Subam Herbal Clinic
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subam Herbal Clinic, Medical and health, Keelaiyur post, Melur.
#நீரழிவு_நோய் ( #சர்க்கரை ) குணமாக சுலப மருத்துவம்
கெடுதலான உணவுகளை தவிர்க்க பாதி நோய் குணமாகும். தவிர்க்க வேண்டியவை மைதா உணவுகள், பதப்படுத்தப் பயன்படும் கெமிக்கல்ஸ், உணவின் சுவையூட்ட சேர்க்கப்படும் டால்டா, அஜினோமோட்டோ போன்ற கெமிக்கல்ஸ், எண்ணெயில் பொரித்த சைவ அசைவ உணவுகள், ஆசிடிக் கலக்கப்பட்ட உணவுகள், கிழங்கு வகைகள், புளி போடப்பட்ட உணவுகள் மற்றும் புளித்த உணவுகள் முதலியவை தவிர்க்க .
சேர்க்க வேண்டிய உணவுகள் அடிக்கடி சேர்த்துக் கொள்ள உடல் வலிமை பெறும். அவை கருப்பு கவுனி அரிசி, வாழைப்பூ, வாழைத்தண்டு, பாகற்காய், முருங்கை கீரை மற்றும் கீரை வகைகள், வெண்டைக்காய், சுண்டைக்காய் முதலியன.
மூன்றாவது தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது ( தோராயமாக 3 லிட்டர்) நோயை முழுமையாக குணப்படுத்த உதவும். #சிஷ்யன்
கர்ப்பிணி பெண்கள் சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று இந்த மருந்தை பயப்படாமல் பயன் படுத்துங்கள்....பிரசவம் சுகப்பிரசவமாக அமையட்டும் 👍
அம்புட்டு தகவல்கள் இந்த ஒத்த படத்தில்! கோடைகால குறிப்புகள் 👍
இன்றைய தினம் ஒரு தகவல் தினமலர் செய்தி திருச்சி 22.3.2023
நீரிழிவு நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் -ஒட்டுமொத்த மருத்துவ தகவல்கள்...
நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் 👍பலன் கிடைக்கும் 👍
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை👍நம் நலம்... நம் கையில் 👍
இயற்கை வயாகரா!
முருங்கை பூ..
பேலியோ உணவு முறை என்றால் என்ன?
மாவுச்சத்து உணவைக் குறையுங்கள் என்று கூறுகிறீர்கள் ? அப்படி என்றால் என்ன?
பதில்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
பேலியோ - பழைய என்ற சொல்லில் இருந்து தோன்றிய வார்த்தை
தொன்மையான உணவு என்று பொருள் கொள்ளலாம்
விவசாயம் பல்கிப் பெருகும் காலத்திற்கு முன்பு மனித இனம்
வேட்டையாடி இனமாக இருந்தது.
அவர்கள் சாப்பிட்டது
வேட்டையாடி கிடைத்த விலங்கின் மாமிசம்
அந்தந்த இடங்களில் அந்தந்த கால சூழ்நிலையில் கிடைக்கும் பழங்கள்
பெர்ரி வகைகள் , மூலிகைகள் போன்றவற்றை உட்கொண்டு வந்தனர்.
தினசரி வேட்டையாடுவதற்கு சில கிலோமீட்டர் நடந்தனர்.
வேட்டை கிடைக்காத சமயம்
கிடைத்த பழங்களை உண்டு வாழ்ந்து வந்தனர்.
தானாக விளைந்த பயிர்களையும் அதன் கூழையும் குழந்தைகளும் முதியோரும் உண்டிருப்பர்.
சுமார் 10,000 வருடங்களுக்கு முன்பு
விவசாயம் பரவலானது
அதற்குப் பின்பு
ஓரிடத்தில் தங்கி விவசாயத்தின் மூலம் விளைந்த பயிர்களையும்
கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைத்த பால் , மாமிசத்தை சாப்பிட்டு வந்தனர்
சமீபத்தில் ஏற்பட்ட பசுமைப் புரட்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி வரை
நமது மாவுச்சத்து நுகர்வு மிக மிக அதிகமானது
உடல் உழைப்பு மிக மிக குறைந்தது.
இந்த மாற்றத்தால் நீரிழிவு ரத்தக் கொதிப்பு உடல் பருமன் இதய நோய் போன்ற தொற்றா நோய்கள் தோன்றி அதிகரித்தன.
இதற்கு மாவுச்சத்தின் மீது விழ வேண்டிய பழியை
கொழுப்பின் மீது சுமத்தி
கொழுப்பு உணவை நிறுத்த வேண்டும்
புரதச்சத்து கிட்னிக்கு ஆபத்து போன்ற கருத்துகள் மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டன.
மக்கள் தங்களின் உணவில் கொழுப்புச் சத்தையும் புரதச்சத்தையும் வெகுவாக குறைத்து அதற்கு ஈடு செய்ய மாவுச்சத்தை அதிகமாக சாப்பிட்டு வந்தனர்
ஆயினும் பெருகி வரும் உடல் பருமன் நீரிழிவு ரத்த கொதிப்பு இதய நோய் குறைந்தபாடில்லை.
இதை கருத்தில் கொண்டு மீளுருவாக்கம் பெற்றதே
"குறை மாவு" உணவு முறை எனும் சித்தாந்தம் உருவானது.
இதற்கு பேலியோ எனும் பெயர் வைக்கப்பட்டது.
இந்த உணவு முறை ஆதிமனிதனின் தொன்மையான உணவு முறையை ஒத்து இருந்தமையால் இந்தப் பெயர் பொருத்தமாகிவிட்டது
ஆயினும் அறிவியல் பூர்வமாக
இந்த உணவு முறையை
குறை மாவு
Low carbohydrate
நிறை கொழுப்பு
High FAT ( ஆரோக்கியமான கொழுப்பு உணவை மட்டும் உண்ணச் சொல்வதால் நாம் இதை HEALTHY FAT)
நிறை புரதம்
HIGH PROTEIN ( நாம் இதை APPROPRIATE PROTEIN என்ற உணவு முறையை அமைத்திருக்கிறோம்)
இங்கு நீரிழிவு , ரத்த கொதிப்பு , உடல் பருமனுக் உள்ளாகும் ஏனைய நம் மக்களுக்கு எதனால் இவை வந்தன என்பது குறித்த அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லை என்பதே உண்மை
நாம் உண்ணும் உணவு எத்தகையதாகினும் நமது உடலுக்கு அது கிரகிக்கப்படும் போது
அதை நமது உடல்
மாவுச்சத்து ( CARBOHYDRATES)
புரதம் ( PROTEIN)
கொழுப்பு ( FATS)
என்று கிரிகிக்கும்.
தானியங்கள் ( CEREALS / GRAINS)
இனிப்பு நிறைந்த உணவுகள் ( REFINED SUGAR)
இனிப்பு நிறைந்த திரவங்கள்( REFINED SUGAR ADDED DRINKS)
பேக்கரி உணவுகள்
போன்றவற்றில் அதிகமாக மாவுச்சத்து உள்ளது
பழங்களை விட காய்கறிகளில் மாவுச்சத்து குறைவாக உள்ளது.
புரதச்சத்து மற்றும் கொழுப்பு என்பது
மாமிசம்
முட்டை
மீன்
பயறு
கடலை
பால் & பால் பொருட்கள்
நட்ஸ் வகைகளில் இருக்கிறது
சராசரி தமிழர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் - தினசரி 300 கிராம் மாவுச்சத்து
இதற்குக் காரணம் நமது வாழ்வியல்
தானியங்களை முழுமையாக நம்பி இருப்பதால் தான் என்பதை அனைத்து சிந்திக்கும் மக்களும் உணர முடியும்.
இதனால்
நீரிழிவு
நீரிழிவிற்கு முந்தைய நிலை
அதீத உடல் பருமன்
ரத்தக் கொதிப்பு
பிசிஓடி
போன்ற பல பிரச்சனைகளுடன் உள்ள மக்கள் மட்டுமே
இந்த குறை மாவு உணவு முறையை நாட வருகிறார்கள்.
இந்த பேலியோ உணவு முறை என்பது உடல் எடை குறைப்பு டயட் என்று கொள்ளலாமா ?
இந்த உணவு முறையில் கிடைக்கும் பல பலன்களில் ஒன்று "உடல் எடை குறைப்பு".
மற்றபடி இந்த உணவு முறையை வெறும் உடல் எடை குறைப்புக்காக மட்டும் என்று நோக்குவது அதன் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் செய்யும் விசயம் என்றே கூறுவேன்.
ஒருவருக்கு
அதீத உடல் பருமன் ஏற்படுவதும்
டைப் டூ நீரிழிவு ஏற்படுவதும்
பிசிஓடி ஏற்படுவதும்
அவரது உடலுக்குள் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் தன்மை ஏற்படுவதால் வருவதாகும்.
இந்த இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் என்பது தவறான உணவு முறையாலும் துளியும் உடல் உழைப்பின்மையாலும் ஏற்படுவது
இதை சரி செய்யும் உணவு முறையில் இருக்கும் போது
அதைத் தொடர்ந்து வாழ்வியலாக ஏற்று
நம்மை மாற்றிக் கொள்வது தான் தொடர்ந்து இந்த பேலியோ வாழ்வியல் வழங்கும் நன்மைகளை அறுவடை செய்ய உதவுகிறது.
பேலியோ உணவு முறையை நீண்ட நாட்கள் கடைபிடிப்பது கடினம் என்று கூறப்படுகிறதே?
கடினம் என்று நினைத்தால் அனைத்துமே கடினம் தான்.
அதீத உடல் பருமனாக இருந்தவர்கள் பலர் பேலியோவுக்குள் நுழைந்து அதை வாழ்வியலாக சிறப்பாக கடைபிடிக்கும் போது உடல் பருமன் குறைந்திருப்பர்.
மீண்டும் அதிக தானியம் சார்ந்த உணவு முறைக்கும் இனிப்பு தரும் சீனி நாட்டுசர்க்கரை என்று மாறும் போதும் உடல் எடை கூடுவதைக் காண முடியும்.
இதற்குக் காரணம் - நம்மை சுற்றியுள்ள உலகம் பேலியோ கடைப்பிடிப்பதாக இல்லை
சுற்றி எங்கு காணினும் இனிப்பு இனிப்பு இனிப்பு மட்டுமே
எந்த உணவுப் பொருளும் தானியங்கள் நிரம்பிய மாவுச்சத்தால் செய்யப்பட்டவை மட்டுமே.
விருந்துகள் விருந்தோம்பல்களில்
நீக்கமற நிறைந்திருப்பது தானியங்களும் இனிப்புகளும் மட்டுமே
இப்படியிருக்க
நமக்கவிருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு உணவு முறையை வாழ்வியலை கடைபிடிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.
ஆயினும்
உலகமே கடைபிடிப்பதால் அதிக தானியங்கள் சாப்பிடும் முறையும்
இனிப்பை அளவின்றி சாப்பிடுவதும்
மது புகைக்கு அடிமையாக இருப்பதும் நன்மையென்று ஆகிவிடாது.
மாவுச்சத்தை குறைத்து நல்ல புரதச்சத்தையும் நல்ல கொழுப்புச் சத்தையும் உண்ணும் போது நன்மைகள் பல கிடைக்கும்.
இந்த உணவு முறையை கைவிடும் போது மீண்டும் நாம் முன்பு சந்தித்த பல இன்னல்கள் நம்மை சந்திக்கும்.
இயன்றவரை குறை மாவு சித்தாந்தத்தை நன்றாக கற்றுக் கொண்டு கடைபிடிப்பவர்களும்
தங்களுக்கு முன்பு இருந்த தொற்றா நோயின் கோரப்பிடியில் பல இன்னல்களைச் சந்தித்தவர்களும் இந்த வாழ்வியலை கைவிட மாட்டார்கள்.
அத்தகையோர் நம்மிடையே பலர் உண்டு.
மேலும் பலர் இந்த வாழ்வியலை கைவிட்டு அதனால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதை எண்ணி
மீண்டும் இந்த வாழ்வியலுக்கு வரும் கதைகள் ஏராளம்.
குறை மாவு உணவு முறையான பேலியோ எப்போதிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது?
நீரிழிவிற்கு மருத்துவ சிகிச்சை கண்டறியப்படும் முன்பு வரை
18 ஆம் நூற்றாண்டில் இருந்தே மாவுச்சத்தை குறைப்பது தானியங்கள் உண்ணுதலைக் குறைப்பது புரதச்சத்து கொழுப்புச்சத்து உணவுகளை அதிகமாக உண்பது குறித்த தேடல்கள் மற்றும் பரிந்துரைகளை அறிவியல் மருத்துவர்கள் செய்தததைக் காண முடிகின்றது.
டைப் ஒன்று நீரிழிவிற்கு இன்சுலின் கண்டறியப்படும் முன்பு வரை
குறை மாவு உணவு முறை மட்டுமே சிகிச்சையாக இருந்தது.
எந்த மருந்துக்கும் கட்டுப்படாத வலிப்பு நோய்க்கும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை சிகிச்சையாக பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைக்கப்படுகிறது.
இப்படியாக குறை மாவு உணவு முறை என்பது தொடர்ந்து பல காலமாக மருத்துவர்களாலும் மக்களாலும் முயற்சி செய்யப்படுபவையே.
இது அறிவியல்பூர்வமான வாழ்வியல் மாற்றம்.
பேலியோவில் இறைச்சி சாப்பிடப் பரிந்துரைக்கபடுகிறது?
இது மாமிசம் உண்ணும் டயட்டா?
மரக்கறி உணவாளர்களுக்கு இதில் ஏதும் இல்லையா?
மறுபடி கூறுகிறேன்.
குறைமாவு உணவு முறையின் சித்தாந்தம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வி எழாது.
மாவுச்சத்தை குறைத்து
புரதச்சத்து நிறைந்த
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமானது.
மாமிசம் உண்ணாதவர்களும் பேலியோ உணவு முறையில் இருக்க முடியும். அவரவர் உண்ணும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றவாறு இந்த உணவு முறையை அமைத்துக் கொள்ள முடியும்.
என்னை சந்திக்கும் பலரில்
மீன் மட்டும் உண்பவர்கள் உள்ளனர்
முட்டை மட்டும் உண்பவர்கள்
பால் மற்றும் பால் பொருட்கள் மட்டும் உண்பவர்கள் என்று பலரும் குறை மாவு உணவு முறையில் உள்ளனர்.
எனவே பேலியோவை கறி திண்ணும் டயட் என்ற குறுகிய கோணத்தில் அணுகுவது தவறான கோணம் என்று கருதுகிறேன்.
தற்கால
அதீத உடல் பருமன்
நீரிழிவு
ரத்தக்கொதிப்பு
இதய நோய்
சிறுநீரக நோய்
போன்றவற்றிற்கு பெரும்பங்கு காரணம்
மாவுச்சத்தை குறைக்காமல் நல்ல புரதம் உண்ணாமல் நல்ல கொழுப்பை உண்ணாமல் வெறும் உடற் பயிற்சியால் உடல் பருமனை வெல்ல முடியாது. நீரிழிவை கட்டுக்குள் வைக்க முடியாது.
தற்கால சீர்கெட்ட உணவு முறை அதிலும் மாவுச்சத்து நிரம்பிய தானியங்களை பெரிதும் நம்பியிருக்கும் நமது அன்றாட வாழ்வியல்
இதனுடன் புரதம் குறைவாக உண்ணும் உணவு முறை.
ஆரோக்கியமான கொழுப்புணவின் மீதும் ஏற்படுத்தப்பட்ட செயற்கையான மிகைப்படுத்தப்பட்ட பயத்தால்
மிக அதிகமாக மாவுசத்தை மட்டுமே
சாப்பிட்டு
குழந்தைகளும் அதீத உடல் பருமனுக்கு உள்ளாகி
வளர் இளம் பருவத்தில் டீன் ஏஜ் பிள்ளைகள் கூட நீரிழிவு ரத்தக்கொதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்
இவர்கள் தான் நாளைய இதய நோயர்களாகவும் சிறுநீரக நோயர்களாகவும் மாற இருக்கிறார்கள்.
உடனடியாக நமது உணவு முறையைப் பற்றி அதிகம் சிந்தித்து அதில் மாற்றத்தை உண்டாக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
கார்டியோ பல்மனரி ரிசஸிடேசன் (Cardio pulmonary Resuscitation) எனும் இந்த உன்னத உயிர்காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
இந்த முதலுதவி குறித்த அறிவு நாளை நமது சொந்தங்களின்/நண்பர்களின்/ அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களின் உயிர்களைக் காப்பதற்கும் உதவியாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
நம் அலுலகத்தில் இருக்கிறோம். திடீரென்று அலுவலகத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் ஒருவர் மூர்ச்சையாகி கீழே விழுகிறார் .
நாம் பேருந்து நிலையத்தில் / ரயில் நிலையத்தில் வண்டிக்காக காத்திருக்கும் வேலையில் ஒரு முதியவர் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மூர்ச்சையாகி சரிகிறார். பேச்சு மூச்சின்றி கிடக்கிறார். அவரை நம்மால் காப்பாற்ற முடியுமா?
முடியும்.. Cardio pulmonary Resuscitation எனும் CPR தெரிந்திருந்தால் நம்மால் முடியும்.
இதய சுவாச நிறுத்தம் ( cardio respiratory arrest) என்பது இதய ரத்தநாள அடைப்பினால்/ இதய துடிப்பு முடக்கத்தினால் ஏற்படும் நிகழ்வாகும்.
ஒருவருக்கு இதய சுவாச முடக்கம் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்களுக்குள் cardio pulmonary resucitation எனும் CPR செய்ய வேண்டும்.
இது மூளை செயலிழப்பை தடுக்கும். நமது மூளைக்கு தொடர்ச்சியாக ஆறு நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் நிரந்தர கோமா நிலைக்கு சென்று விடும் வாய்ப்பு அதிகம்.
இந்த முதலுதவியை செய்ய மனமும் இந்த முதலுதவி குறித்த அறிவு மட்டும் இருந்தால் போதும்.
மருத்துவராகவோ ?செவிலியராகவோ? மருத்துவத்துறையை சேர்ந்தவராகவோ? இருக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை.
ஒருவர் நம் முன் மூர்ச்சையாகி விழுந்தால் உடனே நமது முதல்உதவியான சி.பி.ஆரை ஆரம்பிக்கவேண்டும்
அதற்கு முன் அவசர மருத்துவ சிகிச்சைக்கான அழைப்பு எண்ணான 108 இற்கோ அல்லது அந்தந்த நாட்டின் அவசர உதவி எண்ணிற்கோ அழைக்க வேண்டும்.
பிறகு அருகில் நமக்கு உதவியாக ஒருவரையோ அல்லது உடன் சேரும் மக்களையோ சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதோ ஆரம்பிப்போம் நம் உயிர்காக்கும் முதலுதவியை....
நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்
1. ரத்த ஓட்டம்
( Circulation)
2.சுவாசப்பாதை( Airway)
3. சுவாசித்தல் (Breathing)
4. செயற்க்கை இதய முடுக்கி ( Defibrillation)
உங்கள் முன் ஒருவர் திடீரென்று சரிந்து விழுந்தாலோ /ஒருவர் மயங்கி கீழே விழுவதை நாம் பார்க்காத நிலையில் அல்லது அவர் தண்ணீரில் மூழ்கி இப்போது தான் தூக்கி வருகிறார்கள் அல்லது விபத்தில் அடிபட்டவர்
என்றால் அவரை கடினமான தரையில் தலை மேலாக படுக்க வைக்க வேண்டும்
பிறகு அவரது கழுத்தின் பக்கவாட்டில் விரல்களை அழுத்தி கரோடிட் தமனியின் நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பாருங்கள்.
குழந்தைகளுக்கு கையின் முழங்கை உள்பகுதி தமனியிலோ(Brachial artery) அல்லது இடுப்பு பகுதி தமனியிலோ( femoral artery) நாடித்துடிப்பு பார்க்கலாம்
கரோடிட் தமனியின் நாடித்துடிப்பு இருக்கிறது என்றால் அவருக்கு இதயத்துடிப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே ரத்த ஓட்டமும் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.
அடுத்தபடியாக அவரது சுவாசப்பாதை( Airway) சரியாக இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும்.
சுவாசப்பாதையில் சளி/மண் போன்றவை இருந்தால் அவற்றை உடனே நீக்கி விட்டு நாம் சுவாசம் தர தயாராக வேண்டும்.
அவரது சுவாசப்பாதை சீராக இல்லை என்பதை கணித்தால் காதுகளுக்கு கீழே உள்ள தாடை எலும்பை முன்னோக்கி அழுத்தினால் சுவாசப்பாதை சீராகும்.
மற்றொரு முறையில்
நெற்றியில் நம் உள்ளங்கையை வைத்து தலையை பின்னோக்கி அழுத்தி
இன்னொரு கை விரல்களை முகவாய்க்கட்டையில் வைத்து தூக்கிப்பிடித்தால் சுவாசப்பாதை சீராகும்.
மேற்சொன்ன இரு நடவடிக்கைகளும் சுவாசப்பாதை சீராக இல்லாமல் இருந்தால் செய்ய வேண்டியவை.
உதவி பெறுபவரின் வாயை நன்றாக விரித்து நமது வாயை அத்தோடு எந்த இடைவெளியும் இல்லாமல் பொருத்திக்கொண்டு மூச்சு தர வேண்டும்.
நிமிடத்திற்கு பத்து முறை மூச்சு வழங்க வேண்டும். அதாவது ஒவ்வொரு ஆறு விநாடிகளுக்கும் ஒருமுறை மூச்சு வழங்க வேண்டும்
நாம் மூச்சு வழங்கும் போது அவரது நுரையீரல் விரிந்து சுருங்குகிறதா? என்பதை கவனிக்க வேண்டும். நுரையீரல் விரிந்து சுருங்கினால் தான் நாம் வழங்கும் மூச்சுக்காற்று அவரது நுரையீரல் முழுவதும் சென்று சேர்கிறது என்று பொருள்.
உள்சென்று சுவாசம் வெளியே வருவதற்கு சில நொடிகள் விட வேண்டும்.
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும் கழுத்தில் இருக்கும் கரோடிட் தமனியின் நாடித்துடிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவேளை கழுத்தில் நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனே நாம் இதய சுவாச மீட்பு முதலுதவியை ஆரம்பிக்க வேண்டும்.
நெஞ்சுப்பகுதியை அழுத்துவதன் மூலம் இதயத்தை தூண்டுவது தான் முதல் பணி. இதயம் வேலை செய்தால் தான் ரத்த ஓட்டம் மீண்டு வரும்.
நிமிடத்திற்கு 100 முதல் 120 முறை நெஞ்சுப்பகுதியை அழுத்த வேண்டும். இதை Chest compressions என்று அழைக்கிறோம்.
தோராயமாக ஒவ்வொரு 15 நொடிக்கும் 30 முறை நெஞ்சுப்பகுதியை அழுத்த வேண்டும்.
பெரியவராக இருப்பின்
நமது இரண்டு கைகளையும் விரல்களுக்குள் கோர்த்துக்கொண்டு உள்ளங்கையை நெஞ்சுக்கூட்டு எலும்பின் கீழ்பகுதியில் வைத்து
2 முதல் 2.4 இஞ்ச் அளவு உள்ளே நெஞ்சாங்கூடு செல்லுமளவு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அழுத்தங்கள் வேகமாகவும் பலம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். இந்த அழுத்தம் கொடுப்பது அதிகமான உடல் உழைப்பையும் ஆற்றலையும் வாங்கும் செயல். ஆனாலும் ஒரு உயிரை காக்கும் முதலுதவியில் மிகப்பெரும் பங்கு இந்த நெஞ்சு அழுத்தங்களுக்கு உண்டு. ஆம்... மீளாத்துயில் கொள்ள காத்திருக்கும் இதயத்தை தட்டி எழுப்பும் கடைசி பெரும் முயற்சியல்லவா இது?
கடினமாக இருந்தாலும் அந்த உயிர் மீண்டும் எழும் போது வரும் மகிழ்ச்சியில் பட்ட கஷ்டங்கள் பறந்து போகும்.
ஒரு இதய சுவாச மீட்பு சுழற்சி ( CPR cycle ) என்பது 30 நெஞ்சுப்பகுதி அழுத்தங்களும் 2 மூச்சு தருதலும் சேர்ந்ததாகும்.
இரண்டு பேர் மீட்புப்பணியில் இருந்தால்
ஆறு நொடிகளுக்கு ஒருமுறை ஒருவர் மூச்சு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
மற்றொருவர்
பதினைந்து நொடிகளுக்குள் முப்பது முறை நெஞ்சுப்பகுதியை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இரண்டு பேர் இருப்பதால் மூச்சு கொடுப்பதும் நெஞ்சை அழுத்துவதும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டே இருக்கலாம். ஒன்றுக்காக மற்றொன்றை நிறுத்ததேவையில்லை.
ஒருவர் மட்டும் மீட்புப்பணியில் இருந்தால்
முப்பது முறை நெஞ்சை அழுத்தி விட்டு இரண்டு முறை மூச்சு கொடுத்து விட்டு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
மீட்புப்பணியில் இரண்டு பேர் இருந்தால்
ஒவ்வொரு ஐந்து சூழற்ச்சிக்கும் மூச்சு கொடுக்கும் பணியையும் நெஞ்சை அழுத்தும் பணியையும் மாற்றி மாற்றி செய்யலாம். இது இருவரும் சோர்வாவதை தடுக்கும்.
இதுவே மூர்ச்சையாகி இருப்பது குழந்தையாக இருந்தால்
நெஞ்சு அழுத்தம் கொடுப்பதற்கு
ஆள்காட்டி மற்றும் நடுவிரல் இரண்டையும் ஒன்றாக இணைத்து நெஞ்சு நடுஎலும்பின் கீழ் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தத்தின் போது நெஞ்சுக்கூடு சுமார் ஒன்றரை இஞ்சு உள்சென்று வெளிவர வேண்டும்.
குழந்தைகளுக்கு சுவாசம் கொடுப்பது நிமிடத்திற்கு 12முதல் 20 என்ற அளவில் இருக்க வேண்டும்.
நெஞ்சின் மீது அழுத்தம் கொடுப்பது நிமிடத்திற்கு 100 முதல் 120 தடவை கொடுக்க வேண்டும்.
நாம் சி.பி.ஆர் செய்து கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் வந்துவிட்டால் அதில் இருக்கும்
டீபிப்ரில்லேட்டர் எனும் இதயத்துடிப்பு ஊக்கியை வைத்து மின்சார அதிர்ச்சி கொடுக்க தயாராக வேண்டும்.
துயில் கொண்ட இதயத்தை எழுப்பும் முயற்சியில் தலையாயது
"டீஃபிப்ரில்லேசன்" தான்.
இதை பயிற்சி பெற்றவர்கள் செய்வார்கள்.
ஒருவேளை பயிற்சி பெற்ற நபர் இல்லாத இடத்தில் அந்த டீஃபிப்ரில்லேட்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை படித்து அனைவராலும் செய்ய முடியும்.
டீஃபிப்ரில்லேசன் கருவியை உபயோகிக்கும் முறைகள் பின்வருமாறு
1. கருவியை "ஆன்" செய்ய வேண்டும்.
இப்போது வரும் டீபிப்ரில்லேட்டர் தானியங்கி முறையில் இயங்குபவை .இவற்றை AED automated External Defibrillator என்று அழைக்கிறோம்
இதை யார் வேண்டுமானாலும் ஆபத்து நேரத்தில் உபயோகிக்க முடியும். எடை குறைவான மிகவும் காம்பேக்ட் வடிவத்தில் வருகிறது.
இந்த AEDஐ திறந்தவுடன் அது ஆங்கிலத்தில் கட்டளைகளை பிறப்பிக்கும்.
முதலில் நோயாளி அணிந்திருக்கும் மேலங்கியை முழுவதும் களைய வேண்டும்.
உள்ளாடைகள் முதற்கொண்டு களையப்பட்டிருக்க வேண்டும்.
பிறகு இயந்திரத்தில் இருக்கும் இரண்டு ஒட்டும் வகையில் உள்ள பேடுகளை வலதுபக்க நெஞ்சுப்பகுதியில் கழுத்து எலும்புக்கு கீழும்
இன்னொரு பேடை , இடது பக்கம் அக்குள் பகுதிக்கு சற்று கீழும் ஒட்ட வேண்டும்.
இப்போது AED ஆனது நாம் சி.பி.ஆர் செய்வதை சிறிது நேரம் நிறுத்தச் சொல்லும்.
சிறிது நேரம் நிறுத்த வேண்டும்.
இப்போது AED தானியங்கி முறையில் நோயாளியின் இதயத்துடிப்பை அளவிடும்.
இதயத்துடிப்பின் நேரத்தை துல்லியமாக கணித்து தேவையான நேரத்தில் மின்சாரத்தை பாய்ச்ச தயாராகும்.
மின்சாரத்தை பாய்ச்சுமுன் நமக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
யாரும் நோயாளியை தொடாதீர்கள்.
நோயாளியை தொட்ட எதையும் தொடாதீர்கள் என்பது அந்த எச்சரிக்கை சமிக்ஞை..
நாம் அனைவரும் நோயாளி மீதும் அவரை படுக்க வைத்திருக்கும் படுக்கையின் மீதிருந்தும் உடனே கைகளை எடுத்து விட வேண்டும்.
அதுவே தக்க சமயத்தில் மின்சார அதிர்ச்சி கொடுத்து நம்மை மீண்டும் CPR கொடுக்க சொல்லி கட்டளையிடும்.
அதுவே இதயத்துடிப்பை கண்காணித்து தேவையான நேரத்தில் இதயம் துடிப்பு சீராகும் வரை அவ்வப்போது மின்சார அதிர்வுகளை கொடுக்கும்.
நிலைமை சீராகும் வரை AED ஐ கழற்றி விடக்கூடாது.
AED கருவி தினந்தோறும் பல லட்சம் உயிர்களை காத்துக்கொண்டிருக்கிறது.
நமது ஊர்களிலும் வானூர்தி நிலையங்கள் , மக்கள் கூடும் ரயில் நிலையங்களில் இந்த கருவி சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி ஞானம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எடுத்து உபயோகித்து உயிர்காக்க முடியும்.
கட்டாயம் AED வரும் வரை CPR தொடர வேண்டும்.
அரை மணி நேரம் முதல் ஒரு மணிநேரம் ஆனாலும் சரியே. சி.பி.ஆரை நிறுத்தக்கூடாது.
இதயத்துடிப்பும் சுவாசமும் சீரடைந்து விட்டது உறுதியான பின்
அவர் மூர்ச்சை நிலையில் இருந்து சுய நினைவுக்கு வந்த பின் Recovery position இல் வைக்க வேண்டும்.
ரிகவரி என்பதை “மீண்டு வருதல்” என்று பொருள் கொள்ளலாம்.
1.ஒருபக்கமாக பக்கவாட்டில் நோயாளியை படுக்க வைக்க வேண்டும்
2.அவரது தலை தரையில் படுமாறு இருக்க வேண்டும்
இவர் இந்த நிலையில் வாந்தி எடுத்தாலும் நுரையீரலுக்குள் புரை ஏறாமல் இருக்கும்.
3.அவர் மூச்சு விடுவதற்கு ஏதுவாக நெஞ்சாங்கூடு அழுத்தப்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4.கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.
கழுத்து எலும்பு முறிந்த சூழ்நிலையில் தலையை லேசாக தூக்கினாலும் முக்கிய நரம்புகள் அழுத்தப்பட்டு அதனால் உயிர் போகும் வாய்ப்பு அதிகம்.
அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு பக்குவமாக ஆம்புலன்சில் அழைத்துச்செல்லலாம்.
இத்தகைய சிறப்பான உயிர்காக்கும் முதலுதவியை இனி நாமும் செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
2014 இல் நடந்த ஆராய்ச்சியில் மருத்துவமனைக்கு வெளியே நடக்கும் இதய சுவாச நிறுத்தங்களில் (cardio respiratory arrest) மிக சீக்கிரமே CPR ஆரம்பிக்கப்பட்டவர்களில் / அருகில் இருப்பவர் CPR ஆரம்பித்தவர்களில் 45% பேர் உயிர் பிழைத்துள்ளார்கள் என்கின்றன .
அமெரிக்க இதய சங்கம் “ இதய சுவாச மீட்பு சிகிச்சையை சீக்கிரமே ஆரம்பித்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் உயிர்களை காக்க முடியும்” என்கிறது
இந்தியா போன்ற மக்கள் தொகை வளமான நாட்டில் சி.பி.ஆர் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஞானம் அனைவருக்கும் இருக்குமாயின் பல உயிர்கள் கட்டாயம் காக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது.
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு ப்ராக்டிகல் வகுப்புகளில் இந்த சிபிஆர் கற்றுக் கொடுத்து ப்ராக்டிகல் பரீட்சையில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விசயமாக அனைத்து பள்ளிகளிலும் ஆக்குவது நல்ல பலனைத் தரும். கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய தலைப்பு.
அனைத்து அரசு தனியார் அலுவலர்களுக்கும் அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி குறித்த கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தி இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
திரைப்படங்களில் CPR குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்
Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
பயமாக_இருக்கிறது.... இன்றைய தலைமுறையினரின் போக்கு.....
பிடித்த ஒரே பொருள் - #செல்ஃபோன்
படிக்காமல் பாஸ் ஆக வேண்டும். கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...யாருக்குமே மரியாதை தரக்கூடாது..
தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...
எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...
சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..
பெண்கள் மீது மரியாதையே இல்லை..
ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...
வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை..
ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..
ஒரு வரி கூட வாசிப்பதில்லை..
தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...
ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..
வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து போட வேண்டும்..
பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்..
சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை.. எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..
எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..
ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....
இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..
பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..
பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..
தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...
அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....
இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜோம்பியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்..
பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை..
இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..
மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம். இது இருபாலருக்கும் பொருந்தும்.
காலம்காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்
கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை. எதிர்கால வரலாறு.....
மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை
பயமாக இருக்கிறது......இன்றைய தலைமுறையின் போக்கு.....
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Keelaiyur Post
Melur
625102
S. L Kabir Ali Complex, Alagar Kovil Road, Near Latha Ganesan Hospital
Melur, 625106