Nada Rajkumar
Pioneer Tamil Broadcaster in Canadian Tamil Broadcasting ,He involved in the First Tamil Radio progr
11/18/2023
I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
09/10/2023
Vanakkam!
Hon. Nada Rajkumar sir with Toronto Mayor.
Her worship, Olivia Chow walking for the annual walkathon organized by Canadian Tamil Congress.
- Admin
வணக்கம்!
ஆசியாவுக்கு வெளியே மிகவும் பிரமாண்டமான தமிழர் தெரு விழா ஆரம்ப நாளில் (26-08-2023) நமது EAST FM Media group சார்பாக நான் விளக்கேற்றிய தருணம்.
உங்கள் அனைவரோடும் இவ்விழாவை கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி!
08/02/2023
அன்பு நண்பரின் அதிர்ச்சியளிக்கும் பிரிவு!
எங்கள் அன்புக்குரிய மூத்த ஒலிபரப்பாளரும், அன்பு நண்பருமான திரு. விமல் சொக்கநாதன் அவர்கள் விபத்து ஒன்றில் காலமானார் என்ற செய்தி நேற்று இரவு எமது நினைவுகளை அதிரவைத்தது.
என்னைவிட வயதால் மூத்தவர், ஒலிபரப்புத்துறையில் முன்னோடியாக மட்டுமில்லாமல் நெருங்கிய நண்பராக இருந்தார். இங்கிலாந்து லண்டன் செல்லும் நேரங்களில் அவர் வீட்டில் தங்கி நின்ற சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. கனடாவுக்கு இவர் வரும்போது எங்களோடு சேர்ந்து பல இடங்களுக்கு பயணம் செய்வார், மேலும் பல விழாக்களில் கலந்து கொள்வார். எமது கீதவாணி ஒலிபரப்பு நிலையத்தில் பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கியுள்ளார். அறிவிப்பாளர்களை மெருகூட்ட பல பயிற்சி பட்டறைகளை நடத்தியுள்ளார். அவரது ஒலிபரப்புத்துறை சம்பந்தமான புதிய நூல் ஒன்றை வரும் அக்டோபர் மாதம் கனடாவில் வெளியிட இருந்த நிலையில் இந்த இழப்புச் செய்தி ஆழ்ந்த துயரத்தையும் மன வேதனையும் அளிக்கின்றது.
அண்ணா அவர்களின் ஆத்மா நற்பேறு அடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
மீளா நினைவுகளுடன்,
நடா ராஜ்குமார்.
08/30/2022
We feel Proud !!! , Our East FM 102.7 stood as a media partner in this great event!!! Mr. Nada Rajkumar with Isai Puyal A R Rahman after Huge success of the Toronto Show 2022
06/18/2021
Feeling Very proud! And Thanking All people who donated for this Tamil Radiothon event conducted by EAST FM 102.7 on June 9th , 2021
ஸ்கார்புரோ வைத்தியசாலைகளில் கூட்டமைப்புக்காக இடம்பெற்ற, East FM Tamil Radiothon நிகழ்வில் சேகரிக்கப்பட்ட மொத்த நிதி 275,000 டொலர்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, Scarborough Centenary மருத்துவமனையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ வைபவத்தில், East FM ஊடக குழுமத்தின் தலைவர் திரு நடா ராஜ்குமார் அவர்களால், ஸ்கார்புரோ வைத்தியசாலைகளில் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களும் பங்குபற்றியிருந்தனர். East FM Tamil Radiothonக்கான இலக்கு, ஆரம்பத்தில் 50,000ஆக நிர்ணயிக்கப்பட்டு, தமிழ்மக்களின் பாரிய ஆதரவை அடுத்து, மூன்று தடவைகள் உயர்த்தப்பட்டு, 200,000 ஆக மாற்றப்பட்டது. எனினும், அதனை விடவும் மிக அதிகமாக, இவ்வாறு, 275,000 டொலர்களை, ஆச்சர்யம் தரத்தக்க வகையில், தமிழ் மக்கள், ஸ்கார்புரோ மருத்துவமனைகளுக்கு வழங்கியிருந்தனர். ஒண்டாரியோவின் ஆன்மாவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழ்மக்கள் இவ்வாறு அள்ளி வழங்கிய நிதியுதவிகள் உள்ளதாக, ஒண்டாரியோ முதல்வர் Doug Ford பாராட்டியதுடன், தமிழ் மக்களின் தாராள மனப்பான்மை வியப்பளிப்பதாக, டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரியும் தெரிவித்திருந்தார்.
உலகப்புகழ் எழுத்தாளர் திரு. அ .முத்துலிங்கம் ஐயா மற்றும்
EAST FM் 102.7ன் தலைமை ஒலிபரப்பாளர் திரு. நடா ராஜ்குமார் சந்திப்பின் ஒலித்தொகுப்பு.
04/16/2021
அன்பு தமிழ் உடன்பிறப்புகளே!
முதலில் இந்த இடர் காலத்தில் அயராது உழைக்கும் முன் களப்பணியாளர்களுக்கு நம் வணக்கமும் நன்றியும் உடையோம் .இவர்களில் மிகவும் பிரதானமானவர்கள் வைத்தியநிபுணர்கள் , தாதிமார் , வைத்தியசாலை ஊழியர்கள் என்பதை அனைவரும் அறிவோம் .
இந்த COVID இடர் காலத்தில் எமது வைத்தியசாலைகளுக்கு பெரும் உதவி தேவைப்படுகிறது
எங்கள் வானலை EAST FM ஊடாக SCARBOROUGH வைத்தியசாலைகளுக்கு நிதி உதவ உள்ளோம்
தயவு செய்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் நன்றி
04/14/2021
கீதவாணி உலகத்தமிழ் வானொலி ஆரம்பித்து இன்று 30 வருடங்கள் நிறைவைக்கொண்டாடுகிறோம்
இந்தநீண்டவெற்றிப்பயணத்தில் துணை நின்ற எனது
இல்லத்தரசி உமா அம்மாள்
பிள்ளைகள்
என்பெற்றோர்,சகோதரர்கள்,உறவுகள்,நண்பர்கள் ,விளம்பரதாரர்கள்,அன்றில்இருந்துஇன்றுவரைஅயராதுஉழைக்கும்அறிவிப்பாளர்கள்,தயாரிப்பாளர்கள், அன்பர்கள்,ஆதரவாளர்கள்,மற்றும் எங்களைவாழவைக்கும்தெய்வங்களானநேயர்பெருமக்கள்அனைவருக்கும்
உள்ளம்நிறையநன்றி
கடவுளுக்கு நன்றி
03/05/2021
ஒரு சுவாரசிய அனுபவம்!மகிழ்ச்சியான தருணம்!
1996-03-03 அன்று இன்றைய நாளில் கனடா ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் கனடா உதயன் முதலாவது இதழ் வெளியிடப்பெற்றது.
இப்பதிவை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை பார்க்கவும் :
https://uthayannews.ca/2021/03/04/1996-03-03-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f/
09/29/2020
Hai everyone!
I had a great time today !
Thank You Mr.Steven Del Duca !
Click here to claim your Sponsored Listing.