Fast view
FAST VIEW NEWS
அனுமதியின்றி அமைக்கப்பட்டதாகக் கூறி கோட்டை ரயில் நிலைய விவகாரத்தில் எதிர்க்கட்சியின் சத்தியாகிரகக் கூடாரத்தை அதிரடியாக அகற்றினர் பொலிஸார்!
கொழும்பு:
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்க்கட்சி குழுக்களினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரம் பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.
இன்று காலை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்களின் பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் என தற்காலிகக் கூடாரமொன்றும் அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பகுதியில் கூடாரம் அமைப்பதற்கு அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தலையிட்டு அதனை அதிரடியாக அகற்றினர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், தடையைத் தாண்டி போராட்டக்காரர்கள் அவ்விடத்திலேயே தமது சத்தியாகிரகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கோமரங்கடவவில் வீதிப் புனரமைப்புப் பணிகள்;
நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவினால் தொடக்கம்!
#கோமரங்கடவவில்வீதிப்
#ரொஷான் #அக்மீமனவினால்
08/06/2026
லெபனான் - பெய்ரூட் மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் ‘கடுமையான பதிலடி கொடுக்கும்’
நாடாளுமன்ற உறுப்பினர்
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் “தீர்க்கமான மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கும்”
என்று ஈரான் நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெஸாயி எச்சரித்துள்ளார்.
திருகோணமலை: நிலாவெளி, ஆத்திமோட்டை பகுதியில் பட்டப்பகலில் கடையிலிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07/06/2026
சிறுவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம்: பௌத்த பிக்குவிற்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறை!
அநுராதபுரம்:
வறுமை காரணமாக விகாரையில் ஒப்படைக்கப்பட்ட 10 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் விகாராதிபதிக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் தீர்ப்பு:
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்ப வறுமை காரணமாக, அவனுக்குச் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பெற்றோரால் அவர் அந்த விகாரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட விகாராதிபதி, அச்சிறுவனைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் முக்கிய விபரங்கள் வருமாறு:
சிறைத்தண்டனை: குற்றவாளியான பிக்குவிற்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை.
இழப்பீடு: பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலதிக தண்டனை: விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
தலைமறைவாகியுள்ள பிக்கு:
இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது எதிர்மனுதாரரான பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாகியிருந்தார். எனினும், அவர் இல்லாத நிலையிலேயே (In absentia) வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
தற்போது தலைமறைவாகியுள்ள பிக்குவைக் கைது செய்வதற்கான பிடியாணை (Warrant) நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்வு திருகோணமலையில் ஆரம்பம்
நிருபர் நிலாவெளி
திருகோணமலை இலங்கை மத்திய வங்கியினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை ஆரம்பமானது.
திருகோணமலை மாநகர சபை வாகன நிறுத்துமிடத்தில்
நடைபெற்ற இந்நாடளாவிய திட்டத்தின் தொடக்க நிகழ்விற்கு மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் பி. நந்தலால் வீரசிங்க தலைமை தாங்கினார்.
இன்றும் நாளையும் (இரு நாட்கள்) நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான விழிப்புணர்வை வங்கியாளர்கள் வழங்கவுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, மத்திய வங்கியின் ஆளுநரால் உள்ளூர் வர்த்தகர்களுக்கு ‘லங்கா கியூஆர்’ (LANKAQR) குறியீடுகளும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.
#டிஜிட்டல்
#விழிப்புணர்வுநிகழ்வு
#திருகோணமலையில்
🎡✨ TRINCO FUN FAIR 2026 ✨🎡
மகிழ்ச்சி, இசை, உணவு, விளையாட்டு, பட்டாசு, குடும்ப கொண்டாட்டம் — எல்லாமும் ஒரே இடத்தில்! 🥳🔥
📍 திருகோணமலை தம்மலகாமம் கோயிலடி பொது விளையாட்டு மைதானம்
📅 ஜூன் 10 முதல் 14 வரை
⏰ மாலை 5.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை
🎤 Live Music
🍔 Street Food
🎧 DJ Music Night
🎆 Fireworks Show
🎯 Fun Games & Activities
🎁 Gift Hampers & More
உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் சேர்ந்து மறக்க முடியாத 5 நாள் கொண்டாட்டத்தை அனுபவிக்க வாருங்கள்! ❤️✨
📞 தொடர்புக்கு : 0723444022
குச்சவெளி கள்ளம்பத்தை
தனன்பரிச்சான் வனப்பகுதியில் மரக்கடத்தல் முறியடிப்பு: , டாட்டா லாரி பெரிய லாரி இருவர் கைது, மூவர் தப்பியோட்டம்
திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை தனன்பரிச்சான் வனப்பகுதியில் இன்று காலை சட்டவிரோதமான முறையில் லாரி மற்றும் கார் மூலம் கடத்தப்படவிருந்த பெருமளவிலான மரக்குற்றிகளை குச்சவெளி மற்றும் நிலாவெளி பொலிஸார் இணைந்து அதிரடியாக முறியடித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
புல்மோட்டை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குச்சவெளி பொலிஸாரால் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, தனன்பரிச்சான் காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெறுமதிமிக்க மரங்களை வாகனங்களில் ஏற்றிக் கடத்த முயன்ற போதே பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
வெளிமாவடக் கும்பல்:
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. குச்சவெளி, நாவச்சோலை மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலரின் உதவியுடன் இவர்கள் இந்த பாரிய மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். வெட்டப்பட்ட மரங்களை முல்லைத்தீவு பகுதிக்குக் கொண்டு செல்வதற்கே தாங்கள் திட்டமிட்டிருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வாகனங்கள் பறிமுதல்
பொலிஸாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட மூவர் தப்பியோடியுள்ளனர். எனினும், சம்பவ இடத்தில் இருந்த இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி மற்றும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார் (Rent a car) ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
தப்பியோடிய ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டையை குச்சவெளி பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாகனங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை: பாதுகாப்பு படையினரின் பிடியிலுள்ள காணிகள் குறித்து ஊடகவியலாளர் மங்களநாத் கேள்வி!
04/06/2026
🎉 Facebook recognized me as a consistent post creator this week!
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Trincomalee
31010