Delft Reporter
“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.”
மாகாண சபை முதலமைச்சர் ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தயும் நெடுந்தீவில் இருந்தே ஆரம்பிப்பேன் - பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா.
பேட்டியின் முழுமையான காணொளியின் தொடுப்பு முதல் கருத்துப் பெட்டியில்.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நெடுந்தீவை வந்தடைந்தார்.
கடலில் நடந்த வன்முறை! நடந்தது என்ன?!
இலங்கை மீனவரின் வாக்குமூலம்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் காவல்துறையினர் பயிற்சி கல்லூரியில், அணிவகுப்பு பயிற்சியின்போது திடீரென புகுந்த பாம்பைக் கண்டு அலறி ஓடிய காவலர்கள்.
28/04/2026
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த மூன்று இலங்கை தமிழர்கள் சட்ட விரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது: படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது:
ராமநாதபுரம் ஏப் 27,
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்திறங்கி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சீராகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்து மீண்டும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கட்டிருந்த இலங்கை தமிழர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பலமுறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் மனு அளித்தனர்.
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கியிருந்த பெரும்பாலான இலங்கை தமிழர்கள் மீண்டும் சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டனர்.
இந்நிலையில் மண்டபம் சிறுவர் பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலில் அருகே தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இலங்கை தமிழர்களை கியூ பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48), அவரது மனைவி ராஜினி (47), இவர்களது மகள் திபேந்தினி (20) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக கள்ள தோணியில் இலங்கைககு தப்பி செல்ல காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இலங்கை தமிழர்களை கள்ளத்தனமாக இலங்கை அனுப்புவதற்கு உதவியாக டீசல் மற்றும் பேக்குடன் நின்று கொண்டிருந்த மண்டபம் எருமை தரவை பகுதியை சேர்ந்த இலங்கையர்கள் முத்துக்குமரன் (44), விஜய் (26), கோபி (28); ஆகிய மூவர் என மொத்தமாக ஆறு பேரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மண்டபம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
28/04/2026
அல்லைப்பிட்டி "தபோவனத்தில்" தீ - கட்டடத்துடன் பெறுமதிமிக்க நூல்களும் எரிந்து நாசம்!........
அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த "தபோவனத்தின்" பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வைத்தியர் தயா சோமசுந்தரம் அவர்களால் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி குறித்த நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90 க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு மற்றும் இதர செயற்பாடுகளை கற்றுவரும் ஒரு நிலையமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிலையம் எரியுண்டதால் கற்கும் மாணவர்களுடன் குறித்த பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடற்கொள்ளையர் என நினைத்து இலங்கையைச் சேர்ந்தவரை, செருதூர் மீனவர்கள் சிறை பிடித்து நாகப்பட்டினம் கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து பாலமுருகனுக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த
25ம் தேதி மதியம் 12 மணிக்கு செருதூரில் இருந்து செருதூரை சேர்ந்த சக்திமயில் (40), அபிமன் (30),பாலசுப்பிரமணியன் (30), பழனிச்சாமி (29), கன்னியாகுமரி உவரி பகுதியை சேர்ந்த அபி (28) ஆகிய ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 26 ம் தேதி இரவு 11 மணியளவில் ஆற்காட்டுத்துறைக்கு தென் கிழக்கே 9 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு ஸ்பீடு பைபர் படகில் வந்த 3 நபர்கள் செருதூர் மீனவர்கள் கடலில் விரித்திருந்த மீன்பிடி வலையை அறுக்க முற்பட்டனர். இதில் இருதரப்பினர் இடையே நடந்த தாக்குதலில் 2 நபர்கள் அவர்கள் வந்த ஸ்பீடு பைபர் படகில் தப்பிச் சென்றனர். மற்றொருவரை செருதூர் மீனவர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர இலங்கை காங்கேசன்துறை வழலையைச் சேர்ந்த அயந்தன் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர்
தமிழ் மொழியில் பேசியதால் அயந்தனை செருதூர் மீனவர்கள்
காலை 8 மணிக்கு செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு கொண்டு வந்தனர். கடலில் மீனவர்கள் தாக்கியதில் அயந்தன்
வலது கண் புருவம், இடது பக்க தலை ஆகிய இடங்களில் ரத்தக் காயமும், நெற்றியில் வீக்கமும் ஏற்பட்டதால் சிகிக்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழையூர் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jaffna
40000