QVCC Manpower Doha
QVCC Manpower Doha Qatar

QATAR 🇶🇦 JOBS

Urgent Hiring Kuwait

அதிகம் அதிகமாக Share செய்து உதவிடுங்கள்!
தம்பி ரியாசிற்காக ஒரு இரவு தொழிலுக்கு புல்மோட்டையில் அனைத்து மீனவர்களும் தொழிலுக்கு சென்று உதவிடுங்கள்!!
21 வயதே ஆன தம்பி ரியாஸ் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் எமது ஊரில் உள்ள அனைவருக்கும்
அவருக்கு அவசரமாக கிட்னி மாற்று சிகிச்சை செய்யவேண்டும் அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது அவசரமாக இந்த இந்த பணத்தை சேகரிக்க காலம் போதாமல் உள்ளது
எனவே எமது ஊர் கடல் தொழிலாளிகள் ஒன்று பட்டு இப்படி இந்த ரியாஸ் தம்பிக்காக ஒரு இரவைக்கு கடல் தொழிலுக்கு சென்றால் என்ன? (விருப்பம் என்றால் மாத்திரம்!)
எவ்வளவோ வெளியூர் நோயாளர்களுக்கு உதவிகள் செய்யும் எமது ஊர் உறவுகள் நினைத்தால் அல்லாஹ் நிச்சயம் உதவுவான்
முடிந்தால் முயற்சி செய்து இந்த உதவியை கட்டாயம் செய்து உதவிடுங்கள்
கிட்னி மாற்
தொடர்புகளுக்கு
0716467464,
0718781192
எனவே என்னுடைய முகநூல் நண்பர்களே! உறவினர்களே!
உங்களது குடும்பத்தில் ஒருவனாக #ரியாஸ் தம்பியை நினைத்து இந்தப்பதிவை அதிகமதிகமாக பகிருங்கள், மிக விரைவில் இந்த நோயினிலிருந்து குணமாகி சுகதேகியாக வாழ்வதற்கு அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள்.
🤲🤲🤲🤲🤲🤲🤲
#எச்சரிக்கை_பதிவு
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு..
வெளிநாடுகளில் வாழும் நம் மக்கள் தங்களது ஆசை பாசம் சுதந்திரம் என அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டு தங்கள் குடும்பத்திற்காக படாத பாடுபட்டு உழைக்கின்றனர்..
அப்படி உழைத்து குருவி சேர்ப்பதை போல் சேமித்து உறவுகளுக்கு பொருளாதாரத்தை அனுப்புவதோடு..
அவ்வப்போது தங்களது தாய் தந்தை மனைவி மக்கள் சகோதர சகோதரிகளுக்காக ஆசை ஆசையாய் சில பொருட்களை வாங்கி கார்கோ மூலமாக அனுப்பி வைக்கின்றனர்...
அவர்கள் அனுப்புவது வெறும் பொருட்கள் அல்ல, தங்களது வியர்வை, சிறுக சிறுக சேமித்த காசில் பார்த்து பார்த்து வாங்கிய பாசம் தடவிய பொருட்கள் அவை...
இந்த பொருட்கள் தங்களது வீடடைந்ததும், இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு, மகனுக்கு மகளுக்கு சகோதரனுக்கு சகோதரிக்கு என தொலைப்பேசியில் பாசத்தை பங்கு வைத்து சந்தோசத்தில் மூழ்கி போவான் இங்குள்ள வெளிநாட்டு வாசி...
தனக்காக ஒரு புத்தாடை கூட வாங்க யோசிப்பவன் தன் குடும்பத்திற்காக வாரி இறைத்திருப்பான்....
இப்படி பொருட்களை அனுப்பும் அப்பாவி வெளிநாட்டு வாசிகளை ஏமாற்றுவதற்காகவே சில கார்கோ நிறுவனங்கள் அவ்வப்போது புதிது புதிதாக முளைக்கும்..
எங்காவது ஒரு ஏரியாவில் ஒரு சிறு கடையை தற்காலிகமாக பிடிப்பது..
அதற்கு வசீகரமான விளம்பரங்கள் செய்வது, அந்த திடீர் கார்கோ நிறுவனத்திற்கு பெயர் வைப்பதில் கைதேர்ந்தவர்கள் அந்த ஏமாற்று பேர்வழிகள்..
ஜெட் கார்கோ, ராக்கெட் கார்கோ கோல்டு சில்வரு இப்படி வாய்க்கு வந்த பெயரை வைத்து விட்டு, கடைக்கு முறையான உரிமம் ஏதும் இல்லாமல்..
அதிரடியான விலை குறைப்பில், ஐந்தே நாட்களில் ஊரில் டெலிவரி என அளந்து விட்டு டன் கணக்கில் அப்பாவி மக்களிடம் பொருட்களை வாங்கி விடுவார்கள்...
அதிகபட்சம் ஒரு மாதத்தில் அந்த கார்கோ நிறுவனம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்...
நம்மாளு காசுக்கு காசை இழந்து ஆசை ஆசையாய் வாங்கிய பொருட்களையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி புழம்பி திரிவான்..
இதுபோன்று மாசத்துக்கு ஒரு புகாராவது நம் காதுகளுக்கு வருகிறது..
ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டு தான் இருப்பான், அவனை தேடி போயெல்லாம் திருத்த முடியாது..
பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
இங்கு நான் இருக்கும் குவைத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பல கிளைகளை வைத்து கார்கோ நடத்தி கொண்டிருக்கின்றனர்..
அவர்களிடமும் சில நேரங்களில் சேதமோ தாமதமோ ஏற்ப்பட்டால் அதற்கான இழப்பீட்டையும் கொடுத்து விடுகின்றனர்..
நாம் வியர்வை சிந்தி சிறுக சிறுக சேமித்த பனத்தில் வாங்கிய பொருட்களை தாயகத்திற்கு அனுப்பி வைப்பதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்...
புதுசு புதுசா முளைச்சி பூதகரமா விளம்பரம் செய்பவனை நம்பி ஏமாறாதீர்கள்..
பல ஆண்டுகளாக நம் தமிழ் மக்கள் சிலர் இங்கே கார்கோ நடத்தி கொண்டிருக்கின்றனர் அவர்களிடம் அனுப்பி வையுங்கள்..
காசு கம்மியா இருக்கேன்னு அட்ரஸ் இல்லாதவர்களிடம் கொடுத்து விட்டு பின்னர் அவனை தேடிக்கொண்டு அழையாதீர்கள்..
சமூக அக்கரையோடு

முக்கியமான செய்தி சகோதர சகோதரிகளே!!
இதனை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,
* PASSPORT
* DRIVING LICENSE,,
* NIC CARD
* BANK PASSBOOK,
* ATM CARD
முதலியவற்றில் ஏதையாவதை நீங்கள்.கண்டால்,
உடனடியாக அவற்றை அருகில் உள்ள தபாலகத்தின்
POST BOX - ல் போட்டு விடவும்.
அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள்
இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும்,
விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி
தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...... ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.

எனக்கு தெரிஞ்சி சராசரி ஒரு நாளைக்கு பத்து பேர் போல நாட்டுல இருந்து கத்தாருக்கு தொழில் தேடி ஃப்ரீ வீசால வந்துட்டு இருக்குறாங்க…
நமக்கு தெரிஞ்ச ஆக்கள் எல்லாரும் கோல் பண்ணி வேலை விசயமா கேக்குறிங்க…
எனக்கு தெரிஞ்சத,
அங்கால இங்கால பாத்தது எல்லாம் சேர்த்து கத்தாரில் வேலை தேடுவது எப்டின்னு ஒரு கட்டுரைய கோருத்து எடுத்திருக்கன் பிரயோசனமா இருக்கும் பார்த்து அத மாதிரி செய்ங்க மக்காள்.
தெரிஞ்சவங்களுக்கும் செயார் பண்ணி விடுங்க
கத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. தற்போது கத்தாரில் ஏதேனும் வேலையில் இருப்போர்
2. விசிட் விசாவிலோ அல்லது வேலை விசாவிலோ கத்தாருக்கு வந்து வேலை தேடி கொண்டிருப்போர்.
3. கத்தாருக்கு வெளியே வேறு நாட்டிலிருந்து கொண்டு இங்கே வேலைக்கு வர முயற்சி செய்வோர்.
இவர்கள் அனைவருக்கும் கத்தாரில் விருப்பமான வேலை பெறுவதற்கான சில எளிய வழிகள் கீழே:
1.பத்திரிகைகள் மூலமாக தேடுதல்
கத்தரிலிருந்து வெளியாகும் The Peninsula Qatar, Gulf-Times முதலான பத்திரிகைகளில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகள்.
இது 1, 2, 3 வகையினரும் பயன்படுத்த முடியும்.
கத்தருக்கு வெளியே இருக்கும் மூன்றாம் வகையினர்
http://www.gulf-times.com/Classified இப்பக்கத்திலிருந்து Gulf-Times வேலைவாய்ப்பு செய்திகளை பிடிஎஃப் கோப்பாக டவுன்லோட் செய்து பெறலாம். பெனின்சுலா பத்திரிகையில்
https://jobs.thepeninsulaqatar.com/ இப்பக்கத்தில் தேடலாம்.
மேலும் உங்கள் தகவலை இந்த பத்திரிகைகளில் விளம்பரமாக பிரசுரிக்கலாம்.
அதனூடாக சில கம்பனிகள் உங்களை நேர்முக பரீட்சைக்கு அழைப்பார்கள்.
விளம்பரம் பிரசுரிக்க சிறு கட்டணம் செலுத்த வேண்டும்
2. இணைய வேலைவாய்ப்பு தேடுபொறிகள்
இதன்மூலம் மூவகையினருமே பயன்பெற முடியும். குறிப்பிட்ட தளங்களில் தங்களுடைய CV அப்லோட் செய்து வைத்திருந்தால், தேவையான வேலைவாய்ப்பு வரும்போது அது தொடர்பான தகவல் மெயிலுக்கும் வந்து சேரும். முக்கியமான சில வேலைவாய்ப்பு தேடுபொறிகள்:
http://www.onlineqatar.com/jobs/employmentnews.asp
https://www.jobsinqatar.org/
http://www.easyexpat.com/en/job-offers/qatar.htm
http://www.bayt.com
http://www.gulftalent.com/home/index.php
http://jobsearch.monstergulf.com/search.html
http://www.naukrigulf.com
https://jobs.theguardian.com/jobs/middle-east/
https://www.qatarliving.com
http://www.indeed.com
3. வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள்.
இதன் மூலமும் மூவகையினருமே பயன்பெற முடியும். இதில் சில நிறுவனங்கள் கமிசன் பணம்பெறும். சற்று கவனத்துடன் அணுகவேண்டும். முக்கியமான சில முகவர் நிறுவனங்கள்:
http://www.reed.co.uk/jobs/qatar
http://dohahr.com
http://dohaenergy.workabroad.ph/profile
http://www.bacme.com/recruitment-agencies-qatar.cms.asp
http://allys.biz
http://www.cparkerworldwide.com
http://www.nesglobaltalent.com
http://www.brunel.energy/en/find-a-job
4.தொழில்வாய்ப்பு கண்காட்சிகள்.
கத்தாரில் இருக்கும் முதல் இருவகையினருக்கு உகந்த சிறந்ததொரு வேலைவாய்ப்பு வாசல்.
ஆண்டுக்கு ஒருமுறை ஏப்ரல் மாதம் Qatar National Convention Centre ல் நடக்கும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளும் நிறுவனங்களில் தமக்கு உகந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து நேரடியாக வேலைக்கு அணுக முடியும்.
CVயுடன் நேர்காணலுக்குத் தயாராக சிறந்த முறையில் உடையணிந்து செல்லலாம். நுழைவுகட்டணமேதும் இல்லை.
எனினும், ஒன்லைனில் பதிவு செய்து செல்வது கூடுதல் அனுகூலம்
மேலதிக விவரங்களுக்கு : http://www.qatarcareerfair.com.qa/en/AboutQCF.aspx
5. நிறுவன இணையதளங்கள்
கத்தாரிலுள்ள முக்கியமான பிரபல நிறுவனங்கள் பல தங்களுக்கான பிரத்தியோக இணையதளங்களைக் கொண்டுள்ளன.
அவற்றில் தங்களுக்குத் தேவையான பணியாளர் விவரங்களையும் அவை நேரடியாக அப்டேட் செய்யப்படுகின்றன. இத்தளங்களை அணுகுவது சிறப்பு.
சில முக்கியமான நிறுவனங்களின் இணையதளங்கள்:
கத்தார் எயார்வேய்ஸ் - http://careers.qatarairways.com/qatarairways/vacancysearch.aspx
ஹமத் மெடிக்கல் கோர்ப்பரேசன் - https://www.hamad.qa/EN/Join-Us/HR/Apply-Online/Pages/default.aspx
கத்தார் பெற்றோலியம் - https://www.qp.com.qa/en/Careers/Pages/Careers.aspx
கத்தார் ஃபவுண்டேசன் - https://www.qf.org.qa/participate/jobs/jobs-at-qatar-foundation
கத்தருக்கு வெளியே வாழும் மக்களைப் பொறுத்தவரை, நேரடியாக வேலை தேடி பெறும் அளவுக்கான தகுதியும் நம்பிக்கையும் உள்ளவர்கள் ஒருமுறை கத்தாருக்கு நேரடி விசிட் செய்துவிடுவது சிறந்த வழி.
கத்தாரில் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களைத் தொடர்பு கொண்டு, தங்குவதற்குரிய ஏற்பாடு ஒன்றைச் செய்துகொண்டால் நேரடியாக வந்து வேலை தேடிகொள்ளலாம்.
முக்கியமானதொரு குறிப்பு: எல்லா அரபு நாடுகளையும் போன்று கத்தாரிலும் அரபுமொழிக்கு முக்கியத்துவம் உண்டு. அதனை விட ஆங்கில அறிவு ரொம்ப முக்கியம் ஆங்கில மொழில் பேசும் அளவுக்கான திறமையினை வளர்த்துக் கொள்பவர்களுக்குக் கத்தாரில் பிரகாசமான வாய்ப்பு உண்டு.
தகவல் உதவி Qatarjobs வட்சப் குழுமம்

#முக்கிய #அறிவிப்பு....
அவசரமாக கடவுச்சீட்டு எடுக்க செல்ல இருப்பவர்கள் -
#சாதாரண #சேவை கட்டணம் ரூ.3500/- ( Normal Service)
#ஒரு #நாள் #சேவை கட்டணம் ரூ.15000/- ( Oneday Service )
Online Booking செய்ய முடியாதவர்கள் ( #எதிர்வரும் #தினத்தில் #செய்ய #முடியாமல் #இருக்கலாம்) ஆகவே எம்மை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.
( உங்களுக்கு செல்ல விரும்பிய மாவட்டத்திலும் ,விரும்பிய தினத்திலும் மற்றும் விரும்பிய நேரத்திற்கு Booking செய்து தரப்படும்.)
📞. 0764600016.
WhatsApp - 0758717702
(முழுப்பெயர் , அடையாள அட்டை இலக்கம் , பிறந்த திகதி மற்றும் Online போட்டோவில் உள்ள Reference No. 0003....எனும் இலக்கம் இவற்றை மேலே உள்ள WhatsApp இலக்கத்திற்கு அனுப்பவும்.

*கத்தரில் வேலை தேடுவது எப்படி?*
கத்தரில் வேலை தேடுவோரை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. தற்போது கத்தரில் ஏதேனும் வேலையில் இருப்போர்
2. விசிட் விசாவிலோ அல்லது வேலை விசாவிலோ கத்தருக்கு வந்து வேலை தேடி கொண்டிருப்போர்
3. கத்தருக்கு வெளியே வேறு நாட்டிலிருந்துகொண்டு இங்கே வேலைக்கு வர முயற்சி செய்வோர்.
இவர்கள் அனைவருக்கும் கத்தரில் விருப்பமான வேலை பெறுவதற்கான சில எளிய வழிகள் கீழே:
We would suggest you something for better job searching. Most of the job portals and advertisements are old or fake. So do not waste your valuable time behind that.
Try to follow the below searching methods...
*A. LARGEST WHATSAPP JOB GROUP IN QATAR*
Daily refer the “Job vacancies” WhatsApp group massages, the largest WhatsApp job Group in *Qatar* (Morethen 5,000 active members) If not today itself send the request to one of the following numbers +94 (75) 274 6615, +1 (205) 212-1553 and +974 7074 6499
The “Job vacancies” WhatsApp group are running more then seven years for the purpose of help to our brotherhood who is searching job without any helping hand.
A.1 *Follow Telegram Channel
*Plenty of job ads updated regularly*
Follow our Telegram channel.
Subscribe - https://t.me/m_jobvacancies
*B. தினசரி பத்திரிகைகள்.*
கத்தரிலிருந்து வெளியாகும் The Peninsula Qatar, Gulf-Times முதலான பத்திரிகைகளில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகள். இது 1, 2, 3 வகையினரும் பயன்படுத்த முடியும். கத்தருக்கு வெளியே இருக்கும் மூன்றாம் வகையினர் http://www.gulf-times.com/Classified இப்பக்கத்திலிருந்து Gulf-Times வேலைவாய்ப்பு செய்திகளை பிடிஎஃப் கோப்பாக டவுன்லோட் செய்து பெறலாம். பெனின்சுலா பத்திரிகையில் https://jobs.thepeninsulaqatar.com/ இப்பக்கத்தில் தேடலாம்.
*C. இணைய வேலைவாய்ப்பு தேடுபொறிகள்.*
இதன்மூலம் மூவகையினருமே பயன்பெற முடியும். குறிப்பிட்ட தளங்களில் தங்களுடைய சிவி அப்லோட் செய்து வைத்திருந்தால், தேவையான வேலைவாய்ப்பு வரும்போது அது தொடர்பான தகவல் மெயிலுக்கும் வந்து சேரும். முக்கியமான சில வேலைவாய்ப்பு தேடுபொறிகள்:
http://www.onlineqatar.com/jobs/employmentnews.asp
https://www.jobsinqatar.org/
http://www.easyexpat.com/en/job-offers/qatar.htm
http://www.bayt.com
http://www.gulftalent.com/home/index.php
http://jobsearch.monstergulf.com/search.html
http://www.naukrigulf.com
https://jobs.theguardian.com/jobs/middle-east/
*D. வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள்.*
இதன் மூலமும் மூவகையினருமே பயன்பெற முடியும். இதில் சில நிறுவனங்கள் கமிசன் பணம்பெறும். சற்று கவனத்துடன் அணுகவேண்டும். முக்கியமான சில முகவர் நிறுவனங்கள்:
REED: http://www.reed.co.uk/jobs/qatar
Doha HR: http://dohahr.com
WORKBROAD: http://dohaenergy.workabroad.ph/profile/
BAC Middle East Executive Recruitment: http://www.bacme.com/recruitment-agencies-qatar.cms.asp
Ally International: http://allys.biz
Clarendon Parker Qatar: http://www.cparkerworldwide.com/
NES Global Talent: http://www.nesglobaltalent.com
Brunel: http://www.brunel.energy/en/find-a-job
Global Women Qatar: http://www.globalwomenqatar.com
*E. தொழில்வாய்ப்பு கண்காட்சிகள்.*
கத்தரில் இருக்கும் முதல் இருவகையினருக்கு உகந்த சிறந்ததொரு வேலைவாய்ப்பு வாசல். ஆண்டுக்கு ஒருமுறை ஏப்ரல் மாதம் Qatar National Convention Centre ல் நடக்கும் இக்கண்காட்சியில் கலந்துகொள்ளும் நிறுவனங்களில் தமக்கு உகந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து நேரடியாக வேலைக்கு அணுக முடியும்.
சிவியுடன் நேர்காணலுக்குத் தயாராக சிறந்த முறையில் உடையணிந்து செல்லலாம். நுழைவுகட்டணமேதும் இல்லை. எனினும் ஆன்லைனில் பதிவு செய்து செல்வது கூடுதல் அனுகூலம். மேலதிக விவரங்களுக்கு : http://www.qatarcareerfair.com.qa/en/AboutQCF.aspx
*F. நிறுவன இணையதளங்கள்.*
கத்தரிலுள்ள முக்கியமான பிரபல நிறுவனங்கள் பல தங்களுக்கான பிரத்யேக இணையதளங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் தங்களுக்குத் தேவையான பணியாளர் விவரங்களையும் அவை நேரடியாக அப்டேட்டுகின்றன. இத்தளங்களை அணுகுவது சிறப்பு.
சில முக்கியமான நிறுவனங்களின் இணையதளங்கள்:
கத்தர் ஏர்வேய்ஸ் - http://careers.qatarairways.com/qatarairways/vacancysearch.aspx
ஹமத் மெடிக்கல் கார்ப்பரேசன் - https://www.hamad.qa/EN/Join-Us/HR/Apply-Online/Pages/default.aspx
கத்தர் பெட்ரோலியம் - https://www.qp.com.qa/en/Careers/Pages/Careers.aspx
கத்தர் ஃபவுண்டேசன் - https://www.qf.org.qa/participate/jobs/jobs-at-qatar-foundation
*G. Read job interview advertisements in major Newspaper in your home country.*
This is the best advised way of getting job by government of Qatar.
Once you selected, you will receive JOB OFFER LETTER. Later on the employer will send a "Work Visit Visa". This can be checked online for its authenticity. It’s very easy (http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=getVisaapprovalInput&language=English)
*H. Employers’ official websites.*
Go to employers’ official websites directly register your CV if not send the email to them. For your convenience number of companies with its full details can be seen here, http://www.qatcom.com/
கத்தருக்கு வெளியே வாழும் மக்களைப் பொறுத்தவரை, நேரடியாக வேலை தேடி பெறும் அளவுக்கான தகுதியும் நம்பிக்கையும் உள்ளவர்கள் ஒருமுறை கத்தருக்கு நேரடி விசிட் செய்துவிடுவது சிறந்த வழி. கத்தரில் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பின் அவர்களைத் தொடர்பு கொண்டு, தங்குவதற்குரிய ஏற்பாடு ஒன்றைச் செய்துகொண்டால் நேரடியாக வந்து வேலை தேடிகொள்ளலாம்.
முக்கியமானதொரு குறிப்பு: எல்லா அரபு நாடுகளையும் போன்று கத்தரிலும் அரபுமொழிக்கு முக்கியத்துவம் உண்டு. அரபுமொழியில் பேசும் அளவுக்கான திறமையினை வளர்த்துக் கொள்பவர்களுக்குக் கத்தரில் பிரகாசமான வாய்ப்பு உண்டு.
The BIGGEST business website in Qatar, Qatcom is The Online Yellow Pages Directory, with over 36\'000 adverts for companies in Doha Qatcom is the largest online Yellow Pages Directory, with over 24'000 listings, representing 96% of companies in Doha & Qatar
