LankaFire.Com

LankaFire.Com

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LankaFire.Com, News & Media Website, Wellawatta, Colombo.

Photos from LankaFire.Com's post 12/09/2025

மிகவும் சோகமான சம்பவம்

கணவன் மனைவி பிரச்சினை வறுமை காரணமாக தயவுசெய்து பிள்ளைகளை கொலை செய்ய வேண்டாம்

12/09/2025

*அழைப்பிதழில் ஏற்பட்ட சர்ச்சை! அதிபர் பதவிகளை மாற்றும் செயற்பாடு! சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!!*

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர்களின் விருந்துபசார நிகழ்விற்கு தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ் தொடர்பாக பல தரப்பினரால் விமர்சனங்கள் உருவாகியுள்ளது.

குறித்த விமர்சனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த அழைப்பிதலில் எச் சந்தர்ப்பத்திலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படவில்லை எனவும் முழுமையாக ஆங்கில மொழியில் அழைப்பிதல் உள்ளமை அவதானிக்க கூடயதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சமூக நலன்விரும்பிகள் கருத்து தெரிவிக்கையில் குறித்த நிகழ்விற்கு திரு. சின்னப்பா நாகேந்திரராசா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டதாகவும் அதில் அவரது பதவியாக மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் என அடையாளப்படுத்தியுள்ளதாகவும் ஆதனால் பாடசாலைச் சமூக மட்டத்தில் முரன்பாடுகள் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக சமூக எதிர்வுகூறியுள்ளனர்.

குறத்த நிகழ்வின் பிரதம விருந்தினர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் குறித்த நபர் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் பல்வேறு நிதி,சொத்துமோசடிகளில் ஈடுபட்டு துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சு, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் செயலகம் என பல்வேறு உயர்பட்ட அமைப்புக்களால் விசாரணைகள் நடைபெற்று சின்னப்பா நாகேந்திரராசா அவர்களுக்கு வடமாகண கல்வி அமைச்சினால் NP/3/1/GA/06/2/2024 இலக்க 10.08.2024 திகதியிடப்பட்ட குற்றப்பத்திரம் வழங்கப்பட்டதாகவும் தொடர்ந்து முறைமைசார் விசாரணைகளுக்காக குறித்த திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களை துணுக்காய் கல்வி வலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் சி.நாகேந்திரராசா கடமையாற்றிய பாடசாலையாகிய மு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டு சிறந்த நிர்வாக நடைமுறையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் திரு.சி.நாகேந்திரராசா அவர்களை பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட குறித்த பாடசாலையில் 2016-2022 வரையான காலப்பகுதியில் அதிபராக கடமையாற்றியதாகவும், அதே பாடசாலையிலும் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பாக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வடமாகாண கல்வி அமைச்சில் அறிக்கைகள் கோரப்பட்டு தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக அவதானிக்கும்போது அழைப்பிதழ் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டமை கண்டனத்திற்குரியது எனவும், நிகழ்வின் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் பதவி பெயராக மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் என அடையாளப்படுத்தியமை வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் எனவும் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு தொடர் விசாரணைகளில் காணப்படும் நாகேந்திரராசா அவர்களை எதிராகால சிறந்த மாணவர்களை உருவாக்கும் பாடசாலைகளில் பிரதம விருந்தினராக அழைப்பதால் சிறந்த மாணவர்களை எவ்வாறு உருவாக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்?

தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் கருந்து தெரிவிக்கையில் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டு வலயத்துடன் இணைப்பு செய்யப்பட்ட திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களுக்கு மிக விரைவாக ஒழுக்காற்று கட்டளையினை மாகாண கல்வி அமைச்சு வழங்கவேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

Photos from LankaFire.Com's post 04/09/2025

🚨 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த அதிரடி கோரிக்கை! 🚨

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுள்ள கேள்விகள்:

1️⃣ இறுதிச் சடங்கு எப்போது நடந்தது?
2️⃣ எங்கு நடைபெற்றது?
3️⃣ எவ்வாறு நடைபெற்றது? (தகனம்/அடக்கம்?)
4️⃣ இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? – இருந்தால் அதன் எண் என்ன?

👉 தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக வெளிநாடுகளில் பரவி வரும் போலித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர் ஆக துணிந்து சிங்கள இளைஞன் ஒருவனால் கேட்கப்படும் இந்த கேள்விகள்

இந்தச் சம்பவம் தமிழ் அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய கேள்வியை மீண்டும் உலக முன் நிறுத்தியுள்ளது! 🌐🔥

04/09/2025

சம்பந்தன் சுமந்திரனை தவறு சொல்லி தமிழ் மக்கள் தப்பித்துக்கொள்ள முடியாது

தமிழரசு ஆதரவளர்கள் இன்றும் தலைவர் காட்டிய சின்னதுக்கு வாக்களிக்கின்றோம் என்று சொல்லுவது முழுப்பொய் சுயநலன்களுக்கும் பணத்துக்கும் சாராய போத்தல்களுக்கும் அரசியல் செல்வாக்குக்குமே வாக்களிக்கின்றனர்

கடந்த காலங்களில் தமிழரசிலிருந்து வெளியேறியவர்களில் மிக குறுகிய மக்களே முன்னணியில் இணைந்தர்கள் பெரும்பான்மையான மக்கள் தேசிய கட்சிகளிடமே சரணடைந்தனார் அதுதான் தமிழரசின் புலிநீக்க அரசியலக்கு கிடைத்த வெற்றி

மக்களை தயார்படுத்தி அரசியல் தெளிவூட்டல் செய்து தமிழ் தேசிய அரசியலை வடகிழக்கில் பலப்படுத்த சரியான கட்டமைப்பை முன்னணி கொண்டிருக்காமல் விட்டாலும் ஓரளவு அந்த பணியை செய்கின்றது என்பதனை மறுக்க முடியாது அதனை பலப்படுத்தி தமிழர்களுக்கான தனித்துவமான அரசியல் தரப்பை உருவாக்க வேண்டியது தமிழ் சிவில் அமைப்புக்கள் மக்கள் இயக்கங்கள் ஊடகங்களின் கடமையாகும் அவர்களும் சுய சிந்தனையற்று சுயநலன்களுக்குள்ளும் எடுப்பிடிக்களாகவும் வியாபாரிகளாகவும் மாறிவிட்டனர்

போராட்டத்தையும் போராளிகளின் அர்ப்பணிப்பயும் ஒருக்கணம் சிந்தித்தால் #சம்பிக்க சொல்லாமலே இதெல்லாம் தமிழ் மக்களுக்கு புரியும்

400மில்லியனை சுருட்டிய சாணக்கியன்! | விரைவில் ராஜபக்சே கைது..? | பீதியை கிளப்பும் அடுத்த நகர்வு! | 04/09/2025

செ. #நேசன் – இலங்கை அரசியல் நகர்வுகளை கணித்து தமிழ்நாட்டு ஊடகத்திடம் கருத்து

தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆக உலகின் பல பகுதிகளிலும் நன்கு பரீட்சயமான அரசியல் ஆய்வாளர். #புத்தளம் மாவட்ட #தில்லையடி யைச் சேர்ந்த திரு. செ.நேசன், அவர்கள்.
இலங்கை அரசியல் சூழ்நிலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நகர்வுகளைப் பற்றிய தனது பகுப்பாய்வை தமிழ்நாட்டில் உள்ள முன்னணி ஊடகத்திற்கு வழங்கியுள்ளார்.

அவர் தனது கருத்துரையில்,

இலங்கை அரசியல் அமைப்பில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள்,

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் நிலைமைகள் மற்றும் அவற்றின் சவால்கள்,

சர்வதேச சமூகத்தின் பங்கு மற்றும் தாக்கம்,

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளுக்கு உருவாகக்கூடிய புதிய பாதைகள்,

பற்றிய விபரங்களை ஆழமாக வெளிப்படுத்தினார்.

செ. நேசன் தனது பார்வையில் வலியுறுத்தியதாவது:
“இலங்கை அரசியலில் தமிழ் மக்களின் உரிமை தொடர்பான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் வரை அரசியல் நிலைமை மேலும் சிக்கலடையும். இனஅடிப்படையிலான உரிமை மறுப்புகள் தொடர்ந்தால், அது உள்நாட்டு அரசியல் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பெரும் அழுத்தங்களை உருவாக்கும்” எனக் குறிப்பிட்டார்.

அவரது கருத்துக்கள், தமிழ்நாட்டு ஊடகங்கள் வழியாக பரவியுள்ளதுடன், உலகத் தமிழ் சமூகத்திலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த உடக செல்வியை கீழ் வரும் தளத்தில் காணலாம்
https://youtu.be/ft1vg7xlqzA?si=vnsfcex9_JQSAZKZ

---

தொடர்புக்கு:

புத்தளம் – தில்லையடி
செ. நேசன்
[+94751503191 / [email protected] ]
Selvanayagam Nesan
















#புத்தளம் #தில்லையடி

400மில்லியனை சுருட்டிய சாணக்கியன்! | விரைவில் ராஜபக்சே கைது..? | பீதியை கிளப்பும் அடுத்த நகர்வு! | Property ...

20/08/2025

ஊர்ல வேலை இல்லை வேலை இல்லை என்று புலம்பித்திரியுறவன்..
செய்தால் இந்த வேலைதான் இல்லன்னா கடனும் லோனும்தான் என்;டு வாழ்க்கையை ஓட்டுறவன்...
செலவுக்கு காசுல்ல என்டு வெளிநாட்ல இருக்கிறவங்களுக்கு போன் செய்து காசு கேட்கிறவனுங்க...
இவரு சொல்லுற எதாவது வேலையை செய்து வாழ்க்கையில முன்னேற பாருங்க....

LankaFire.Com

Photos from LankaFire.Com's post 20/07/2025

சற்று முன் பற்றி எரிந்து கொண்டிருக்கும் கசூரினா சுற்றுலா கடற்கரையை அண்மித்த பகுதிகள். தீயை அணைக்க போராடுகின்ற பொதுமக்கள் , பொலிஸார் , இராணுவத்தினர். தமது காணிகளை உரிமையாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தாமையினால் ஏற்பட்ட விளைவு.

Photos from LankaFire.Com's post 20/07/2025

சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு
--------------------------------------------------
மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக MAG எனப்படுகின்ற மிதிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு வெள்ளிக்கிழமை (18) மிதிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் குறித்த பகுதியில் இன்றைய தினம் (20) அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிதைவடைந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணி இடநிறுத்தப்பட்டு நீதிமன்ற உத்தவுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டிருந்ததோடு குறித்த பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுவதோடு, குறித்த பகுதியில் இருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

14/07/2025

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகிய பொழுது “புலிகளின்குரல் செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர்.

புலிகளின்குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவிற்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது.

நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒளிவீச்சு காணொளிச் சஞ்சிகையில் தொடர்ந்து மாதாந்தம் இடம்பெற்ற “சமகாலப் பார்வை” என்ற நிகழ்ச்சிக்கான குரல் வழங்குபவராக நீண்டகாலமாக செயற்பட்டார். நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நேர்காணலுடன் ஒளிபரப்பாகிய “விடுதலைத் தீப்பொறி” என்கிற நிகழ்ச்சியின் குரல் வழங்குநராக செயற்பட்டார்.

தேசியத் தலைவர் அவர்களின் 50 ஆவது பிறந்தநாளை ஒட்டி நிதர்சனம் நிறுவனம் தயாரித்த “தலைநிமிர்வு 50” என்ற ஆவணப்படம் உட்பட்ட ஏராளமான ஆவண வெளியீடுகளின் பிரதான குரல் தொகுப்பாளராக புகழ்பெற்றிருந்தார்.

இடப்பெயர்வுக்கு முன்னர், நிதர்சனம் நிறுவனத்தினரை யாழ்ப்பாணத்தில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பின்னர் முள்ளியவளையில் புலிகளின்குரல் வானொலி செயற்பட்ட 1998 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்து மதிப்பளிப்பளிக்கப்பட்டார்.

புலிகளின்குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய வரலாற்றுத் தொடரான “காலச்சக்கரம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து மறைந்த கலைஞர் சங்கநாதன் அவர்களுடன் இணைந்து குரல் வழங்கியிருந்தார்.

விவசாயம் சார்ந்த கருப்பொருளை உள்ளடக்கிய “மண்முற்றம்” என்ற நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து அதில் குரல் வழங்கியுமிருந்தார்.

மக்களின் குரலாக ஒலித்த “ஊர் சுற்றும் ஒலிவாங்கி” என்ற நேர்காணல் நிகழ்ச்சியை புலிகளின்குரல் வானொலியில் தயாரித்திருந்தார். 2003 ஆண்டிலிருந்து ஊடகத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் ஆங்கில பகுதி நேர ஆசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் செயற்பட்டுவந்திருந்தார்.

அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பால் இன்று காலமானார்.

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address

Wellawatta
Colombo