Kshatriyas - The Ruler

Kshatriyas - The Ruler

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kshatriyas - The Ruler, Community Center, Chennai.

28/05/2026

இந்த பாராட்டு விழாவில் சி.வி. சண்முகம் எங்காவது மேடையில் இருக்கிறாரா?
C.V.சண்முகம் செய்ததாக உறவுகள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்.

வன்னியர் பொதுச்சொத்துவாரிய 44-வது (44/2018) சட்டத்தை கொண்டு வர செய்தவர் ஐயா சிஎன்ஆர்.

10.5% உள்ஒதுக்கீட்டுக்கான நீதிமன்ற ஆணை (2012 ஆண்டு), அரசாணை எண் GO MS No.35 அம்மையார் ஜெயலலிதா அவர்களை போடசெய்தவர் ஐயா சிஎன்ஆர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையத்திடம் 10.5% பரிந்துரையை 2012 இல் போட செய்தவர் ஐயா சிஎன்ஆர் அவர்கள்.

எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு கடலூரில் மணிமண்டபம் மற்றும் 100-வது பிறந்தநாளை அரசு விழாவாக எடப்பாடியாரை செய்ய வைத்தவர் ஐயா சிஎன்ஆர்.

இதையெல்லாம் எடப்பாடியார் செய்ததற்காக தான் 2019 இல் சி.என்ஆர் ஐயா எடப்பாடியார் அவர்களுக்கு பல லட்சம் செலவுசெய்து பாராட்டுவிழா நடத்தினார்.

ஆனால் இதையெல்லாம் சி.வி. சண்முகம் செய்ததாக அவர்களுடைய ஆதரவாளர்கள் சொல்வது தவறானது.

உண்மையான தலைவரின் உழைப்பை தயவுசெய்து மறைக்காதீர்கள். இந்த பாராட்டு விழாவில் சி.வி. சண்முகம் எங்காவது மேடையில் இருக்கிறாரா?

25/05/2026

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி
நிறுவனர் தலைவர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் வெளியிடும் அறிக்கை

“தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு – மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!”

தமிழகத்தில் கடந்த சில நாட்களால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அறிவிப்பில்லா மின்வெட்டு, குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி ஏற்படும் மின்தடை போன்ற பிரச்சனைகள் பொதுமக்கள், சிறு தொழில்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிற்துறையினரை கடுமையாக பாதித்து வருகின்றன. குறிப்பாக கடும் கோடை வெப்பநிலை நிலவும் இந்நேரத்தில் மின்வெட்டு மக்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சிரமத்தையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கியுள்ளது.

தமிழகத்தின் மின்தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய உச்சபட்ச மின் தேவை 21,000 மெகாவாட் அளவை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 16,000 முதல் 17,000 மெகாவாட் அளவில் இருந்த மின் பயன்பாடு தற்போது வேகமாக உயர்ந்துள்ளது. இதற்கு தொழிற்துறை விரிவாக்கம், வீட்டு உபயோக மின் சாதனங்களின் அதிகரிப்பு, கடும் வெப்பநிலை மற்றும் நகரமயமாதல் முக்கிய காரணங்களாக உள்ளன.

மின் உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்புகள் மக்கள் தேவைக்கு ஏற்ப முழுமையாக மேம்படுத்தப்படாததால் பல இடங்களில் டிரான்ஸ்ஃபார்மர் பழுது, மின் கம்பி கோளாறு, துணை மின் நிலைய சுமை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பல மணி நேர மின்வெட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் மருத்துவமனைகள், குடிநீர் விநியோகம், சிறு தொழிற்சாலைகள், விவசாய மோட்டார்கள் மற்றும் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மேலும் சிறு, குறு தொழில்கள் உற்பத்தி இழப்பையும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்து வருகின்றன. இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

தமிழகம் முழுவதும் நடைபெறும் அறிவிப்பில்லா மின்வெட்டுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
மின்விநியோக கட்டமைப்புகளை அவசர அடிப்படையில் புதுப்பித்து, பழைய மின் கம்பிகள் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற வேண்டும்.
கோடை கால மின் தேவையை முன்னறிவித்து தனி அவசர மின் மேலாண்மை திட்டம் உருவாக்க வேண்டும்.
சோலார், காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
கிராமப்புறங்கள் மற்றும் தொழிற்பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க தனி கண்காணிப்பு மையங்களை அமைக்க வேண்டும்.
மின்தடை தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் ஒற்றை தகவல் மையம் உருவாக்கப்பட வேண்டும்.
மின்வாரியத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தமிழகம் தொழில், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலமாக இருப்பதால், மின்விநியோகத்தில் நிலைத்தன்மை மிக அவசியமான ஒன்றாகும். மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி தமிழக அரசு நீண்டகால திட்டமிடலுடன் மின் உற்பத்தி மற்றும் விநியோக துறையில் உடனடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி வலியுறுத்துகிறது.

சி.என். இராமமூர்த்தி
நிறுவனர் தலைவர்
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.

23/05/2026

ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்று தன் சமூக மக்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்கிறார் விசிக வின் தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள்.

தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை பதவிகளில் அமர்த்தி அழகு பார்க்காமல் கட்சியின் சக நிர்வாகிகளை அமைச்சராக்கி அழகு பார்க்கும் அந்த குணம் தான் விசிகவுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க காரணம்.

தலைமைத்துவக்கான படிப்பினையை மற்றவர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்..

நம்பிய மக்களை நடுரோட்டில் தவிக்க விட்ட அன்புமணியும் இராமதாசும் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் விசுவாசம்ன்னா என்னவென்று.

25 உயிர்கள் தன் சமூகம் தங்களுடைய குடும்பங்களை காப்பாற்றும் என்று 1987 இல் இடஒதுக்கீடு கேட்டுபோராடி உயிர் இழந்தனர்.

அந்த 25 குடும்பங்களுக்கு இதுவரை ஒரு MLA சீட்டாவது கொடுத்து அழகு பார்த்ததா இந்த பாமக கட்சி.

சுயநலமாக செயல்படும் தலைவர்களை தலைமையாக தேர்ந்தெடுத்தால் வன்னியர் சமூகத்திற்கு துரோகமே செய்வார்கள்.

இதுவரை அரசியலில் எந்த பதவியையும் வகிக்காமல் தன் சொத்துக்களை விற்று பல சட்டப்போராட்டங்களை செய்து பல திட்டங்களை நமக்காக போராடிக்கொடுத்த ஐயாசிஎன்ஆர் அவர்கள் தலைமையை ஏற்போம்.!

Photos from Kshatriyas - The Ruler's post 14/05/2026

தென்னாட்டு ஜான்சிராணி என அன்போடு காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்தான் கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்கள்.

அவருடைய முதன்மையான போராட்டம் மதுக்கடை ஒழிப்பு. எங்கெல்லாம் மதுக்கடை இருந்ததோ அங்கே நேராக சென்று அடித்து நொறுக்கி மதுக்கடைகளை விரட்டியடித்தவர் தான் கடலூர் அஞ்சலை அம்மா அவர்களாவார்.

அப்படிப்பட்ட வீரத்தாயை கொள்கை தலைவராக வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பள்ளி கல்லூரி அருகே இருந்த 717 மதுக்கடைகளை மூடி உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.

கொள்கை தலைவர்களை பெயரளவில் வைக்காமல் செயல்பாட்டிலும் செய்துகாட்டுவது வரவேற்கத்தக்கது.

.

13/05/2026

ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்களின் அறிக்கை:

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.

தமிழ்நாட்டின் ஜனநாயக மரபை உயர்த்தும் புதிய பொறுப்பு!
தமிழகச் சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள நண்பர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் இதயம். அந்த உயரிய அவையின் ஒழுக்கம், கண்ணியம் மற்றும் மக்கள் நலக் கருத்துகளை சமநிலையுடன் வழிநடத்தும் பொறுப்பே சபாநாயகர் பதவி. அந்த முக்கியமான பொறுப்பிற்கு தகுதியும் அனுபவமும் கொண்ட நண்பர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அவரது பணிக்காலத்தில் தமிழக மக்களின் நலனும், ஜனநாயக மரபுகளும் மேலும் வலுப்பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக அணுகி சட்டப்பேரவையை சிறப்பாக நடத்திட அவர் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மக்கள் நலப் பயணத்தில் தொடர்ந்து உயர்ந்த சாதனைகள் படைக்க நண்பர் பிரபாகரன் அவர்களுக்கு என் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு.

— சி. என் இராமமூர்த்தி
நிறுவனத் தலைவர்,
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி.

Photos from Kshatriyas - The Ruler's post 12/05/2026

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை வன்னிய சமுதாயத்திலிருந்து ஒரு அமைச்சர்கூட அறிவிக்கவில்லை.

திமுக அதிமுக கூட இப்படி செய்ததில்லை.

இனிவரும் அமைச்சர் பட்டியலில் அமைச்சர்கள் வன்னிய சமுதாயத்திலிருந்து வந்தாலும் அந்தளவு பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

அனைத்து தொகுதிகளிலும் தவெகவால் வெற்றி பெற முடிந்தாலும் கிட்டத்தட்ட 7 மாவட்டங்களில் மட்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் போனாலும் (அதிக வடமாவட்டங்கள்) இரண்டாவது இடத்திற்கு வர முடிந்தற்கு காரணம் ஜாதி உணர்வை மறக்கடித்த தேர்தலாக இருந்தது தான்.

தவெக வின் முதல் மாநில மாநாடு போடப்பட்டது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டியில் தான்.

அந்த விக்கிரவான்டி தொகுதியில் தோல்வியுற்றதால் வந்த கோபமா?

பெயரளவுக்கு கடலூர் அஞ்சலை அம்மாள் பெயரை கொள்கை தலைவராக அறிவித்துவிட்டு இதுவரை அவர் பெயரில் எந்த திட்டத்தையும் ஏன் செயல்படுத்தவில்லை.

வன்னியர் சமுதாயம் மீண்டும் புறக்கனிக்கப்படுகிறதா?

சபாநாயகர் பதவியையாவது வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கு கொடுப்பாரா மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அனைத்து சமுதாயத்திற்கும் உரிய பிரதிநிதித்துவத்தை சமூகநீதியை விறுப்புவெறுப்பின்றி கடைபிடிக்கராரா மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

TVK Vijay #அறிவாயுதம்_ஏந்துவோம்

10/05/2026

எத்தனையோ இடையூறுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் தீர்ப்புபடி நாங்கள் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என்று பெருந்தன்மையாக தோழமைக்கட்சிகளுக்கு எந்த கட்டுபாடும் விதிக்காமல் சமூகநீதியை கடைபிடித்த மாண்புமிகு முன்னாள் முதலலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் திமுகவை ஒதுக்கவில்லை என்பதற்கு 1.53 கோடி வாக்காளர்களின் ஆதரவே சாட்சி.

திமுக எதிர்க்கட்சியாக செயல்படுவதில் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.

புதியதாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக்கழகம் அனைத்து சமுதாயத்திற்கும் அமைச்சர் பதவியில் உரிய பிரதிநிதித்துவத்தை கொடுக்க வேண்டும்.

வன்னிய சமுதாயத்தின் பல திட்டங்களான 10.5% உள்ஒதுக்கீடு, வன்னியர்பொதுச்சொத்து வாரியம், வன்னியர் நலவாரியம், NLC பிரச்சினைகளின் தீர்வு, போதைப்பொருள் ஒழிப்பு, அஞ்சலை அம்மாள் பெண்கள் பாதுகாப்பு திட்டம், இலவச கல்வி திட்டம், ஆராய்ச்சித்துறை மேம்பாடு, வருவாய் பெருக்குதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற,

அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பு ஐயா சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் போராடி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்.

கடந்த 50 ஆண்டுகாலம் எந்த அரசியல் பதவியும் இல்லாமல் சட்டப்படி போராடி பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்த வைத்தவர் ஐயா சி.என். இராமமூர்த்தி ஆவார். அவருடைய மக்களுக்கான போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

TVK Vijay #அறிவாயுதம்_ஏந்துவோம்

01/05/2026

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.

உழைப்பே உயர்வு… தொழிலாளியே உலகின் முதுகெலும்பு!

உலக தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தங்கள் உழைப்பால் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக விளங்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், மரியாதைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலையில் சூரியன் உதிக்கும் முன்பே பணிக்காக எழும் தொழிலாளியின் வியர்வைதான் இந்த நாட்டின் செழிப்பை உருவாக்குகிறது.
கட்டிடத் தொழிலாளி முதல் விவசாயி வரை…
தொழிற்சாலை ஊழியர் முதல் போக்குவரத்து தொழிலாளர் வரை…
தினக்கூலி தொழிலாளி முதல் தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர் வரை…
ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த சமூகத்தின் உயிர் நாடியாக திகழ்கிறது.

ஆனால் இன்று கூட பல தொழிலாளர்கள் குறைந்த ஊதியம், நிரந்தரமற்ற வேலை, சமூக பாதுகாப்பின்மை, பணிச்சுமை, உரிமை மறுப்பு போன்ற பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
உழைப்புக்கு உரிய மதிப்பும், வாழ்விற்கு தேவையான நலன்களும் கிடைக்க வேண்டும்.
அதுவே உண்மையான சமூக நீதி.

“உழைக்கும் மனிதன் உயர வேண்டும்” என்ற இலக்கை முன்வைத்து, தொழிலாளர்களின் உரிமைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து போராடும் என்பதை இந்த மே தின நாளில் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளியின் வியர்வைக்கு மதிப்பு கிடைக்கும் நாள் தான் உண்மையான முன்னேற்ற நாள்!
உழைப்பவர்களின் குரல் தான் இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி!

உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!
அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் நலமும், முன்னேற்றமும், உரிமையும் நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்.

— சி. என். இராமமூர்த்தி
நிறுவனத் தலைவர்
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி

23/04/2026

இன்று சென்னை லயோலா கல்லூரியில் அனைவருக்கும் அனைத்து உரிமையும் சமூகநீதிப்படி கிடைக்க அறிவாயுதம் ஏந்தி (Fight Intellectually) சட்டப்படி போராடும் தொடர்போராட்ட போராளி ஐயா சி.என் இராமமூர்த்தி அவர்கள் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை செய்த தருணம்!.

14/04/2026

ஐயா பொன்பரப்பி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Photos from Kshatriyas - The Ruler's post 01/04/2026

உரிமைக்காக போராட மட்டுமே தெரிந்த சமூகம், இந்த வன்னியர் சமூகம்!

போராடி உயிரை மட்டுமே விடத்தெரிந்த சமூகம், இந்த வன்னியர் சமூகம்!

சாதி அரசியலை நம்பி நடுரோட்டில் நின்ற சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

முன்னோர்களின் போராட்ட குணத்தை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

உண்மையான போராட்ட தலைவர்களை இனம் கண்டும் துரோகம் செய்த தலைவர்களை அரசியலுக்காக ஆதரிக்கும் சமூகம் இந்த வன்னியர் சமூகம்.

துரோகம் செய்த தலைவர்கள் இன்னும் செய்வார்கள் என்று நம்பும் சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

மற்ற சகோதர சமுதாயத்தைப் போல் எல்லா கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கும் பண்பாட்டை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

முன்னோர்களின் உழைப்பை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

அந்த உழைப்பால் சேர்த்து வைத்த சொத்துக்களை பல லட்சம்கோடி மதிப்பை அறக்கட்டளைகளாக இந்த வன்னிய சமூகத்துக்கு முன்னேற்றத்திற்காக எழுதி வைத்ததை மறந்த சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

இந்த அறக்கட்டளைகளை தன் குடும்ப பெயரில் மாற்றி எழுதி திருடிய துரோகிகளுக்கு முட்டுக்கொடுக்கும் சமூகம் இந்த வன்னியர் சமூகம்!

ஆனால் இதை அனைத்தையும் சட்டப்படி போராடி 200 லட்சம்கோடி மதிப்புடைய ஒரு வன்னியர் பொதுச்சொத்து வாரியத்தை 44-வது சட்டத்தை உருவாக்கி அமைத்து

அந்த வாரியத்தை இந்த சமுதாய மக்களுக்காக செயல்படுத்துவதற்காக

2011 இலிருந்து 2021 வரை அதிமுக அரசை தொடர்ந்து ஆதரித்து வந்தவர் ஐயா சிஎன்ஆர். 2019 இல் செயல்படுத்த எடப்பாடியார் சம்மதம் தெரிவித்தார். அப்போது தான் பாமக கூட்டணி சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். எதற்காக?

வாரியம் செயல்படுவதை நிறுத்தி வைக்கப்பட்டது!

அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து திமுகவையும் செயல்பட வைக்க, தொடர்ந்து போராடுகிறவர் ஐயா சிஎன்ஆர்.

ஆனால் திமுகவும் செயல்படுத்தவில்லை.

திமுகவிடமும் செயல்படுத்தாதவாறு துரோகிகள் தடுக்க முயற்சியெடுக்கின்றனர்.

200 லட்சம்கோடியை செயல்படுத்தினாலே இந்த சமூகம் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேற்றத்தில் தென்படும்!

ஆனால் இந்த வன்னியர் சமூகம் இதையெல்லாம் உணராமல் இன்னும் கையேந்தி பிச்சையெடுக்கவே பழக்கப்படுகின்றனர்.

உன் பணத்தை சுரண்டி உன்னையே பிச்சைக்காரனாக்குவதையே அறியாத முட்டாள்களுக்கு எடுத்துச்சொல்லி பயன் இல்லை.

200 லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் பொதுச்சொத்து வாரியத்தை செயல்படுத்தும் கட்சிகளுக்கு மட்டுமே எங்கள் வாக்கு என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாக அதை நாம் செயல்படுத்த வைக்க முடியும்.

#200லட்சம்கோடி

Want your organization to be the top-listed Non Profit Organization in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chennai
600003