DR R.Nataraj IPS

DR R.Nataraj IPS

Share

Former Director General of Police|Former Chairman TNPSC|EX MLA of Mylapore Constituency|
தமிழக வெற்றிக் கழகம்

16/06/2026

தமிழக வெற்றிக் கழக தலைவர்,
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு C.ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,

கழகப் பொதுச் செயலாளர்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கழக பொருளாளர்,
மாண்புமிகு உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு P.வெங்கடராமணன் அவர்களின் வாழ்த்துக்களுடன்

தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்,
ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு K.V. விஜய்தாமு அவர்களின் தலைமையில்,

தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநரும்,
மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
டாக்டர் திரு ஆர். நடராஜ், IPS அவர்களின் முன்னிலையில்,

மயிலாப்பூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மயிலாப்பூர் பகுதி கழகச் செயலாளர்கள் திரு மயிலை S. பிரசாந்த் மற்றும் திரு தலைவா S. சதீஷ் ஆகியோர் உறுதுணையாக இருந்து சிறப்பித்தனர்.

மேலும், மாவட்ட, பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

14/06/2026

இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா அவர்களின் படைப்பு!

Photos from DR R.Nataraj IPS's post 14/06/2026

ஓராசிரியர் பள்ளி & ராமகமலம் அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர், மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திரு ஆர்.நட்ராஜ் அவர்களின் முயற்சியில் மகளிர்க்கு இலவச நான்கு சக்கர வாகன பயிற்சி வழங்கி உரிமம் வழங்கப்பட்டு வருகின்றன, இதுவரை 35 கட்டங்களாக சுமார் 850 மகளிர்கள் பயனடைந்துள்ளனர், புதன்கிழமை 11, ஜூன், 2026 மாலை 3.00 மணியளவில் பயிற்சியின் அடுத்த கட்டம் - 36 துவக்கப்பட்டு பயிற்சியின் நன்மைகள், வழிமுறைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மேனாள் டி.ஜி.பி டாக்டர் திரு ஆர்.நட்ராஜ்., இ.கா.ப & ஓராசிரியர் பள்ளியின் தலைவர் டாக்டர் திரு கிருஷ்ணன் அவர்களும் பயிற்சி நன்மைகளும் & வாழ்வாதாரத்திற்கான நல் கருத்துக்களை வழங்கினர், மெட்ரோ ஓட்டுனர் பள்ளி திரு ஸ்ரீ ராம் மகேஷ் அவர்கள் பயிற்சியின் வழிமுறைகள் எடுத்துரைத்தார்.

Photos from DR R.Nataraj IPS's post 12/06/2026

மயிலாப்பூரில் காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பி.எஸ்.மேல் நிலை பள்ளி பொன் விழா நிகழ்வில் மாணவ, மாணவியருக்கு அருளாசி வழங்கினார். அதன் பிறகு மேனாள் டிஜிபி திரு சி.எல்.ராமகிருஷ்ணன் அவர்களின்" நாராயண பட்டர் வழங்கிய "நாராயணீயம்" என்ற மகா காவியத்திற்கு கொடுத்த உரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றேன்.
அப்போது, ஆச்சார்யார் பிரசாதங்களை வழங்கி, தமது அருளாசியையும் ஆசீர்வாதத்தையும் வழங்கினார்.

10/06/2026

மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் திரு.ஆதவ் அர்ஜுனா Aadhav Arjuna அவர்கள் சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை யொட்டி, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தபோது.
#விஜய்

Photos from DR R.Nataraj IPS's post 09/06/2026

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் Chief Minister of Tamil Nadu அவர்களின் "சிங்கபெண் அதிரடி சிறப்பு காவல் படை" துவக்க விழாவில் பங்கேற்றபோது.

02/06/2026

நெத்தியடி பேச்சு! அதீத மக்கள் எழுச்சி!

31/05/2026

EX Mylapore MLA joins TVK!

Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

12/50 Swathi Apartments RA Puram 3rd Main Road
Chennai