Abcstarsingers

Abcstarsingers

#QnccLiveTamil ( #QTamils ) is an one stop social page for people to people communication and cross functional application between leading social media platforms like Facebook, WhatsApp, Youtube, Linkedin, Instagram and so on. #Qtamils announces Awards 4u

Operating as usual

26/07/2020

welcomes you for the next episode...

26/07/2020
26/07/2020

Welcome to page.

If you are good in Singing...

If you know Singing keep you going against all hurdles in life, Join with us to sing for all.

is a multi-lingual, multi-national live musical program happening 24X7

To get into our program, WhatsApp AbcstarSinger to +918111001899

Share this message to your friends who are good in singing.

இலவச Online Class ஐந்தாம் நாள் 09/06/2020

இலவச Online Class ஐந்தாம் நாள்

முக்கிய அறிவிப்பு,

உலகில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க தங்களின் நோய் எதிர்ப்புசக்தி வலுப்பெற இந்த காணொளி லைவ் யை பார்க்கவும்...

தவற விட வேண்டாம்.

தங்கள் நண்பர்களுக்கு சொல்லவும்...

https://www.youtube.com/watch?v=FQkEcI1v1Oo

வணக்கம்

இலவச Online Class ஐந்தாம் நாள்

19/04/2020

அன்புடையீர் வணக்கம்,

குழந்தைகளுடன் குடும்பமாக, குழுவாக 1330 திருக்குறளையும் 10 நாட்களில் படிக்க திருக்குறள் மேட்ரிஸ் யில் தங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

https://www.youtube.com/watch?v=VE63LGyZERk

இந்த காணொளியை முழுவதும் பாருங்கள்.

மேலும் விவரங்களுக்கு, தங்கள் பள்ளி தமிழ் துறை ஆசிரியரை அணுகவும்.

இந்த எண்ணுக்கு (+97450004291) தங்களுக்கு பிடித்த ஒரு அதிகாரத்தின் பெயரை எழுதி அனுப்பி குழுவில் இணைத்துக்கொள்ளவும்...

பங்குபெறவும். பரிசுகள் வெல்லவும்...

இப்படிக்கு,
கோ. கார்த்திகேயன்
கத்தார்
[email protected]
https://www.facebook.com/Qtamils

12/04/2020

உலகெங்கும் எலக்ட்ரானிக்ஸ் உலகம் மாத இதழை கொண்டுசேர்க்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தேவை.

தமிழ்நாட்டில் 2021 ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று தமிழ் கற்றுக்கொடுங்கும் புதிய இயந்திர மனிதனை அறிமுகம்செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் ரோபோடிக்ஸ் தொழில் வளர்ச்சி, வேளாண்மை தொழிலில் சிறியரக மின் பொறிகள் பயன்பாடு, உலகத்தரம் வாய்ந்த உணவு உற்பத்தி, நல்ல வாழ்வியல் சூழல் அமைய இருக்கிறது.

இந்த கனவுத்திட்டத்தை கிரமபுர மாணவர்களுக்கு எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி கொடுப்பதன் மூலம் சாத்தியம்.

உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் எங்களது டிஸ்ட்ரிபியூட்டராக ஆகலாம்.

நமது கிராம வளர்ச்சியை உறுதிசெய்து நமது நாட்டை நல்லரசாகவும், வல்லரசாகவும் செய்வோம் வாரீர்.

நேரடி தொடர்பிற்கு அழைக்கவும்: +97450004291

இப்படிக்கு,
கோ கார்த்திகேயன்
வாட்சப்: +97450004291
முகநூல்: https://www.facebook.com/nallai.geekay.7
நிறுவனர்: ஏபிசிமேட்ரிஸ்

07/04/2020

#eVulagamin #eVulagam #EUlagam #ElectronicsUlagam

Watch this video fully to know how easy to learn Latest Technolgy with fun on monthly basis...

07/04/2020

#QTamils

Help the needy.. Use our services... Join with us in our Training...

#TamilhowsiABC #Tamil #howsiABC 25/03/2020

#TamilhowsiABC #Tamil #howsiABC

https://www.youtube.com/watch?v=K-6B2cecFXI

இது ஒரு சமூக வலைத்தள அறிவு சார்ந்த கல்விமுறை விளையாட்டு...
சமூக வலைத்தளத்தில் தகவல் பரிமாற்றம் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, உலகில் நமது நண்பர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை குழுவில் இணைத்துக்கொண்டு நாம் விளையாடலாம்.
தற்போது திருக்குறள் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் பல திறன் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏபிசிமேட்ரிஸ் குழுவில் இணைந்து ஹௌசிஏபிசி போட்டியில் கலந்துகொள்ள இங்கு தொடவும்...
http://howsiabc.blogspot.com/2019/09/howsiabc.html
இந்த தகவலை தங்கள் குழுவில் பகிர்ந்து பயன் பெறுங்கள்.

இப்படிக்கு

தமிழ் ஏபிசி மேட்ரிஸ் குழுவினர்.வாட்சப்: +97450004291

#TamilhowsiABC #Tamil #howsiABC இது ஒரு சமூக வலைத்தள அறிவு சார்ந்த கல்விமுறை விளையாட்டு... சமூக வலைத்தளத்தில் தகவல் பரிமாற்றம் எப்படி நடக்கிறத.....

19/03/2020
18/03/2020

First Good news from China in Tamil about Corona. Thanks China Tamil Radio

16/03/2020

St Peters Hr. Sec. School Reunion.

Thanjavur, St Peters Hr. Sec. School Reunion.

16/03/2020

Thanjavur St Peter Hr Sec School, Reunion...

Teacher - Students Get-together...

Neeya Naana Episode 451 14/03/2020

Neeya Naana Episode 451

https://youtu.be/eyeymjIRKCY ::: Anyone have time to watch the full episode, please don't miss it..

The foundation to bridge the generation Gap is given a try.

It is everyone's responsibility to make it working..

Karthik

Neeya Naana Episode 451 A Neeya Naana about Thirukkural. Today's discussion is about the role of Thirukkural in our life. Economics Expert Shanmugasundaram is the guest speaker in t...

11/03/2020
10/03/2020

எச்சரிக்கை கவனம்

--------------------------------

கிட்டத்தட்ட முதல் நூறு மரணங்கள் நிகழும்வரை சீனாவும் சுதாரிக்கவில்லை. சீன புத்தாண்டின் கொண்டாட்ட நேரம் அவர்களுக்கு இப்படித்தான் விடிந்திருக்கிறது. இன்று மூவாயிரம் பேரைக் காவு வாங்கிவிட்டு, உலகத்தின் அத்தனை மூலைகளுக்குள்ளும் நுழைய ஆரம்பித்திருக்கிறது கரோனா.

எங்கோ தூரத்தில் கேட்டிருந்த சேதிகள், இன்று நம் வீட்டு கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. 'சீனாவில்தானே' என்ற மனநிலை 'இந்தியாவில்' என்றதும் கொஞ்சமாய் பதறுகிறது. சற்று நேரத்தில் அதை மறந்து, 'பெங்களூரில்தானே' என்று ஆசுவாசம் கொள்கிறது. நாளை சென்னை என்றாலும் கும்பகோனத்தில் உள்ளவனுக்கு பயம் வராது. அந்தளவிற்கு தற்காப்பு முனைப்புகள் சுரணையற்று போய்விட்டன. இது மணிக்கு மணி துயரம் அதிகமாகிக்கொண்டிருக்கும் பேரிடர் கணம்.

நம்மால் கற்பனை செய்யமுடிந்ததைத் தாண்டிய மிக மோசமான தொற்று இது. மருந்தில்லாத தொற்றுகள், ரத்தத்தின் மூலம் பரவியதற்கு இருந்த பயம் கூட காற்றில் பரவிக்கொண்டிருக்கும்போது இருக்கவில்லை. முன்னொரு காலத்தில், சார்ஸ் என்றொரு தொற்று வந்தது நினைவிருக்கலாம். அதுவும் கரோனா வைரஸ்தான். இது அதனுடைய மேம்படுத்தப்பட்ட வெர்ஷன். சார்ஸ்-2. இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நிமிடம் வரை இந்தியாவில் முப்பது பேருக்கு அந்த தொற்று வந்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் மரணக் கணக்குகள் ஆரம்பமாகிவிட்டன.

சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே தடுமாறிக்கொண்டிருக்கும்போது, நமது நிலை ரொம்பவே பரிதாபத்திற்குறியது. இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லி மக்களை நெறிப்படுத்துவதும் அத்தனை சுலபமில்லை.

அரசாங்கம் எதுவுமே செய்வதில்லை என்றவொரு பிரசங்கம் இங்கு பரவலாக உண்டு. ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு மாதத்திற்கு முன், ஹாங் காங் வழியாக நான் பயணம் மேற்கொண்டு திரும்பிய முதல் இரண்டு வாரங்களும், ஒவ்வொரு நாளும், சுகாதாரத் துறையிலிருந்து அலைப்பேசியில் அழைத்து, இன்ன இன்ன நோயறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றனவா என்று விசாரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். பயணம் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு தனிமனிதனையும் விரட்டிப் பிடித்து ஒவ்வொரு நாளும் நோயறிவதெல்லாம் எத்தனை அசாதாரணமான காரியம் என்பது யோசிக்கவே மலைப்பாக இருக்கிறது. இந்த surveillance-க்கு எத்தனை உழைப்பு வேண்டும் என்பதை ஓரளவு அந்த துறையின் சிரமங்கள் அறிந்தவன் என்ற முறையில் என்னால் சொல்லமுடியும்.

இன்னொரு விஷயம், டெங்குவை மர்மக் காய்ச்சல் என்று மழுப்பியதாக சொல்லப்படுவது. அரசின் ஒரு அறிவுரைக்கு இங்கு எத்தனை பேர் செவி சாய்க்கிறார்கள். வீட்டில் நீர் தேங்கும் தொட்டிகள் வைக்காதீர்கள் என்று சொன்னபோது அதை சட்டையே செய்யாமல் ஹிண்டு பேப்பர் படித்துவிட்டு, பின்னர் அதற்கே அபராதம் போட்டப்போது குய்யோ முய்யோவென்று கத்திய மெத்த படித்தவர்கள் எத்தனை எத்தனை பேர். வரும் எந்த ஓர் அபாயமும் எனக்கானதல்ல என்று பொறுப்பற்று திரியும் மெத்தனம் இங்கே மலிந்துப்போயிருக்கிறது. பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசாங்கத்தால் சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போட்டுவிட முடியாது.

'மர்மக் காய்ச்சல்' என்பது, கறை பட்டுவிடக்கூடாது அரசியல் சாதுர்யத்தையும் தாண்டிய அச்சுறுத்தலும் கூட. 'டெங்கு' என்ற வார்த்தைக்கு மக்களிடம் பயமே இல்லாமல் போய்விட்டது. 'மர்ம' என்றால் கொஞ்சம் பயம் சேரும். அவ்வளவுதான். இப்போது கரோனாவை வைத்துக்கொண்டு மீம்களும் அவல நகைச்சுவைகளையும் பரப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், வரப்போகும் பேரழிவு குறித்து எந்தவொரு விஷய ஞானமும் இங்கே இல்லை என்றுதான் படுகிறது. அதுதான், கரிவேப்பிலை ஜூஸில் இரண்டு சொட்டு கருவாட்டு ரத்தத்தை விட்டு குடித்தால் கரோனா அண்டாது என்ற புளுகல் பரப்புரைகளைச் செய்யச்சொல்கிறது.

தமிழ்நாடு மாதிரியான சுகாதாரத் துறையில் முன்னேறியுள்ள மாநிலத்திலேயே இந்த நிலை என்றால், வடக்கைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை.

சீனாவில் செயல்படுத்த முடிந்த மாஸ் ஷட் டவுன் முறையெல்லாம் இங்கு சாத்தியமாவென தெரியவில்லை. கல்வி நிலையங்கள், வர்த்தக மையங்கள், சிறு சிறு கடைகள், பேருந்து, ரயில், விமானம், வங்கிகள் என அத்தனையையும் வாரக் கணக்கில் மூடி வைப்பதன் சாத்தியத்தை யோசித்துப் பார்க்கமுடிகிறதா? உணவு தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, நிர்வாக குளறுபடிகள், ஒரு மிகப்பெரிய நோய்த்தொற்றை உடனடியாக சமாளிக்க மருத்துவமனை/மருத்துவர்கள் போதாமை என எத்தனை எத்தனை துயரங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.

பேராபத்து நெருங்கும் முன்னரே நாமே வலிந்து இறங்கி செய்யவேண்டியது சில இருக்கின்றன.

1) விதண்டாவாதம் செய்யாமல் சுகாதாரத் துறை அறிவிப்புகளை ஏற்பது. அது குறித்து எந்தவொரு அவநம்பிக்கை உண்டாக்கும் எந்தவொரு செய்தியையும் கூடுமானவரை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருப்பது

2) கூடுமானவரை கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களை தவிர்ப்பது. திரையரங்குகள், திருமண நிகழ்வுகள், அவசிஅயமற்ற பேருந்து/ரயில் பயணங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைய்யுங்கள்.

3) மருத்துவமனைகளுக்கு வேறேதோ பிணிக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர்கள்/ நண்பர்களை நலம் விசாரிக்க அநாவசிய விஜயம் செய்யாதீர்கள். அரசு மருத்துவமனையிலிருக்கும் முக்கால்வாசி கூட்டம் உறவினர்களும் நண்பர்களும்தான்.

4) மின்தூக்கிகள் பிரயோகிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

5) மாஸ்க் அணிவதால் இருக்கும் நன்மையைவிட கையை சுத்தகரிக்க பயன்படும் hand sanitizerகளால்தான் நன்மை அதிகம். எப்போதும் கையிருப்பு வைத்துக்கொள்ளவும். அடிக்கடி கை கழுவவேண்டியது அவசியம்.

6) மருந்தோ தடுப்பூசியோ இல்லாததால்தான் நாடுவிட்டு நாடு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதுதான் மருந்து எனில் அதை அரசே அறிவிக்கும். வாட்ஸப்பில் தினமும் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்காதீர்கள்.

7) வீட்டில் நாய் வளர்ப்பதால், மாடு வளர்ப்பதற்கு எதிரான கருத்துகளை நம்பாதீர்கள். பரப்பாதீர்கள்.

8) கரோனா வராமல் இருக்க சிறப்பு வழிப்பாட்டு கூட்டங்கள் நடந்தால் முன்வரிசையில் போய் நிற்காதீர்கள். கோவில்கள், மசுதிகள், தேவாலயங்கள் அனைத்தையும் கொஞ்சம் காலத்திற்கு ஒதுக்கி வைய்யுங்கள். கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கியமான இடங்களில் அவைதான் முதலிடம்.

இந்த பதிவையும் பகிர்ந்துவிட்டு, இதெல்லாம் யாருக்கோவெனதான் இருக்கப்போகிறோம். இதில் தனி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கடமை இருக்கிறது. அரசு பார்த்துக்கொள்ளும், அரசு முன்னெச்செரிக்கையாக இருக்கவில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்போமாயின், பிணக்குவியல்களை நம் செய்தி ஊடகங்கள் சில வாரங்களில் காட்டத் துவங்கும்.

' நமக்கு வராது' என்ற மனநிலைதான் நம் சமூகத்தின் முதல் கேடு. கூடுமானவரை தன்னொழுக்கத்துடன் போராடிப் பார்க்கவேண்டிய அவசரநிலை இது. தவறவிட்டோம் எனில், மாஸ் ஷட் டவுன் என்ற சுகாதார சர்வாதிகாரம் பிரகடனத்திற்கு வந்தே ஆகவேண்டிய நிலை வரும். நம் மக்கட்தொகையும், அதற்கு பொருந்தாத நில நெரிசலும், இந்த விஷக்கிறுமிக்கு மிகத் தோதான விளைச்சல் நிலம்.
🔥

°

04/03/2020

Hi all,

There is a Youtube video for solving Corona Virus,. Why not we take precaution..

https://www.youtube.com/watch?v=ObOP3HfmdPg

Karthik

02/03/2020

Welcome to AbcStarSingers

#AbcStartSingers is the entertainment division of #ABCmatrix

It is the world’s first multi-lingual, multi-national musical live show that happens in all time zones 24X7.

You will be given a letter (English Alphabet A to Z) in our page and you have to send us a song starting with the phonetic sound of the given letter to your WhatsApp number +918111001899

Singing makes you light. Singing brings happiness to the people who are watching you.

Videos (show all)

#eVulagamin #eVulagam #EUlagam #ElectronicsUlagam
#QTamils
St Peters Hr. Sec. School Reunion.
Thirukkuraloodunaam Video1
வெற்றியின் ரகசியம் :: Vetriyin Ragasiyam
#QatarTamilMagan #QTMawards #TamilMagan

Telephone

Address

Al Mayassa Hall
Doha

Other Theaters in Doha (show all)
Abdul Aziz Naser Theatre Abdul Aziz Naser Theatre
Abdul Aziz Nasser Theatre,Souqwaqif
Doha, 23723

A multidisciplinary art space that supports local and international creative artists.

AfrotainmentQatar AfrotainmentQatar
Doha
Doha

The Sophisticated Partiers Afrobeats..Reggae..Hip Hop..Dancehall..RnB..Top Playlists

Some Like It Hot Theatre Group Some Like It Hot Theatre Group
[email protected]
Doha

Some Like it Hot theatre group is currently taking a break.

Sound Garden Sound Garden
The Ritz-Carlton, Doha
Doha, 0000000

Family Friendly outdoor entertainment venue EVERY THURSDAY The Ritz-Carlton Doha LIVE Entertainment / KIDS Corner / Bar & Grill For more info: 3391 0378

Theatre Tots Doha Theatre Tots Doha
The Pearl
Doha

Theatre Tots offers unique drama workshops, weekly sessions, published books and parties for Early Years Foundation Stage and children up to 7 years old.

الخيمه لتجهيز الافراح والمناسبات الخيمه لتجهيز الافراح والمناسبات
الريان
Doha

تجهيزات علي أعلي مستوي وأسعار تناسب الجميع . شاهدو المنشورات وتنسيق الحفلات

Pro Event Pro Event
5015
Doha

Sports Event Management Company. Doha-Qatar