SLMC INFO

SLMC INFO

Share

உண்மைச் செய்தி, உடனுக்குடன். SLMC INFO

17/03/2026

🌍⚡ உலக ஆற்றல் சந்தையில் ஈரான் முக்கிய சக்தியாக மாறுகிறதா?

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலக எண்ணெய் சந்தை தற்போது மிகுந்த கவனத்துடன் நிலைமையை கண்காணித்து வருகிறது.

சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், உலக ஆற்றல் சந்தையில் ஈரானின் பங்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

🛢️ உலகின் எண்ணெய் மற்றும் LNG போக்குவரத்தின் சுமார் 20% ஹார்முஸ் நீரிணை வழியாக செல்கிறது, இந்த வழித்தடத்தில் ஏற்படும் எந்த தடையும் உலகளாவிய விநியோகத்தை பாதிக்கக்கூடும்.

📈 சமீபத்திய பதற்றம் காரணமாக:

• உலக எண்ணெய் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன

• சில நாடுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறையும் அபாயம் உள்ளது

• உலகளாவிய விநியோக சங்கிலிகள் (Supply Chains) பாதிக்கப்படலாம்

ஆய்வாளர்கள் கூறுவதாவது:

👉 இந்த நெருக்கடி நீடித்தால் உலகளாவிய எரிபொருள் விலைகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் பொருளாதாரம் அனைத்திலும் பெரிய தாக்கம் ஏற்படும்.

⚠️ எனவே, மத்திய கிழக்கு போர் நிலைமை தற்போது உலக பொருளாதாரத்தையும் எண்ணெய் சந்தையையும் நேரடியாக பாதிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.

Photos from SLMC INFO's post 16/03/2026

“வர்ண மின்விளக்குகளின் பிரகாசத்தில் மிளிரும் கிழக்கின் முகப்பு – ஓட்டமாவடி!
அழகிய ஒளிக் காட்சியுடன் அனைவரையும் அன்போடு வரவேற்கும் எமது ஊரின் இனிய தருணம்.”

16/03/2026

நெதன்யாகு காணொளி போலி – ‘க்ரூக்’ AI விளக்கம்

16 March 2026

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தேனீர் குடித்துக் கொண்டே பேசுவது போல் வெளியிடப்பட்டுள்ள காணொளி போலியானது என்று எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் க்ரூக் கூறியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டோம், இதில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இறந்திருக்கலாம் என்று ஈரான் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார், நலமாக உள்ளார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மறுத்து வருகின்றது. தமது மறுப்பை மெய்ப்பிக்கும் வகையில் கையில் தேனீர் அருந்தியபடியே பேசும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அவர் உயிருடன் தான் உள்ளார் என்று இஸ்ரேல் அறிவித்து இருக்கும் நிலையில், அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. இந்நிலையில், இந்த காணொளி உண்மையானது தானா? என்று எக்ஸ் வலை தள பக்கத்தில் க்ரூக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த க்ரூக், நெதன்யாகு தேனீர் குடித்தபடி பேசும் காணொளி ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது.

இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்டது. தேனீர் கடையில் வெகு சாதாரணமாக ஈரான், லெபனான் பற்றி பேசுவது ஒரு போலியான காணொளி ஆகும். இந்த வீடியோவில் உண்மையான நிகழ்வு இருப்பது போன்று தெரியவில்லை.என க்ரூக் தெரிவித்துள்ளது

16/03/2026

எவ்வளவோ செய்தோம்., ஆனா யாரும் உதவல... டிரம்ப் ஆதங்கம்.!

|

16/03/2026

இலங்கையில் பௌத்த சகோதரர்களின் விகாரையில் முஸ்லிம்களுக்காக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு உண்மையிலேயே! மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சிறப்பானதொரு தருணம். ❤️❤️

16/03/2026

🚨 BREAKING NEWS:

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் - கர்ப்பிணிப் பெண் மற்றும் சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி!

16/03/2026

🔴 தனக்கு இன்பம் பொங்க இயேசுவின் பேராலே இலங்கை பெறுமதியில் 8 கோடி 50 லட்சம் விசுக்கிய பிஷப் பாதிரியார்!

16/03/2026

🇷🇺🤝🇮🇷 ஈரானுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா! – 13 டன் மருத்துவ உதவி தெஹ்ரானை சென்றடைந்தது! 🚑💊

அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா, ஈரான் நாட்டுக்கு அவசர மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது.

📦 13 டன் மருத்துவ சரக்கு

மருந்துகள், முதலுதவி பெட்டிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 13 டன் மருத்துவ உதவிகள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் நகரை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

🏥 ஈரானின் அவசர கோரிக்கை

போரால் சேதமடைந்த மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளை சீரமைக்க ஈரான் விடுத்த அவசர கோரிக்கையை ஏற்று ரஷ்யா இந்த உதவியை வழங்கியதாக கூறப்படுகிறது.

🌍 அடுத்த கட்டம் என்ன?

மருத்துவ உதவியுடன் மட்டும் ரஷ்யாவின் ஆதரவு முடிவடையுமா?

அல்லது எதிர்காலத்தில் ஈரானுக்கு நேரடி அரசியல் அல்லது ராணுவ ஆதரவாக ரஷ்யா களமிறங்குமா? என்ற கேள்வி சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.

⚡ புதிய கூட்டணி உருவாகிறதா?

அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்யா – ஈரான் உறவு மேலும் வலுப்பெறுகிறதா? என்ற விவாதம் உலக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

#ரஷ்யா #ஈரான் #விளாடிமிர்_புதின் #தெஹ்ரான் #சர்வதேசசெய்திகள் 🌍

16/03/2026

பச்சிளம் குழந்தைகள் உட்பட ஏராளமான அப்பாவிகளை கொன்றெடுத்த சாத்தான் உனது மரணத்தை இச்சமூகம் எதிர்பார்த்தவர்களாக.

15/03/2026

கொல்லப்பட்ட 160 சிறுமிகளின் தாய்மார்கள், தமது குழந்தைகள் கொல்லப்பட்டமைக்காக ட்ரம்புக்கு நன்றி கூறுவார்கள் என நினைக்கிறீர்களா?

-மனிதாபிமானத்துக்க ஆதரவாக மெட்ரிட் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த ஸ்பெயின் உறுப்பினரின் குரல்

நன்றி

15/03/2026

இப்போதைய காலகட்டத்தில்
திறந்த மேனியாக உலா வரும்
மாற்று நாட்டவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை,
மாறாக இப்படி உலாவரும் பெண்களை தான் அனைவரும் கண்டுகொள்கிறார்கள்..
ஆண்கள் கண்களில் தவறு உள்ளது என்று இப்போது சொல்வார்கள்,
ஆம் உங்களது மனதில் இப்படி கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விடயம் இருக்கும் போது, ஆண்கள் கண்களில் தவறு இருப்பது ஒருபோதும் தவறில்லை..
மறைக்க வேண்டிய இடங்களை மறைக்காமல்
முகத்தை மட்டும் மறைத்து என்ன பயன்?

தூண்டுவது பெண்கள் தான்,
ஆண்கள் என்ன செய்வது..

அதற்கு ஏற்றார் போல் தனது கணவன்மாரை, குடும்பத்தினரை இப்பெண்கள் மாற்றி அமைத்துள்ளார்கள் குடும்பத் தலைவர்களுக்கும் இதன் பாரதூரம் புரிவதில்லை

எது எவ்வாறாயினும் இறைவனை பயந்து கொள்ளுங்கள்..

அல்லாஹ் போதுமானவன் 🤲🏻

12/03/2026

மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மாணவி ஆயிஷத் நுஸைபா தேசிய மட்டத்திற்கு தெரிவு.

வலய, மாவட்ட மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிகளில் தெரிவாகி கடந்த 07 ம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற 2026 ம் ஆண்டிற்கான மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் (MATHEMATICS OLYMPIAD) போட்டியில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும், வலயத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்- ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் தரம்-6 ல் கல்வி கற்கும் இவர், மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரியின் குடிசார் பொறியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் M.B.A.பாயிஸ், ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியை A.F.F.முஜீபா ஆகியோரின் புதல்வியாவார்.

மாணவியின் இச்சிறப்பான சாதனைக்காக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர், குடும்பத்தினர், நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

எதிர்வரும் 28 ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியிலும் மாணவி அப்துல் பாயிஸ் ஆயிஷத் நுஸைபா சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டு எமது மாவட்டத்திற்கும், மண்ணுக்கும் பெருமை சேர்க்க பிரார்த்தனைகளுடனான வாழ்த்துக்கள்.

அத்துடன் இவ்வெற்றிக்காக மிகச்சிறப்பாக பயிற்றுவிக்கும் ஓட்டமாவடி ECGO கல்வி நிலைய பணிப்பாளர் நவாஸ் ஆசிரியர் மற்றும் கணிதப்பாட ஆசிரியர்களான சுக்ரி, ஹக்கீம், அஸ்மீர் (பிரதி அதிபர்), ஷிஹாம், அஸ்மின், பிரதீப் அவர்களுக்கும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி கொண்டிருக்கும் ஏனையோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(அஸ்ஹர் அலி)

Want your organization to be the top-listed Government Service in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Eravur
Batticaloa
52200