Sammanthurai.lk

Sammanthurai.lk

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sammanthurai.lk, News & Media Website, Kandy.

07/03/2026

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), தனது ஏவுகணைத் தாக்குதலின் 25-வது கட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் அதிநவீன ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஈரானியப் படைகள் கதிர் (Ghadr) மற்றும் அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ஃபத்தாஹ் (Fattah) ஆகியவற்றைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

23/01/2026

எங்கள் ஊரின் அடையாளம் அழகிய முற்றம்❤️

video:- Buddhika Dilshan

Photos from Sammanthurai.lk's post 23/01/2026

*“கல்விக்கு கரம் கொடுப்போம்” – 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்*

“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அப்னான் எடுக்கேஷன் போரம் நிர்வாகிகளிடம் குறித்த கற்றல் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், எழுதுகோல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான்,

“ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது கல்வியே. பொருளாதார தடைகள் எந்த மாணவனின் கனவுகளையும் தடுக்கக் கூடாது என்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம். கல்விக்காக வழங்கப்படும் உதவி, நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு” எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக அடுத்த கட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றும், கல்வி, சமூக நலன் மற்றும் மாணவர் மேம்பாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வியை முன்னிறுத்திய இந்த முயற்சிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் ஆஷிக் உட்பட அப்னான் எடுக்கேஷன் போரம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

14/01/2026

வயதில் இளயவனாக இருந்தாலும், சமூகத்தின் நலனில் ஆழ்ந்த பற்று கொண்டவன் அப்னான்.
மக்களின் தேவைகளை நேரில் சென்று உணர்ந்து, தன்னால் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டிருக்கும் உண்மையான இளம் தலைவராகத் திகழ்கின்றான்.

அரசியலில் இலாபம் தேடு. எத்தனையோ பேர்களுக்கு மத்தியில், மக்கள் நலனுக்காக செயலாற்றும் அவனது பணிகள், இன்றைய சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றன.

மேலும் பல அரசியல், அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துக்கள்...

07/12/2025

ஆம்....
அவசர தேவைக்கு டிபோசிட் செய்பவர்கள் இந்தப் பணத்தை தவிர்த்துக் கொள்ளவும்...

( இந்தப் பணம் இன்னும் எமது வங்கிகளில் உள்ள ATM மெஷினில் அப்டேட் செய்யப்படவில்லை )

அவசியமான தகவல் என்று நினைக்கிறேன் நீங்களும் ஷேர் செய்து இன்னொருவர் பயனடையச் செய்யவும்...

07/12/2025

💥Unity is our strength 🇮🇳🇱🇰| இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் அவசர மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) தங்களது ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்த நிலையில், இன்று இலங்கையை விட்டு புறப்பட்டனர்.

07/12/2025
27/11/2025

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கியதில் செந்நெல் கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் மரணம்;இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Photos from Sammanthurai.lk's post 26/11/2025

‼️🚨🚫Road Closed 🚨‼️🚫
காரைதீவு-அம்பாறை பிரதான வீதி தற்காலிகமாக போக்குவரத்துக்காக பூட்டப்படுள்ளது.
இன்று இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணிவரை பாதை மூடப்பட்டுள்ளது

தொடர்சியாக வீதியின் மேலாக செல்லும் நீர் மட்டம் அதிகரித்து கொண்டு காணப்படுகின்றது.

Photos from Sammanthurai.lk's post 26/11/2025

விளினையடி 01 , ஜபல் பள்ளிவாசல் பின் வீதியில் மரம் ஒன்று வேரோடு குடைசாய்ந்து மின்கம்பத்தில் விழுந்துள்ளது.

_மின்சார சபைக்கு அறியத் தந்ததை அடுத்து அகற்றும் பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது._

26/11/2025

வளத்தாப்பிட்டி - அம்பாறை பிரதான வீதி...

தகவல்; ரியாஸ்

Want your business to be the top-listed Media Company in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Kandy