Jet Media

Jet Media

Share

Global Breaking News | Fast Updates | Cinema News | Entertainment

06/08/2026

சூர்யாவை விட 3 மடங்கு அதிகம் சம்பாதித்தேன் – நடிகை ஜோதிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் தங்களது திரைப்பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இருவரும் ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவர் ஆதரவாக இருப்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

2003ஆம் ஆண்டு வெளியான "காக்க காக்க" திரைப்படத்தின் போது, ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். அந்தப் படத்தில் சூர்யா நடிக்க ஜோதிகா பரிந்துரை செய்ததாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சூர்யா - ஜோதிகா இருவரும் அண்மையில் ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசிய ஜோதிகா,

"எனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் சூர்யாவை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் பெற்றேன். ஆனால் தற்போது அவரை விட சுமார் 30 மடங்கு குறைவாக சம்பளம் வாங்குகிறேன்" என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யா குறித்து பேசிய அவர், "சூர்யா ஒரு நல்ல மனிதர், சிறந்த கணவர். எங்கள் வீட்டில் எப்போதும் சமத்துவம் இருக்கும். நான் சமையல் செய்தால் அவரும் உதவி செய்வார். குழந்தைகள் வளர்ப்பு முதல் விடுமுறை திட்டங்கள் வரை அனைத்து முடிவுகளையும் இருவரும் இணைந்து எடுக்கிறோம்" என கூறியுள்ளார்.

ஒருவரின் வெற்றியை மற்றொருவர் மனதார கொண்டாடுவதாகவும், தங்களது வாழ்க்கையில் பரஸ்பர ஆதரவு முக்கியமானதாக இருப்பதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

04/08/2026

உதயநிதி கைது எதிரொலி: தேனியில் சாலை மறியல் போராட்டம் – ஓ. பன்னீர்செல்வம் கைது

திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

04/08/2026

உதயநிதி ஸ்டாலின் கைது: தமிழக அரசியலில் பரபரப்பு... முதல்வர் விஜய் குறித்து பேசிய விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து தெரிவித்த கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளித்திருந்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

03/08/2026

சஞ்சயைப் பார்த்து கண்ணீர் விட்டேன்! ரவி மோகன் அனுப்பிய எஸ்.எம்.எஸ் ஷாக்! ஆர்த்தியின் தாய் சுஜாதா உருக்கம்!

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

அந்த பேட்டியில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றிப் பேசிய அவர், "தனது தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த மரியாதையுடன் பேசியதைப் பார்த்துக் கண்கலங்கினேன். கணவன்-மனைவிக்குள் பிரச்சனை இருந்தாலும் பிள்ளைகள் தந்தை மீது அன்போடு இருக்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் தனது பேரனின் மேல்படிப்பு பாஸ்போர்ட் கையெழுத்திற்காக ரவி மோகனைத் தொடர்புகொண்ட போது, "நான் என்ன ஏடிஎம் மெஷினா?" என்ற பொருளில் அதிர்ச்சியளிக்கும் குறுஞ்செய்தி வந்ததாகவும் கூறினார்.

ஆனால் அந்தச் செய்தியை ரவி மோகன் அனுப்பியிருக்க மாட்டார் என்றும், அவருடன் இருக்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் மற்றும் பிற நபர்கள்தான் அனுப்பியிருப்பார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குழந்தைகளைச் சந்திக்கும் போது ஒரு ஹீலர் உடன் இருக்க வேண்டும் என ரவி தரப்பில் கூறுவது எப்படிச் சரியாகும் எனக் கேள்வி எழுப்பிய சுஜாதா விஜயகுமாரின் இந்த அதிரடிப் பேட்டி, தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது!

31/07/2026

பிக்பாஸ் 10-ல் என்ட்ரி கொடுக்கிறாரா பிரபல சீரியல் நடிகை? இணையத்தில் வைரலாகும் தகவல்!

பிக்பாஸ் தமிழ் 10வது சீசன் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போட்டியாளர்கள் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பின்றி ஒளிபரப்பானாலும், பின்னர் தமிழகத்தின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக மாறியது. முதல் சீசன் முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பின்னர் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்றார்.

சமீபத்தில் வெளியான பிக்பாஸ் 10 புரொமோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த சீசனின் சிறப்பம்சமாக, பிரபலங்களுடன் பொதுமக்களுக்கும் போட்டியாளர்களாக பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் நிகழ்ச்சி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.

அந்த வகையில், 'பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பரீனா பிக்பாஸ் 10வது சீசனில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

30/07/2026

திடீர் விஜயம்! பூட்டான் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீர் விஜயமாக பூட்டான் நாட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30/07/2026

கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி அநுர

30/07/2026

வவுனியாவில் கோர விபத்து: மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து – இருவர் உயிரிழப்பு

தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறைக்கு மரக்கறி ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

30/07/2026

104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் நாட்டை வந்தடைந்தன; பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயம்!

இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

30/07/2026

ட்ரெண்டி உடையில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... இணையத்தில் குவியும் லைக்குகள்!

நடிகை த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அணிந்திருந்த ட்ரெண்டி உடையில் எடுத்த புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி, ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கருத்துகளையும் பெற்று வருகின்றன.

Website