USF Media Network

USF Media Network

Share

Media & Social Service

Photos from USF Media Network's post 28/04/2024

சாய்ந்தருது பிரதேச ஸ்மார்ட் யூத் பாரம்பரிய கலாச்சார விழா

கபூர் அன்வர்

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சாய்ந்தருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம், சாய்ந்தருது பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய ஸ்மார்ட் யூத் 2024 புதுவருட பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா 27-04-2024 இன்று சனிக்கிழமை சாய்ந்தருது பௌசி கடற்கரை விளையாட்டு மைதானத்தில் சாய்ந்தருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தருது பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி அவர்களின் நெறிப்படுத்தலில் சாய்ந்தருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் என்.எம். சியாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை திருநாட்டின் அதிமேதகு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உருவான ஸ்மார்ட் யூத் 2024 பாரம்பரிய விளையாட்டு விழா நிகழ்வு நாடாளவிய ரீதியில் இன்று எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இடம்பெற்றது விசேட அம்சாமாகும்.

அதனைத் தொடர்ந்து ஆரம்பமான ஜனரஞ்சக விளையாட்டு விழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களான சாக்கோட்டம், முட்டி உடைத்தல், கிடுகு பிண்ணுதல்,
தேங்காய் துருவுதல், பலூன் ஊதி உடைத்தல், சங்கீத கதிரை, கயிறு இழுத்தல், மெதுவான துவிச்சக்கர சைக்கிளோட்ட போட்டி என பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க சேவை அதிபர் வி. ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட சமுர்த்தி திணைகள பணிப்பாளர் எம்.ஏ.சி. அஹமட் சாபிர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா, தேசிய இளைஞர் மன்றத்தின் உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள்,இளைஞர் கழக பிரதிநிதிகள் ,
விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Photos from USF Media Network's post 24/02/2024

இவரைக் காணவில்லை, கண்டுபிடிக்க உதவுங்கள்!

கல்முனையை சேர்ந்த M.I. உதுமா லெப்பே என்பவர் கொழும்பு மருதானையில் காணாமல் போய் உள்ளார் - இவர்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.*

கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட M.I. உதுமாலெப்பை என்பவர் நேற்று(2024/02/20) மாலை 6 மணியில் இருந்து கொழும்பு - மருதானை K.L.I. Lodge இல் வைத்து காணாமல் போயுள்ளார். இவரை யாரேனும் கண்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தாருங்கள் 0775728170 / 0754189110

*காணாமல் போனபோது வெள்ளை சாரம், லைட் கிரீன் கலர் சேட் மற்றும் தொப்பி அணிந்து இருந்தார்.

23/02/2024

#காணவில்லை அதிகம் பகிருங்கள்...

நண்பர் Hazmin Buharyயின் உடன் பிறந்த சகோதரரான முஹம்மட் றஸ்மி (கல்முனை) என்பவரை ( 22.02.2024, முற்பகல் 12.30 மணியிலிருந்து இதுவரை) காணவில்லை,

இவர் ஒரு விஷேட தேவையுடையவர் (வாய் பேச முடியாதவர்) என்பதும் குறிப்பிடத்தக்கது

கண்டவர்கள் தயவுசெய்து பின்வரும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத் தரவும் .

Hazmin 0767000689
Hidhayathullah 077 305 1933
Nazeer 077 699 4988

16/02/2024

மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேச மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கையும் இருளால் இடைநிறுத்தம்

நூருல் ஹுதா உமர்

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலில் இழுத்து காணாமல் போன மாணவர்களை சம்பவத்தை கேள்வியுற்ற நிமிடம் முதல் மீனவர்களும், பொதுமக்களும் இயந்திர படகுகளை கொண்டு தேடியும் இன்று இரவு 09.00 மணி வரை அந்த மாணவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் இருள் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய ஆறு மாணவர்களும் அவர்கள் பயணித்த துவிச்சக்கர வண்டிகளும் நிந்தவூர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Photos from USF Media Network's post 01/01/2024

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணக் காரியாலயத்தின் 2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு
--------------------------------------------------------------------------
2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (01) தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணக் காரியாலயமும் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையமும் இணைந்து கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யூ.சுசந்த தலமையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாணப் பணிப்பாளர் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படடையினருக்காக இரண்டு நிமிட மௌனம் அனுஷ்ட்டிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணக் காரியால உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்க சேவை சத்தியபிரமாண உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யூ.சுசந்த எங்களால் உறுதிகொள்ளப்பட்ட சாத்தியப்பிரமாணத்துக்கு அமைவாக எங்களது சேவையைப் பெறுவோர் பயனடைய வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் அனைவரும் தாங்கள் தங்களது கடமைகளை சரிவர ஆற்ற வேன்டும் என்றும் “வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை மெய்ப்படுத்தி மக்கள் மையப் பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு வினைத்திறன்மிக்க மனித வளத்தினைக் கொண்ட அரச சேவைகளை வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Photos from USF Media Network's post 05/03/2023

*கல்முனை முஅத்தினார் ஏ.எல்.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு மனிதாபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.*

சென் ஜூடி துணை மருத்துவக் கல்லூரியின் வருடாந்த தேசிய தொழில் தகைமை வழங்கும் விழா சனிக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் சிறந்த மனிதாபிமான செயற்பாட்டாளர் விருதினை கல்முனை முஅத்தீன் A.L.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சப்றாஸ் மன்சூர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கல்லூரியின் போசகருமான எம்.ஏ.நவாஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கல்முனை முஅத்தினார் ஷாஹுல் ஹமீத் அவர்களை வாழ்த்தி கௌரவித்தார்கள்.

Photos from USF Media Network's post 27/02/2023

ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார் !

நூருல் ஹுதா உமர்

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக, உதவி முகாமையாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ எல்.யூ. ஜூனைதாவின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில் இன்று (27) சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஸ்தாபக பிரதேச செயலாளருமான ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, கணக்காளர் நுஸ்ரத் பானு, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் பிரதேச செயலகங்களின் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 1996.03.04 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று சாய்ந்தமருது - 14 ஆம் பிரிவில் 3 வருடங்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றினார். பின்னர் சாய்ந்தமருது உப பிரதேச செயலகம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதனால் அதில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வங்கிச் சேவை 2001 ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட போது அதில் ஸ்தாபக உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு சுமார்16 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

அவரது காலப்பகுதியில் சமுர்த்தி வங்கி பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. பின்னர் சாய்ந்தமருது சமுர்த்தி வலயத்தின் உதவி முகாமையாளராக 5 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றியுள்ள இவர் அதனை தொடர்ந்து சாய்ந்தமருது சமுர்த்தி மகாசங்கத்தின் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடமையாற்றிய நிலையில், தனது பட்டப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம் இன்று சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார். இவர் சிலோன் மீடியா போரம் ஊடக அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Photos from USF Media Network's post 16/02/2023

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் கடமையேற்றார் !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக சாய்ந்தமருதை சேர்ந்த டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் இன்று (16) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் யூ.எல்.எம். நியாஸ் உள்ளிட்ட பொது சுகாதார உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் மாநகர சுகாதாரப்பிரிவினூடாக பல்வேறு சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், பாவனைக்கு உதவாத வகையில் ஒதுக்கப்பட்ட இயந்திரங்களை மீள் பழுதுபார்ப்பினூடாக மக்களுக்கு உதவும் வகையில் மாற்றியமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரின் பேரனான இவர் வைத்திய மற்றும் சுகாதார சேவைக்கு அப்பால் பிரதேசத்தின் சமூக நல செயற்பாடுகளில் டார்க் பௌண்டஷன் எனும் அமைப்பை தோற்றுவித்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Photos from USF Media Network's post 11/02/2023

சாய்ந்தமருதில் அஹதியா பாடசாலைகளை முன்னேற்றுவது சம்மந்தமான மீளாய்வுக் கூட்டம்

(அ.கபூர். அன்வர்)

சாய்ந்தமருதில் அஹதியா பாடசாலைகளை முன்னேற்றுவது சம்மந்தமான மீளாய்வுக் கூட்டம் சாய்ந்தமருது தாறுல் குரர் ஆனியா அஹதியா சம்மேளனத்தின் தலைவர் அஷ் செய்க் ஏ.எம்.அன்ஸார் தலைமையில் (11 ) அல் ஹிலால் வித்தியாலய கூட்டப மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திற்கு அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலை, அஸ் சபீனா அஹதிய்யா பாடசாலை மற்றும் தாறுல் குர்ஆனியா அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்கள் நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்

சாய்ந்தமருதில் அஹதிய்யா பாடசலைகள் ஆரம்பித்து 30 வருடமாகியும் அஹதியா பாடசாலையின் முக்கியத்துவம் இன்னும் விளங்காத மாணவ சமூகமக காணப்படுகிறார்கள். தற்கால மாணவ மாணவிகளில் பலர் மார்க்கக் கல்வியை சீராக கற்று அதன்படி நடந்து கொள்ளாததன் காரணமாக பல்வேறு வேண்டப்படாத சிக்கல்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஞாயிற்றுக் கிழமைகளில் இடம்பெறும் அவர்களது சமயம் சார்ந்த அஹதிய்யா பாடசாலைகளில் இணைந்து கொண்டு மார்க்க ரீதியான கல்வி உள்ளிட்ட அறிவைப் பெற முஸ்லிம் மாணவர்கள் அஹதிய்யா பாடசாலைகளை பயன்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதன் ஒரு அங்கங்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் மேலதிக வகுப்புக்களை நாடாத்துவ தொடர்பான முக்கியமான தீர்மானம் ஒன்றை பிரதேச செயலாளர், பள்வாசல் நிர்வாகம், தாறுல் குரர் ஆனியா அஹதியா சம்மேளனத்தின் நிர்வகம் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை நாடாத்தும் நிர்வாகதினருடன் இணைந்து எடுப்பது காலச் சிறந்தது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

11/02/2023

உங்கள் பிரதேச வேட்பாளர்களை அறிந்து கொள்ள ஒரு இணையத்தளம்

தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகம்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தளமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது.

குறித்த லிங்கில் சென்று விரும்பிய மொழியைத்தெரிவு செய்து உங்கள் மாவட்டம் மற்றும் தேர்தல் பிரதேசம்
என்பவற்றைத்தெரிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்சைக்குழு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியலை முழுமையாகப்
பார்வையிடலாம்.

உங்கள் பிரதேச வேட்பாளர்களைப்பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://eservices.elections.gov.lk/pages/ec_ct_KYC_LGA.aspx

அஷ்ரப் அலீ

10/02/2023

வெல்லவாய, புத்தல மற்றும் ஹந்தபானகல பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Want your hotel to be the top-listed Hotel in Kalmunai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Kalmunai