VBSMS
வீரபோயர் SMS
02/01/2021
நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றுவது கடமையாகும்.
ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் உண்டு. இந்த சமுதாயத்திற்காக இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும், நாடும் நலம் பெறும். வாருங்கள் ஒன்றினைவோம் நாளை சரித்திரம் படைக்க இன்றே தொடங்குவோம்... வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம் Vbsms Tamilnadu
31/12/2020
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பாக உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
கூடிக் கலைவதல்ல, வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம் பெரும் சேனை. போயர் மக்களின் துயரக் கண்ணீரைத் துடைப்பதற்கு எங்களின் கரங்கள் எப்போதும் தயாராக இருக்கும்...
21/12/2020
ஒருநாள் இலவச சட்ட பயிற்சி வகுப்பு சிறப்பாக ஏற்பாடு செய்து தலைமை தாங்கிய
எதிர்க்க எழுவேன் என்று சொன்ன என் அன்பு தம்பி செங்கத்தில் சிங்கம் மாநில செயலாளர் ரமேஷ் அவர்களுக்கும் அவர்களின் தளபதிகளுக்கும் கோடான கோடி நன்றிகள் வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்... Vbsms Tamilnadu
04/12/2020
வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம்...
தகவல் தொழில்நுட்பம்
Follows on
04/12/2020
வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம் துவக்க நிகழ்ச்சி Vbsms YouTube channel பதிவிடபட்டுள்ளது... மறக்காமல் இந்த Channel subscribe பண்ணுங்க என்று வீரபோயர் முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...
வீர போயர் சமுதாய முன்னேற்ற சங்கம் துவக்க விழா மங்கள இசையுடன் || சேலம் பெட்டகம் மஹால் வீர போயர் சமுதாய முன்னேற்ற சங்கம் துவக்க விழா மங்கள இசையுடன் || சேலம் பெட்டகம் மஹால்
03/12/2020
ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம்...
29/11/2020
தமிழகத்தில் உதயம், வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம், போயர் மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்! உறவுக்கு கை கொடுப்போம்!
கைகளில் கத்தியை எடுக்காதே,
உன் புத்தியை பயன்படுத்தி
எழுதுகோல் எடு,
கத்தியின் முனைவிட எழுதுகோல் முனை கூர்மையானது வலிமையானது...
சூரிய குல வம்சமான நீ நட்சத்திரமாக ஜொலிக்க எழுந்து வா சரித்திரம் படைப்போம்...
உன் எதிர்காலம் சரித்திரம் ஆக்க பயணிப்போம்
வீரபோயர் சமுதாய முன்னேற்ற சங்கம்..
25/11/2020
நமது சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் பாடுபட்டு வருகிறது. ஆனால், இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்; முன்னேற வேண்டும் என்ற துடிப்பு நம்மிடையே இல்லை. நமது சமுதாயம் முன்னேறி விடக் கூடாது என்பதற்காக மதுவையும், திரைப்பட போதையையும், இலவசங்களையும் அளவுக்கு அதிகமாக புகட்டி சிந்திக்க முடியாத அளவுக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள் நம்மை ஆண்டவர்களும், ஆள்பவர்களும். இந்த உண்மையை புரிந்து கொண்டு நமது வளர்ச்சிக்காக போராட முன்வராத வரை நமக்கான வளர்ச்சி என்பது எளிதில் கைகூடாது...
20/11/2020
மற்றுமொரு அமைப்பு அல்ல...
மாற்றத்திற்கான அமைப்பு...
ஒன்றினைவோம் நவம்பர் 29 சேலத்தில்...
Click here to claim your Sponsored Listing.