Daily Tamil Entry
Photojournalism is the practice of storytelling through photographs
05/04/2026
03-05-2026 அன்று
தேனிசை செல்லப்பாவுக்கு [ பாசறை பாணர் ] வீரவணக்க நிகழ்வு
கியூபெக் தமிழ் சமூகத்தால், முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்குபற்றிய தமிழ் மக்கள்
உணர்வுபூர்வமாக வீரவணக்கத்தையும், கண்ணீர் அஞ்சலியும் மலர் தூவி தெரிவித்துக்கொண்டனர்.
02/14/2026
காலமெல்லாம் காதல் வாழ்க!❣️
உ லகெங்கும் பரந்திருக்கின்ற ஒரு மந்திரசக்தி காதல். மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் காதல் உணர்வுகள் இருக்கின்றன. பறவைகள், விலங்குகள் காதலுற்று இனவிருத்தியைச் செய்கின்றன. ஆனால், மனித சமூகம் எத்தகைய ஆச்சரியங்களை நிகழ்த்துகின்றது. ஒட்டுமொத்த உலக முன்னேற்றம் அனைத்திற்கும் காதல்தானே மையப்புள்ளியாக இருக்கின்றது. அந்தப் புள்ளியே புதுப்புதுப் பிறப்புகளின் ஊற்றுக்கள். உலக வரலாற்று நீட்சியின் ஆதாரம்.
காதல் அற்புதமானது புனிதமானது தெய்வீகமானது என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், சாதி மதம் தலைதூக்கும் சந்தர்ப்பங்களில் ஏன் காதல்? என்று ஒரு பக்கத்திலும் ஆபாச நுகர்வு சதிராடும் நேரத்தில் எது காதல்? என்பது மறுபுறத்திலும் சிந்திக்கவே தோன்றுகின்றது.
அன்றுதொட்டு இன்றுவரை 'காதல்' என்பது பேசுபொருளாக இருந்தாலும் அன்று புனிதமான காதலுக்காக காதல் காவியங்களும், கலைகளும், கதைகளும் அதிகம் தோற்றம்பெற்றன. காதலின் புகழ்பாட விரும்பிய பாரதி 'காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்; கானமுண்டாம்; சிற்பமுதற்கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே' என்று பாடினார். காதல் கண்களின் தேடலாக இல்லாமல் உள்ளத்தின் தேடலாக அமையும்போதே வாழ்வில் நிலைக்கிறது.
இன்றைய காதலை நோக்கினால், சுகமானது என்பதைத்தாண்டி பலருக்குச் சுமையாகவே உள்ளது. காதலை விளையாட்டாகவும், ஏதோ வியாபாரமாகவுமே இளம்வயதினர் பார்க்கின்றனர். பொருத்தமற்ற வயதில் நெறிகெட்ட வழியில் காதல் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைச் செய்கின்றனர். இன்று ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வது எளிதாகிவிட்டது. சந்திக்கும் வாய்ப்புகள், நவீன வசதிகள் பெருகிவிட்டன. ஆனால், கருத்தொற்றுமையும் அன்பின் பிடிப்பும் இல்லாததால் பெரும்பாலான காதலில் இடைவெளி ஏற்படுகின்றது. அதுவே நிரந்தர பிரிவிற்கும், தற்கொலை எண்ணத்துக்கும் துணைபுரிகின்றது. அற்ப சுகங்களுக்காக மட்டும் தோன்றும் காதல் எவருடைய வாழ்விலும் நிலைக்காது.
எனவே , காதல் வெறும் உடலுறவு அல்ல. உளமும் சேர்ந்ததே. பெண் மற்றும் ஆணின் விரல்கள் தீண்டுதலின் தீண்டுபவை விரல்கள் அல்ல. மாறாக ஒர் இனத்தின் நாகரீகம் தன்னைத்தானே ஸ்பரித்துக்கொள்கிறது என்பதே பொருள். ஆதலினால் காதல் செய்வீர்! காலமெல்லாம் காதலோடு வாழ்வீர்!
01/20/2026
01/16/2026
Happy Birthday to an incredible singer S.Gowrish.
May your voice grow stronger, your music reach new heights, and your journey be filled with harmony and passion.
01/04/2026
The main day of the Tamil Thai Pongal festival in 2026.
will be celebrated on Thursday, January 15, 2026, in Canada and worldwide.
https://en.wikipedia.org/wiki/Pongal_(festival)
தமிழர்களின் பண்பாட்டு விழா தைப்பொங்கல்.
தைப்பொங்கல்' வெறும் பண்டிகை அல்ல. தமிழர் பண்பாட்டின் வேர். தமிழர் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த தொன்மைமிகு அடையாளம். உழைப்பின் பெருமை, இயற்கையைப் போற்றுதல் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் நம்பிக்கையின் அடையாளம்.
நாம் அனைவரும் இயற்கையின் படைப்புகள். இயற்கையை மீறி எந்தப் பயணத்தையும் மேற்கொள்ளமுடியாது. இதனால், இயற்கைக்குக் கைம்மாறு செய்வதே மனிதப் பண்பாகும்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று' என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப வாழ்வியலை வடிவமைத்தவர்கள் தமிழர்கள். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும். மற்றைய உயிர்களுக்கும் சொல்லும் நன்றியறிதலே பொங்கல் விழாவின் கருப்பொருள்.
இத்திருநாள் தை, 15, 2026 நாள். கொண்டாடப்படுவதோடு, மனிதகுல வளர்ச்சியில் கொண்டாடிய முதல் பண்டிகையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. உழவர்கள் ஆடிமாதம் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடைசெய்து பயனடையும் பருவமே தைமாதம். மாதங்களில் சிறப்புப்பெற்ற மாதமாகவும் சுபகாரியங்கள் தொடங்கும் மாதமாகவும் இருப்பதனால் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழியும் வழக்கத்தில் உள்ளது. புதிய அரிசி, பால் , வெல்லம் கொண்டு புதுப்பானையில் பொங்கி சூரியனுக்கும் , உழவுத்தொழிலுக்கு உதவும் கால்நடைகளுக்கும் பொங்கிப்படைத்து மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் கொண்ட விழாவாகும்.
தைத்திருநாள் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களையும் , பாரம்பரியங்களையும் வெளிப்படுத்தி நிற்பதோடு, தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் வட அமெரிக்கா, தென்ஆபிரிக்கா, மொரிசியஸ் என தமிழர் செறிந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. கணனியுக தற்காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படும் முறைகளில் மாற்றங்கள் இருந்தாலும் கிராமங்களில் மண்வாசனை மாறாத பொங்கல் இன்றுவரை கொண்டாடப்பட்டுவருவது சிறப்பானது.
எனவே, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தைப்பொங்கல் விழாவானது மதம்தாண்டி எம்மினத்தின் அடையாளம் , பண்பாடுகளை வெளிப்படுத்தும் தேசிய விழாவாக உள்ளது. இத்தைய விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி தமிழரின் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பரப்பவேண்டும். பொங்கி வழியும் பாலைப்போல அனைவரது வாழ்வும் செழிப்புடனும் வளங்கள் கொண்டு மேன்மையடையவும் , இனிக்கும் சக்கரைப்பொங்கல்போல் இன்புற்று அன்பூற்றுடன் வாழவும் மலரும் தைத்திருநாள் நன்னாளாக அமையட்டும்.
12/15/2025
THE AWARD FOR MIDEA TASKS.
My heartfelt thanks to the Chief Editor S. SivaMohan Thalir Tamil Radio and his wonderful team.
to nominated me for this award for my Photojournalist task and media works. to provided by NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA.
This recognition means a lot to me and inspires me to continue working with passion and dedication. also
I would like to express my sincere gratitude to Thomas S. Saras President and CEO. and the entire team for this prestigious award NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA.
எனது புகைப்பட பத்திரிகையாளர் பணி மற்றும் ஊடகப் பணிகளுக்காக இந்த விருதுக்கு என்னை பரிந்துரைத்ததற்காக தலைமை ஆசிரியர் எஸ். சிவமோகன் மற்றும் அவரது அற்புதமான குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி.
கனடாவின் தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக கவுன்சிலால் வழங்கப்பட்டது.
இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் முக்கியமானது மற்றும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து பணியாற்ற என்னைத் தூண்டுகிறது. மேலும்
இந்த மதிப்புமிக்க விருதுக்கு கனடாவின் தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக கவுன்சிலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் எஸ். சரஸ் மற்றும் முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
11/22/2025
மாவீரர்கள்
யார் இவர்கள் ?
மனித உருவில் வந்த
தமிழின் மானம் இவர்கள்
புனித தேசத்துக்காய் உயிர்கொடுத்த புண்ணிய தானம் இவர்கள்.
பெற்றவரைப் பிரிந்து
கொற்றவராய் நின்றவர்கள்
ஒற்றுமையாய் சேர்ந்து
ஒரே தட்டில் உண்டவர்கள்.
சொத்துபத்துச் சேர்த்து
சுகபோகம் விரும்பாதவர்கள்
சொந்தம் பந்தம் துறந்து
மனதால் இரும்பானவர்கள் .
விதைக்கப்பட்ட இவர்கள்
எங்களின் உறவுகள்
சிதைக்கப்பட்ட இனத்துக்காய்
சீறிப்பாய்ந்த மகவுகள்.
தியாகத்தின் உருவங்கள்
வீர வரலாற்றின் உயரங்கள்
மறவாது நாம்வவணங்கும்
மாமறவச் சிகரங்கள்.
இது கார்த்திகை மாதம்
இவர்கள் நினைவோடு
யாத்திரை செல்வோம் வாருங்கள்.
காலத்தில் சிறக்குது
கார்த்திகை மாதம்
கனவினில் பிறக்குது
காவியர் தாகம்.
ஞாலத்தில் அதிருது
உறவுகள் ஓலம்
நனைந்து கதறுது
நினைவினில் ஈழம்
காற்றினில் கலக்குது
காந்தளின் வாசம்
காதினில் கேட்குது
கல்லறைக் கோசம்
ஊற்றாகக் கசியுது
உதிரத்தின் ஈரம்
உலகமே பாடுது
உத்தமர் வீரம்
கானகம் எங்கும்
கண்ணீரின் கீதம்
காவியம் ஆகுமே
வேங்கைகள் வேதம்
வானமும் அழுதிடும்
விளக்கேற்றும் நேரம்
வஞ்சகர் பகைக்கும்
நெஞ்சினில் பாரம்
இறக்கின்ற வேளையும்
இழக்காத காதல்
இனம்வாழ அமைந்ததே
இவர்களின் சாதல்
மறக்கத்தான் முடியுமா
வரலாற்றின் பாடம் - நாம்
மடிந்தாலும் நடைபோடும்
மாவீரர் பாதம்.
11/03/2025
கனடா மொன்றியலில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரான, கணியவன் நாகராஜா என்பவர், கனடா கியூபெக் மாகாணத்தில் (கிறிக்கேற் ) துடுப்பாட்ட சிறந்த முதல் இளம் வீரராக வளர்ந்து வருகின்றார். பதினேழு வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் சகலதுறை வீரராகவும் சிறந்து விளங்குகின்றார். அத்துடன்
துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகளில் கியூபெக் மாகாணம் சார்பாக, பிற மாகாணங்களோடு சிறப்பாக விளையாடிவருவதோடு, இவரின் செயற்பாடு ஈழத்தமிழ்ச் சமுகத்திற்குப் பெருமை சேர்க்கின்றது.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Montreal, QC
Opening Hours
| Monday | 8:30am - 5pm |
| Tuesday | 8:30am - 5pm |
| Wednesday | 8:30am - 5pm |
| Thursday | 8:30am - 5pm |
| Friday | 8:30am - 5pm |
| Saturday | 8:30am - 5pm |
| Sunday | 8:30am - 5:30am |