Success Path
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Success Path, Motivational Speaker, A3 Mala Thangaraj Apartment, Varanasipalayam Pirivu, Vavipalayam, Chennimalai.
27/06/2025
https://youtu.be/c3r4OM3wuLc?si=H-JzYeOpl01rCtvt
சமுதாயம் என்றால் என்ன? ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் ஒரு சமுதாயக் கட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதர்களும் சமுதாய கட்டம.....
25/06/2025
https://youtu.be/8bJiNiOnZ14?si=nHZR6Lc7PGjUNRTL
வளர்க்க வேண்டியது நற்குணமா...? சிற்குணமா...? பொறாமை என்னும் சிற்குணத்தை விட்டொழிப்போம்.பாராட்டி பழகுவோம்.நம்மில் தோன்றும் புதிய மனிதம்.
24/06/2025
https://youtu.be/IC8ozVlW5ak?si=j0CKYqsliNpmtvbs
இயலாமை Disability x Inability நம்மில் தூர தூக்கியெறிய வேண்டிய இயலாமை எது...?இயலாமை இது எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.Anubhuthi AIஅனுபூதி AI@Anubhuthi180
23/06/2025
https://youtu.be/XHrSzrivU80?si=P3dLUHcw3kpB_Dyg
தற்குறி - தனித்திறனாளர்கள் தற்குறி - தனித்திறனாளர்கள் Anubuthi AI அனுபூதி AI
23/06/2025
https://youtu.be/cGBYa-mVef4?si=SI02-W2gJwu4iUEB
அறியாமை என்னும் இருள் நீக்கி தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிடுவோம் அறியாமை என்னும் இருள் நீக்கி தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிடுவோம் Anubuthi AIஅனுபூதி AI@Anubhuthi180
10/06/2025
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
அன்றாடம் ஒரே பணியை செய்து களைப்படைந்து விட்டீர்களா...?
ஒரு மாறுபட்ட நிறுவனத்தில் பணி செய்ய ஆர்வமாக உள்ளீர்களா...?
அடிப்படை ஊதியமாக எட்டு கிராம் தங்கத்துக்கு நிகரான ஊதியம் பெற விரும்புகிறீர்களா...?
எவ்வளவு சம்பாதித்தும் சேமிப்பில் நிற்கவில்லையா...?
நம் சம்பாதிக்கும் செல்வத்தை எட்டாக பிரித்து செலவு செய்வதன் மூலமாக ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை நம்புகிறீர்களா...?
உடனே கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி PAO பணிக்கு விண்ணப்பித்திடுங்கள்...
👇👇👇
Apply now to click This Link: https://www.anubhuthiai.com/careers/jobdescriptions/PROGENY%20ADMIN%20OFFICER/67e26c94702045cb944027e4
--------
Reference என்ற இடத்தில் பாலச்சந்தர் என்பதை தெரிவு செய்திடுக.
-------
உங்களில் ஒருவன்
தமிழினியன் முருகேசன்
பயிற்சி ஆசிரியர் & திருப்பூர் மாநகர இயக்குனர்
அனுபூதி AI
9629188853
AI | ANUBHUTHI அனுபூதி AI என்பது உங்கள் அன்றாட வாழ்க்கை சவால்களை சமாளிக்கவும், படிப்படியாக வளர்ச்சி அடையவும் உதவும் ஒரு புதும.....
03/06/2025
சீரான தலைமைத்துவம்
03/06/2025
anubuthiai.in
சுயதொழில் செய்ய திறனும் நல்ல யோசனையும் உள்ளவரா...
முதலீட்டுக்கு ஏற்ற பொருள் வளம் இல்லாதவரா...
உங்கள் சிந்தையில் உதித்த தொழிலை செயல்படுத்த சிறந்த முதலீட்டாளரை தேடுபவரா...
உங்களுக்காக இதோ ஒரு அற்புத வாய்ப்பு
--------
தொடர்புக்கு
தமிழினியன் முருகேசன்
பயிற்றுநர்,
அனுபூதிAI (பி) லிட்.,
9629188853
14/05/2025
Apply through
https://forms.gle/EaGMwZkGopGKHyi5A
05/05/2025
அப்படினா
மாத்தி யோசிப்போம்....
--------------
"அப்பா ...."
"என்னடா ...
"தாத்தாவையும் பாட்டியையும் பாக்கணும் போல இருக்குப்பா ... "
"ஞாயிற்றுக்கிழமை போலாம் ..."
"இவ்ளோ பெரிய வீடு இருக்கு. எதுக்கு அவங்கள எங்கையோ கொண்டு போய் வச்சிருக்கீங்க.? எப்பவாச்சும் பாக்கப் போகும் போதெல்லாம் அவங்க எப்படி அழுவுறாங்க தெரியுமா ...? "
"எங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போனு உங்கிட்ட கேட்டாங்களா ...?"
"ஒருதடவை கூட அப்படி கேட்டதில்லப்பா. நல்லா படிக்கணும் , நல்லா சாப்பிடணும், அப்பா அம்மா பேச்சு கேட்டு சமத்தா இருக்கணும் இப்படித்தாம்ப்பா சொல்வாங்க. ஆனா போய்ட்டு வரேன்னு சொன்னதும் கையப் புடிச்சுக்குவாங்க. அவங்க கண்ணெல்லாம் கலங்கும். கையெல்லாம் நடுங்கும்பா.... "
"இப்ப என்ன பண்ணனும்கிறே .. அவங்கள போய் பாத்துட்டு வரணுமா , வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா....? "
"அவங்கள நம்ம கூடவே வச்சுக்கலாம்ப்பா ..."
"சரி ... நான் சொல்ற மாதிரி செஞ்சீன்னா தாத்தாவும் பாட்டியும் வீட்டுக்கு வந்துருவாங்க ... "
"என்ன செய்யணும் சொல்லுங்க ... என்ன வேணா செய்றேன்ப்பா ... "
அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை அப்பா விளக்கமாக சொல்கிறார். இரண்டு நாட்கள் கடந்து வந்த ஒரு சனிக்கிழமை அரைநாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த மகன் கையில் ஒரு பரிசுக் கோப்பையோடு அம்மாவைத் தேடுகிறான்.
"அம்மா ... அம்மா .... "
"என்னடா செல்லம் ..."
"பள்ளிக்கூடத்துல எனக்கு பரிசுக் கோப்பை குடுத்தாங்கம்மா ..."
"அப்படியா .. வெரிகுட் ... எதுக்காக குடுத்தாங்க ...?"
"என் வீடு - அப்படிங்கற தலைப்புல ஓவியப் போட்டி வச்சாங்க. நான் ஒரு வீடு கட்டுனா எத்தனை அறை இருக்கும் . அதுல யாரெல்லாம் இருப்பாங்க. வீட்டைச் சுத்தி எப்படிப் பராமரிப்பீங்க வீடு என்ன டிசைன்ல இருக்கும் .... இது மாதிரி அம்சங்களோட எங்க கனவு வீட்டை வரைஞ்சு குடுக்கச் சொன்னாங்க.... "
"ஓஹோ ... நீ எப்படி வரைஞ்சே ..?"
"நான் நம்ம வீட்டையே ரோல் மாடலா வச்சு வரைஞ்சேன் ... "
"சூப்பர் ... அதான் பரிசு கிடைச்சிருக்கு. இது உன் அப்பா டிசைன் பண்ண வீடாச்சே ... நீ வரைஞ்ச படத்தைக் காட்டேன் பார்க்கலாம் ... "
"இந்தாங்கம்மா .... "
"அடடா அழகா இருக்கே .. முன்னால ஒரு பூந்தோட்டம். பின்னால ஒரு காய்கறித் தோட்டம். வீட்டைச் சுத்தி தென்னை, முருங்கை, பப்பாளி மரங்கள். சூப்பர்டா .... "
"வீட்டுக்குள்ள பாருங்கம்மா ... "
"அய்யோ விசாலமான ஹால் , ஹாலோட ரெண்டு பக்கமும் அறைகள். ஒண்ணு உனக்கும் உன் மனைவிக்கும்... ஓக்கே. ஒண்ணு உன் குழந்தைகளுக்கு. டபுள் ஓக்கே . எதிர்த்தாப்புல கிச்சன். அதுக்கு பக்கத்துல ஒரு ரூம் பூட்டிக் கிடக்குதே ஏன் ....? பாத்ரூமா ...? எங்களோட ரூம் எங்கே ...? "
"அய்யோ அம்மா பாத்ரூம் வெளிய இல்ல. மூணு ரூம்லயும் அட்டாச்டு. பூட்டிக்கிடக்குதே அதுதான் உங்க ரூம். அதுல என்ன எழுதி இருக்கேன்னு படிச்சுப் பாருங்க .... "
"அப்பாவையும் அம்மாவையும் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதால் பூட்டப்பட்டிருக்கிறது ... "
"என்னடா இப்படி எழுதி இருக்கிறே ... "
"உங்களை விட பரவாயில்லைல அம்மா. நீங்க தாத்தாவையும் பாட்டியையும் முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு அவங்க ரூமை ஸ்டோர் ரூம் ஆக்கிட்டீங்க... ஆனா நான் உங்களை முதியோர் இல்லத்துல சேர்த்தாலும் உங்க ரூமை உங்க ரூமா மட்டும்தான் வச்சிருக்கேன் ... இந்த ஒரு பாய்ண்ட்டுக்குதாம்மா எனக்கு முதல் பரிசே கிடைச்சுது ...! "
"அடப் போடா நீயும் உன் பாய்ண்ட்டும் .... "
****
"ஏங்க நான் ஸ்டோர் ரூமை சுத்தம் பண்றேன். நீங்க காரை ரெடி பண்ணுங்க .... போய் அத்தையும் மாமாவும் கூட்டிட்டு வந்துரலாம்..... "
"என்ன திடீர்னு .... நாளைக்குத்தானே ஞாயித்துக்கிழமை ... இன்னைக்கே பாக்கப் போலாம்ங்கிறே ... நாளைக்கு ஏதாவது புரோகிராம் வச்சிருக்கியா ...? "
"மண்ணாங்கட்டி ... நாம அவங்களை பாக்கப் போகல கூட்டிட்டு வரப் போறோம் ... "
"கனவேதும் கண்டியா ... அவங்களை கூட்டிட்டு வந்து கொஞ்சநாள் வீட்டுல வச்சிருக்கணும்னு ... "
"கனவு இல்லைங்க. பையன் கற்றுத்தந்த பாடம். அவங்கள நிரந்தரமா நம்ம கூடவே வச்சுக்கப் போறோம். அதுவும் ராஜா ராணியாட்டம்... "
காரை ரெடி செய்வது போல் போர்டிகோ சென்ற அப்பாவும் மகனும் உள்ளங்கைகள் உயர்த்தி தட்டிக் கொண்டார்கள்.
"செம நடிப்புடா மகனே ... "
"நீங்க சொன்னபடி செஞ்சேன். செம மூளைப்பா உங்களுக்கு ... "
இவர்களைப் பார்த்ததும் வாயகலச் சிரிக்கப் போகும் தாத்தா பாட்டியைப் போல, காசுக்கு வாங்கிய அந்த பரிசுக்கோப்பையும் வாய் விரிய சிரித்துக் கொண்டிருந்தது.
----------
தமிழினியன் முருகேசன்
உளவியல் பயிற்றுநர்
Psychological Trainer
Success Path
♥அதிகபட்ச தண்டனை!
♥குமாரசாமியின் ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்கு, திருமணம்.
திருமண மண்டபம், நிரம்பி வழிந்தது. சாப்பாட்டு கூடத்தில் நின்றிருந்த அக்கா அருகில் சென்றார், குமாரசாமி.
''வாப்பா தம்பி... ரொம்ப சந்தோஷம்; வரமாட்டியோன்னு நெனச்சேன்.''
''என்னக்கா நீ... உன் கையால எவ்வளவு சோறு சாப்பிட்டிருப்பேன். பொண்ணும், மாப்பிள்ளையும் ஜோடி பொருத்தம் சூப்பர். எந்த ஊரு?''
''திருநெல்வேலி பக்கம். சரி... எங்க சம்சாரம்?''
''ஊர்ல ஒரு கல்யாணம்.''
♥''சரிப்பா... டிபன் சாப்பிட்டியா?''
''இதோ,'' என்று, பந்தியில் உட்காரப் போனார், குமாரசாமி.
வரிசையில், மணப்பெண்ணின் தாய் மாமன், மாதவன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை கண்டு, சட்டென்று திரும்பினார்.
''என்ன தம்பி... சாப்பிடல?''
''கைய கழுவிட்டு வந்துடறேன்,'' என்று சொல்லி, வெளியே வந்தார்.
திருமண கூடத்தில் சிரிப்பும், கும்மாளமும் ஆக்கிரமித்திருக்க... ஓரமாக நாற்காலியில் அமர்ந்தார், குமாரசாமி.
♥நாதஸ்வரம் மங்களகரமாக முழங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று, எல்லா சத்தங்களையும் மீறி, பின் வரிசையில் ஒரு சலசலப்பு... திரும்பி பார்த்தார், குமாரசாமி.
ஆஜானுபாகுவான நபர், மற்றொரு நபரின் சட்டை காலரை பிடித்து அடிக்காத குறையாக, ''மச்சான்னு பார்க்க மாட்டேன். வகுந்துடுவேன். யாருடா உங்ககிட்ட மரியாதையா எதிர்பார்த்தாங்க. பெருசா விசாரிக்கிற... அப்பவே நினைச்சேன், இங்க வந்தா, உன் முகத்துல முழிக்கணுமேன்னு...
''எனக்கு வாச்சாலே ஒருத்தி, அவ சொல்லி அனுப்புனா, 'பார்த்தா, நாலு கேள்வி கேளு'ன்னு... தோ பாரு, காசு, பணம் இருக்குன்னு ஆடாத... அழுகி, செத்துடுவ... என் சாபம் பலிக்குதா இல்லியான்னு பாரு...
♥''வெள்ளை வேட்டி, சட்டையோட வந்துட்ட கல்யாணத்துக்கு... சொன்ன வார்த்தையை காப்பாத்த முடியாதவன்,'' பிடியில் மாட்டிய நபரின் கண்களில், கோபம் கொப்பளித்தாலும், கொஞ்சம் மிரண்டு தான் போனார்.
''என்ன மாமா... நாலு பேர் முன், ஏன் இப்படி நடந்துக்கறீங்க... நாம, பேசி எத்தனை நாளாச்சு?'' பதிலுக்கு, கோபப்படாமல் கேட்டார்.
அதற்குள் சிலர், அவர்களை விலக்கி விட்டனர்.
♥குமாரசாமி இருக்கும் இடத்தை நோக்கி வந்தார், மாதவன். அதை தவிர்க்கும் பொருட்டு, கத்திய நபரிடம் சென்று, தோள் தட்டி, அரவணைத்து, வேறு வரிசைக்கு அழைத்துச் சென்றார், குமாரசாமி.
''உடம்பு படபடக்குது. யாராவது கொஞ்சம் காபி கொண்டாங்களேன்,'' பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டார், குமாரசாமி.
கொஞ்ச நேரம் குமாரசாமியும் பேசவில்லை; அந்த நபரும் பேசவில்லை.
காபி வந்தது. வேண்டாம் என்று மறுத்தார்.
♥அவரின் தாடை நரம்புகள் துடிப்பதை பார்த்த குமாரசாமி, காபியை வற்புறுத்தி கொடுத்தார். சில மடக்குகள் குடித்தவர், தலை குனிந்து சிந்தித்தார்.
அவருடைய எண்ண ஓட்டத்தை மாற்ற, ''எம் பேரு, குமாரசாமி... கல்யாண பெண்ணோட ஒண்ணுவிட்ட தாய் மாமன். நீங்க?''
''நான், வேலுமணி. மாப்பிளையோட உறவு. என்ன இருந்தாலும், நான் அப்படி நடந்துகிட்டிருக்க கூடாது. சே... சின்ன பசங்க மாதிரி, சட்டைய பிடிச்சு, கத்தி சுத்தியுள்ளவங்கள்லாம் பார்த்து... நீங்க, என்ன தப்பா நினைச்சீங்களோ,'' என்றார், வேலுமணி.
♥''கண்டிப்பா இல்ல. சில பேர் உணர்ச்சிய காட்டிக்க மாட்டாங்க. நீ, மறைக்க தெரியாத வகை. ஆனா, ஒரு விசேஷத்துல, இது மாதிரி நடக்க கூடாது தான்,'' மென்மையாக அவருக்கு புரிய வைத்தார், குமாரசாமி.
''உங்கள, அண்ணனா நெனச்சு சொல்றேன். பணமில்லாதப்ப ஒண்ணு, பணமிருக்கிறப்ப ஒண்ணுன்னு, நாக்கு புரண்டு பேசுது... ஏன் சார், உலகம் இப்படி சுயநலமா மாறிடிச்சு... பாதிக்கப்பட்டவனுக்கு தானே தெரியும், இது மாதிரி ஆளோட செயல் தந்த வலி,'' வேலுமணி சொல்ல, ஓரளவுக்கு இவர் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்று புரிந்தது, குமாரசாமிக்கு.
♥ஆனால், ஏதும் பேசவில்லை.
''இந்தப்பய, என் சொந்த மச்சான். ஸ்கூல்ல படிக்கும்போது, அவனோட அக்காவை கட்டிக்கிட்டேன். கூடப்பிறந்த தம்பியாட்டம் பார்த்துகிட்டேன். எனக்கு, பொண்ணு பொறந்தா... நானும், மனைவியும், இவனையே மாப்பிள்ளையா நினைச்சோம்... மாமனார், மாமியாரும் ஒத்துகிட்டாங்க. இவன் கூட, அப்ப அத மறுத்து பேசினதில்ல.
'
♥'ஆனா, பயலுக்கு, 'கவர்மென்ட்' வேலை கெடைச்சது. ரொம்ப மாறிட்டான். நடுவுல, பெரியவங்களும் போய் சேர்ந்தாங்க. இவனுக்கு எடுத்து சொல்ல ஆளில்ல... வேலை பார்க்குற பொண்ணு தான் வேணும்ன்னு வேற எடத்துல போனான். சரி, விதின்னு விட்டேன்.
''அந்த மகராசி என்ன சொன்னாளோ தெரியல. 'இது, எங்கப்பா வீடு. கிளம்புங்க'ன்னு சொல்லிட்டான். 'பொண்ணுக்கும் சொத்துல உரிமை உண்டு'ன்னு சட்டம் பேச, எனக்கு பிடிக்கல. மரியாதை இல்லைன்னு வெளியேறிட்டேன்...
♥''இதை, நன்றியில்லேன்னு சொல்றதா; இல்ல, நம்பிக்கை துரோகம்ன்னு சொல்றதான்னு தெரியல. ஆனா, அவன் மேல கோபம் மட்டும் குறையல. நான் பண்ணின பாவம், இது மாதிரி கல்யாணத்துல பார்க்க வேண்டிருக்கு. நானே முகத்த திருப்பிக்கிட்டாலும், வந்து, 'அக்கா சவுக்யமா'ன்னு கேட்டு நடிக்கிறான், இந்த நாசக்காரன். நான் கோபப்படறது நியாயம் தான?'' என்றார், வேலுமணி.
சிரித்தார், குமாரசாமி.
''கண்டிப்பா நியாயம் தான். அதுமட்டுமில்ல, அதிகபட்ச தண்டனை தரணும்,'' என்றார்.
♥''என்ன சொல்றீங்க... தண்டனையா?''
''ஆமாம், வேலுமணி... இப்ப நீங்க கோபப்பட்டீங்களே... இது, தண்டனை இல்ல. இதால உங்க உடம்புக்கு தான் கெடுதல். நான் சொல்ற தண்டனை, உங்க மனசுக்கும், உடம்புக்கும் நல்லது.''
கொஞ்சம் நார்மலாகி சிரித்தார், வேலுமணி.
♥''அது என்ன தண்டனை?''
''இங்க... கல்யாண பெண்ணுக்கு, சொந்த தாய் மாமன் ஒருத்தர் இருக்காரு; எனக்கு, ஒண்ணுவிட்ட தம்பி. அவனும், நானும், 10 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர்ல, ஒரு கம்பெனி ஆரம்பிச்சோம். ரெண்டு பெரும், ஆளுக்கு, 20 லட்சம் போட்டோம். கஷ்டப்பட்டு தான் புரட்டி குடுத்தேன்.
''ஆனால், விதி... ஒரே வருஷத்துல, என் மனைவிக்கு நோய் வந்தது. வேற வழியில்லாம, கம்பெனி லாபத்துல, தம்பிக்கிட்ட சொல்லி, சிறு தொகையை, கடனா எடுத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல, சில பேப்பர்ல கையெழுத்து போடச் சொல்லி, கொஞ்சம் பணத்தை கொடுத்து, என்னை கம்பெனியிலேர்ந்து விலக்கிட்டான்.
♥''கடைசியில, நான் ஆரம்பிச்ச இடத்துலேயே வந்து நின்னேன். வாடகை வீடு. அவன் நினைச்சிருந்தா, எனக்கு கொடுத்த பணத்தை, கடனா நினைச்சு, வட்டியோட திரும்ப வாங்கி, என்னை கம்பெனியிலேயே வெச்சிருந்திருக்கலாம்.
''ஆசை, பேராசை... என் நிலைமைய சாதகமா பயன்படுத்திக்கிட்டான். அவமானப்பட்டு, ஏமாந்தவன்னு பட்டம் வாங்கினது தான் மிச்சம். ஆனா, அப்புறமா வேற தொழில் பண்ணி, இப்ப நல்லா இருக்கேன். எதுக்கு இத சொல்றேன்னா, அவன் மேல கோபப்படல. ஆனா, அவனுக்கு தண்டனை தரணும்ன்னு நினைச்சேன்,'' என்றார், குமாரசாமி.
♥''கோபம் வரல... ஆனா, தண்டனை... புரியலீங்க,'' என்றார், வேலுமணி.
''நீங்க, எங்க வீட்டுப்பிள்ளை படம் பாத்திருக்கீங்களா?'' சம்பந்தமில்லாமல் கேட்டார், குமாரசாமி.
''ம்... பார்த்திருக்கேன்,'' என்றார், வேலுமணி.
''சரி... அந்த படத்துல எந்த காட்சி உங்களுக்கு பிடிக்கும்?''
''எம்.ஜி.ஆர்., பாடிக்கிட்டே நம்பியாரை சாட்டையால அடிக்குற காட்சி. எனக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் பிடிக்கும்.''
''வெரிகுட்... அந்த படத்துல அதுதான் பிடிச்ச காட்சி இல்லியா?''
''ஆமாம்.''
♥''சரி... அதே படத்துல, மற்ற எவ்வளவோ காட்சிகள் வரும். அதுல, எவ்வளவு சுவாரஸ்யம் இருக்கும்ன்னு சொல்ல முடியுமா?''
'ம்ஹூம்... சில காட்சிகள் போரடிக்கலாம்.''
''அதெல்லாம் ஞாபகம் இருக்கா... உங்களுக்கு?''
''ம்ஹூம்... எப்படி ஞாபகம் வரும், ஏன் அத ஞாபகம் வெச்சுக்கணும்... நமக்கு பிடிக்காத காட்சி, எப்படி நம் மனதில் தாங்கும்?'' என்றார், வேலுமணி.
''அப்ப, வாழ்க்கையில் நமக்கு பிடிக்காதவங்கள பத்தியும், பிடிக்காமல் நிகழ்ந்த சில நிகழ்வுகள் பத்தியும் ஏன் ஞாபகம் வெச்சுக்கணும்... புரியுதா, வேலுமணி?'' என்று கேட்டார், குமாரசாமி.
''புரியுது. ஆனா, சினிமா வேற. வாழ்க்கை வேற தான?''
♥''ஒரு சினிமாவுக்கே மதிப்பு கொடுத்து, பிடிச்சத ஞாபகம் வச்சுக்கிட்டு, பிடிக்காத காட்சிகளை மறக்கறோம்னா... வாழ்க்கையில், மன நிம்மதிக்கும், உடல் நலத்துக்கும் ஊறு விளைவிக்கும் பிடிக்காத நபர்களை, பிடிக்காத விஷயங்களை ஏன் மறக்க கூடாது?'' என்றார், குமாரசாமி.
வேலுமணிக்கு புரிந்தது.
♥''எனக்கு ஏற்பட்ட அந்த சோகத்துக்கு அப்பறம், என் தம்பிய பத்தி பேசறதே இல்ல; நினைக்கறதும் இல்ல. சொல்லப் போனா, அவன ஒரு பொருட்டா நினைச்சு, என் நேரத்தை செலவழிக்க மாட்டேன். நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். இதுபோல, ஒரு பொது நிகழ்ச்சியில பார்த்தா, கண்டுக்காம நகர்ந்திடுவேன்.
♥''இப்ப கூட பாருங்க, தம்பிய பார்த்ததும், விலகி வந்திட்டேன். காலம் பூரா அவன நினைச்சு கோபப்படறது; நியாயம் கேக்கறேன்னு, பொது இடத்துல அவனை முறைக்கிறது; பார்க்கிறவங்ககிட்ட, அவன பத்தி புறம் பேசறது...
''அவனுக்கு கெட்ட பேரு வரணும்ன்னு, மனசுக்குள் திட்டம் போடறது; இப்படி நான், என் நேரத்தை அந்த கெட்டவனுக்காக ஒதுக்கறது சரியா... சீ... இவன் எல்லாம் ஒரு மனுஷனான்னு நினைச்சு, விலகறது சரியா... அவனை ஒரு புழுவா கூட நினைக்காம இருக்கறதுதான், நான் அவனுக்கு கொடுக்கற தண்டனை...
♥''சம்பந்தப்பட்டவங்க போகப் போக புரிஞ்சுப்பாங்க... யாருக்குமே, ஒரு பெரிய அவமானம்ன்னா அது, மத்தவங்க தன்னை மதிக்காம போறது தான். வேண்டாத விஷயங்கள நினைக்கிற நேரத்துல, நம் முன்னேற்றத்த பத்தி நினைக்கலாமே... புரிஞ்சுக்குங்க, வேலுமணி,'' என, முடித்தார், குமாரசாமி.
''ரொம்ப நன்றிங்க... ரொம்ப வருஷமா, இது, என் புத்திக்கு எட்டல... நினைக்க எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க... எதுக்கு இந்த புழுக்களை பத்தி நினைச்சு நேரத்தை வீணடிக்கணும்... வேறு வழியில்லாம, எங்கேயாவது பார்க்க நேர்ந்தா, புது ஆள் மாதிரி கடந்து போயிடணும்.
♥''அப்படியும் பேச நேர்ந்தா, கடமைக்காக, இரண்டொரு வார்த்தை பேசிட்டு, போக வேண்டியது தான். அதுதான் நாம கொடுக்கற, தண்டனை,'' என்றார், வேலுமணி.
-------
தமிழினியன் முருகேசன்,
உளவியல் பயிற்றுநர்
Psychological Trainer
Success Path
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the public figure
Telephone
Address
A3 Mala Thangaraj Apartment, Varanasipalayam Pirivu, Vavipalayam
Chennimalai
641666