கித் தலைகுனிய வேண்டும்.

28/09/2025

உங்க மேல பெரிய மதிப்பு வந்திருக்கு ஐயா 🙏🙏

கேள்வி : விஜய் இன்னும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லையே ?

எடப்பாடியார் பதில் : நடந்திருப்பது மிக மிக துயரமான சம்பவம். இதில் யார் யார் என்னென்ன மன நிலையில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. அரசியலை கடந்து எல்லோரும் ஒன்றாக நின்று நிலைமையைச் சமாளிக்க வேண்டிய தருணம் இது.

பிண அரசியலை மட்டுமே பார்த்த தமிழகம், இப்படியும் ஒரு பக்குவமான தலைவர் தான் இனி தமிழகத்தின் விடிவெள்ளி

27/09/2025

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் திரு. MR.விஜய் பாஸ்கர் அவர்களை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை செய்ய விரைந்துள்ளார்

மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் AIADMK's IT Wing தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும்,
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
Chief Minister of Tamil Nadu

22/08/2025

எடப்பாடியார் 💥💥💥

Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai