Meena Dev

Meena Dev

Share

State Secretary - BJP Tamilnadu

Photos from Meena Dev's post 17/06/2026

இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில், மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அணி நிர்வாகிகளின் சிறப்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது!

Photos from Meena Dev's post 14/06/2026

இன்று மாலை, நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது, வல்லன்குமாரவிளை பகுதியில் அமைந்துள்ள அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Photos from Meena Dev's post 14/06/2026

"அம்ருத் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் இரணியல் ரயில் நிலையப் பணிகளை, பாஜக தேசிய துணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. D K Aruna அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்."

Photos from Meena Dev's post 14/06/2026

மண்டைக்காடு சக்தி சதன் திருமண மண்டபத்தில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 12 ஆண்டுகால சாதனை விளக்கக் கருத்தரங்க நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் துணைத் தலைவர் திருமதி. D K Aruna அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மோடி அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துச் சிறப்புரையாற்றி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்!
​திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
BJP Tamilnadu BJP Kanyakumari Narendra Modi

05/06/2026

ஒரு மரத்தின் பழங்களைப் பார்த்து நாம் பாராட்டுகிறோம்; ஆனால் அதை வளர்த்த வேர்களை மறந்துவிடக் கூடாது.

அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். அதே நேரத்தில், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, இல. கணேசன் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் போட்ட அடித்தளத்தின் மேல் தான் இன்று தாமரை உயர்ந்து நிற்கிறது.

1996-ல் பாஜக அரசு வெறும் 13 நாட்களிலேயே முடிந்தது. அப்போது பலர் “பாஜக முடிந்துவிட்டது” என்றார்கள். ஆனால் தொண்டர்களின் உழைப்பு, கொள்கையின் வலிமை, மக்கள் நம்பிக்கை ஆகியவற்றால் பாஜக மீண்டும் எழுந்து இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக உயர்ந்து நிற்கிறது.

அதனால் அரசியலில் எந்த சவாலும் நிரந்தரம் இல்லை. தனிநபர்களை விட கொள்கையும் தொண்டர்களுமே ஒரு இயக்கத்தின் உண்மையான பலம்.

நான் ஒரு நபருக்காக பாஜகவில் இல்லை; ஒரு சித்தாந்தத்திற்காக பாஜகவில் இருக்கிறேன்.

நேற்றும் பாஜக… இன்றும் பாஜக… என்றும் பாஜக…

Narendra Modi

BJP Tamilnadu

Photos from Meena Dev's post 05/06/2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் புத்தேரி பகுதியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக சுற்றுச்சூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நமது தாமரைச் சொந்தங்களுடன் இணைந்து கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கினேன்.
​இந்த உன்னதமான நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த சுற்றுச்சூழல் பிரிவின் மாவட்டத் தலைவர் திரு. குமார் ஆர்.எஸ்.குமார் அவர்களுக்கும், அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

04/06/2026

அன்பு சகோதரர் திரு K.Annamalai அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Photos from Meena Dev's post 28/05/2026

இன்று (28/05/2026), சேலம் மாநகர் மாவட்டச் சேவா சமிதி அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் திரு. சசிகுமார் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், மண்டல் மையக்குழு நிர்வாகிகள் மற்றும் அணி/பிரிவு மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
​இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. பொன். பாலகணபதி அவர்களும், தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநில/மாவட்ட அணிப் பிரிவு நிர்வாகிகள், மண்டல் மையக்குழு நிர்வாகிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
BJP Tamilnadu

Photos from Meena Dev's post 28/05/2026

இன்று (28/05/2026), தருமபுரி மாவட்ட பாஜ‌க அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் திரு. C. சரவணன் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், மண்டல் மையக்குழு நிர்வாகிகள் மற்றும் அணி/பிரிவு மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
​இக்கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.பொன் பாலகணபதி அவர்களும்,தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட அணி/பிரிவு நிர்வாகிகள், மண்டல் மையக்குழு நிர்வாகிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
BJP Tamilnadu BJP Kanyakumari

18/05/2026

"நாகர்கோவில் இந்துக் கல்லூரிப் பகுதியைச் சேர்ந்த திரு. V. நாகராஜன் - திருமதி. P. சிவமணி அவர்களின் புதல்வன் திருநிறைச்செல்வன் N.S. விஷ்ணு, திருநிறைச்செல்வி S.J. கிருஷ்ணபிரியா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்."

Want your public figure to be the top-listed Public Figure in Nagercoil?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Nagercoil