Rathinam Ramasamy

Rathinam Ramasamy

Share

குறும்படம் தயாரிப்பாளர். பரிசு பெற்ற எழுத்தாளர்.70+ நூல்கள். மேனாள் தென்னிந்திய நூலக ஆய்வாளர்-RRRLF

12/04/2026

இன்று #நீலாங்கரை #பீச் விசிட்!

07/04/2026

#இரண்டு #இளைஞர்கள்! #எனக்கு70! #அவருக்கு83! #நானும் #நடிகர் #சிவக்குமாரும்! "காட்சி இலக்கியம்" படத்தயாரிப்புக் குழுவின் இயக்குனர் மா.தொல்காப்பியன் அவர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான, தமிழ்த் திரையுலகின் ஒரே வாழும் மார்க்கண்டேயர், இராமாயண, மகாபாரத இலக்கிய விளக்க உரையில் முத்திரை பதித்த உரைவேந்தர், பழுத்த #நடிகர் #சிவக்குமார் அவர்களை அவரது வீட்டிற்கு எங்கள் திரைப்படக்குழுவுடன் சென்று சந்தித்தேன்!

நான் தயாரித்த ' #நல்ல #வரைஞர்', 'The Good Designer' திரைப்படத்தை அவரது வீட்டில் உள்ள பெரிய எல்சிடி டிவி திரையில் அவருக்குப் போட்டுக் காட்டினோம்! டிவியை இயக்கியது எல்லாம் அவர்தான்! படத்தை அவர் மிகவும் ரசித்து, மகிழ்ந்து, பாராட்டி இயக்குனருக்கு கை கொடுத்து, அவரது தோளில் தட்டி "படம் நன்றாக இருக்கிறது!", என்று எங்களை வாழ்த்தினார்!

படம் பார்த்தது மட்டும் அல்ல. தனது நேரத்தை ஒதுக்கி எங்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாடினார். அந்த சாதனை நடிகர் உடன் இருக்கும் போது அவரிடம் இருந்து என்று சொல்லக்கூடிய நேர்மறையான அதிர்வலைகள் எங்களை சூழ்ந்தன.

உரையாடலின்போது
அவருடைய பழைய நினைவுகள் அவருக்கு கிளர்ந்து எழுந்து வந்தன! மகாபாரதம் இதிகாச இலக்கியம் பற்றி அவர் ஆற்றிய பேருரை பற்றி அமைதியாக, ஆனால் நெகிழ்ச்சியான உணர்வுடன் பேசினார். குறிப்பாக, மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் சூதாடி பாஞ்சாலியை வைத்து தோற்றது; அதற்குப் பிறகு நடக்கும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளில் அவரது உரையில் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை எவ்வாறு இணைத்திருக்கிறார் என்ற வீடியோவை அரை மணி நேரம் எங்களிடம் போட்டுக் காட்டி பேசினார்!

அதற்கு அடுத்தது நான் மிகவும் மகிழ்ந்தது கடந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் ' #திருவள்ளுவர்100' என்ற தலைப்பில் 4 மணி நேரம் அவர் உரையாற்றிய வீடியோவின் அரை மணி நேரக் காட்சியை சின்னத்திரையில் எங்களுக்கு போட்டுக் காட்டினார். பெரும் தலைவர்கள் மட்டுமல்ல சாதாரண பாமர மக்களுடனும் திருக்குறள் எவ்வளவு ஒத்துப்போகிறது என்பதையும், அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் குறளுக்கு எவ்வாறு எடுத்துக்காட்டாக அமைகிறது என்பதையும் அவர் பேசிய ஈரோட்டு உரையில் இருந்து வீடியோ காட்சியில் பார்த்து மகிழ்ந்தேன்.

நான் எல்லாம் நிச்சயமாக அந்த நிகழ்ச்சியை இதுவரை பார்க்கவில்லை. ஈரோடுக்கும் போகவில்லை; டிவியில் அல்லது வீடியோவிலும் பார்க்கவில்லை. நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது

தேநீர் வந்தது; அருந்தினோம். இடையில் பேசும்போது நான் சொன்னேன், "ஐயா! உங்கள் இராமாயணம், மகாபாரதம் விளக்க உரைகளை விட திருக்குறள் உரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த கதைகளை பலர் சொல்லி இருக்கிறார்கள். அவைகளுக்கு இலக்கியம் இருக்கிறது. ஆனால், திருக்குறள் கதைகளை நீங்கள் ஆராய்ச்சி செய்து, தகவல்கள், படங்களை திரட்டி, தொகுத்து உருக்கமாக சொன்னது மிகவும் சிறப்பானது!," என்று சொன்னவுடனே பண்பட்ட மனிதர் ஆன சிவக்குமாருக்கும் அது மிகவும் பிடித்தது போல இருக்கிறது. நெகிழ்ந்து போனார்.

"ஆமாம்! இது ஒரிஜினல்! ஒரிஜினல்!", என்று உளம் மகிழ்ந்து சொன்னார்.

அந்த உரைகளின் தொகுப்பான திருக்குறள் நூலை எனக்கும், என்னுடன் வந்திருந்த படக்குழு உறுப்பினர்களுக்கும் வழங்கினார். நான் இந்த ஆண்டு எழுதி #எமரால்டு குரூப் #எழிலினி #பதிப்பகம் வெளியிட்ட ' #வென்று #காட்டியவர்கள்', என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்!

அவருடன் இருந்த நேரங்கள் மிகவும் மகிழ்வான, கருவூலமாக மனதில் போற்றி வைத்துக் கொள்ள வேண்டிய தருணங்கள்.
ஆரம்பத்தில் நான் அவருக்கு புத்தகம் கொடுக்கும்போதோ, அவர் எனக்கு கொடுக்கும்போதோ இயல்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் மொபைலில் படம் எடுக்கவில்லை. படக்காட்சிகள், உரையாடல், பரிசளிப்பு எல்லாம் முடிந்த பிறகு ,"எங்களுக்கு விடை கொடுங்கள்! நாங்கள் கிளம்புகிறோம்!", என்று இயக்குனர் தொல்காப்பியன் கூறினார்.

அப்போது ஆர்வத்துடன் நான் கேட்டேன்:" ஐயா! உங்களிடம் நூல் கொடுப்பது போன்ற ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமா?" உடனே அவர் நண்பர் தொல்காப்பியரிடம் "ஒரு 13 வயது குழந்தை போல ஆர்வமாக இருக்கிறார் உங்கள் படத் தயாரிப்பாளர்!", என்றார். "அவருக்கு 70 வயது ஆகிவிட்டது!", என்று இயக்குனர் சொல்லவும், "அதனால் என்ன? அவரைப் பார்த்தால் இன்னும் எண்பது ஆண்டுகள் வாழ்வார்!" , என்று அந்த மூத்த மாமனிதர், பழுத்த பட்டறிவாளர் கூறியது எனக்கு என் முன்னோர்கள் வாழ்த்தியதுபோல பேரின்பமாக இருந்தது.

"நான் படம் எடுக்காமல் உங்களை அனுப்புவேனா?", என்று சிரித்துக் கொண்டே கூறிக்கொண்டு "வாங்க! படம் எடுத்துக் கொள்வோம்!", என்று தனியாக நின்று என்னுடன் மற்றும் குழுவுடன் தனித்தனியாக படம் எடுக்க அனுமதித்தார்.

அவரது தான் இருந்தன அவரது மனம் மற்றும் ஆடை போலவே வீட்டில் அனைத்துப் பகுதியும் வெண்மைதான். இனிமையாக இருந்தது. வெளியே வரும்போது வாசலில் வரிசை வரிசையாக கார்கள் இருந்தன. ஒரு பண்பான திரை நட்சத்திரக் குடும்பம் வாழும் வீட்டுக்கு வந்து பார்த்து ஒரு மாபெரும் திரையுலக அறிவார்ந்த நட்சத்திரத்துடன் பேசி மகிழ்ந்தோம் என்ற மனநிறைவுடன் திரும்பினோம்.

#அந்த #நாள்!
#அருமையான_நாள்!

20/08/2023

முன்னணி பாலிவுட் புள்ளி #கரண் #ஜோகர் தயாரித்து இயக்கிய
இந்தி சூப்பர் ஹிட் படம் - ராக்கி அவுர் ராணிக்கு பிரேம் கஹானி!
#படம் #பார்த்தேன்! ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தின் ரீமேக்!
ரன்வீர் கபூர் கதாநாயகன்! அலியா பட் கதாநாயகி! தர்மேந்திரா, ஷபானா ஆஸ்மி, ஜெயா பச்சன் - மூன்று மூத்த முத்திரை நட்சத்திரங்கள் நடித்து
கலக்கி இருக்கிறார்கள். தர்மேந்திரா - ஷபானா ஆஸ்மி, ஜெயா பச்சன் இடையே ஒரு முக்கோண உறவு; அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவை ததும்பும் வகையில் கொண்டு போய் இருக்கிறார் கரண் ஜோகர்! பழைய மறக்க முடியாத இந்தி பாடல்கள் பொருத்தமான இடத்தில் ஏராளமாக பயன்படுத்தப்பட்டு உள்ளன.

பாடல்கள், நகைச்சுவை அனைத்தும் அமர்க்களம்! சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் கதாநாயகி காதலன் வீட்டுக்கு சென்று அவர்களுடன் பழகி அவர்கள் மனதில் இடம் பிடிப்பது போல் இங்கும் உண்டு! கூடுதல் சிறப்பு ரன்வீர் கபூரும் காதலி வீட்டில் இருந்து கொண்டு அந்த குடும்பத்தில் ஒருவராக ஒன்றி விட முயற்சி செய்கிறார். அலியா பட் குடும்பம் கொல்கத்தா வில் ஒரு கலை, இலக்கிய குடும்பம்! ரன்வீர் பட் குடும்பம் ஒரு பெருவணிக குடும்பம்! இந்த இரண்டு குடும்பங்களும் எவ்வாறு இணைகின்றன என்பதே கதை.

ஆரம்பத்தில் நினைவு தடுமாறிய முதியவராக வரும் தர்மேந்திரா தனது காதலி ஜெர்மியா என்று நினைத்து வேறொரு முதியவருக்கு முத்தம் கொடுப்பது முதல் தொடங்கி ரன்வீர் - அலியா பட் இருவரும் பல காட்சிகளில் லிப் டு லிப் கிஸ் ஒரு பத்து தடவைகள் ஆவது கொடுக்கிறார்கள். கமல் பிரபலப்படுத்திய கட்டிப்புடி வைத்தியமும் கதையில் கலகலப்பான காட்சிகள் உடன் இடம் பெறுகிறது !

படம் முழுவதும் விறுவிறுப்பாக, நேரம் போவதே தெரியாமல் போகிறது! "தோ லேரே" தேவதாஸ் பாடலுக்கு மாமனார், மருமகன் அபிநயம் பிடித்து ஆடுவது அட்டகாசம். டெல்லியில் உள்ள முக்கிய இடங்கள், கொல்கத்தா காளி பூஜை காட்சிகள் படத்தில் கதைக்கு உதவும் வகையில் இணைக்கப்பட்டு உள்ளன. காட்சிகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளன. இறுதிக் காட்சிகள் மனத்தை உருக்குவதாக உள்ளது!
மூன்று சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தை பார்த்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது!

பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளை அன்பு காட்டி வளர்க்க வேண்டும்; அச்சம் அடைய வைத்து வளர்க்கக்கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக ஜனரஞ்சகமாக சொல்கிறது படம்.

இந்தி படம் பார்ப்பவர்கள், இந்தி பாடல்கள் ரசிப்பவர்கள் அனைவரும் தவறாமல் பாருங்க!

27/07/2023

இயக்குனர் மா. #தொல்காப்பியன் இயக்கத்தில் நான் ஒரு #குறும்படம் தயாரித்து இருக்கிறேன். பெயர் 'நல்ல வரைஞர்'! அதன் பிரிவியூ காட்சி டிஎஸ்ஆர் அரங்கில் கடந்த 23 அன்று மாலை நடைபெற்றது. இப்போது அதன் சப்டைட்டில்கள் (துணைத் தலைப்புகள்) நானே எழுதி, அதை இயக்குனர் உடன் இணைந்து முடித்திருக்கிறோம். விரைவில் அது அரங்கேறும் என்ற செய்தியை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே!

27/07/2023

#பாசமலர்கள்!
அன்பான #வாழ்த்துக்கள்!

Happy moments

https://instagram.com/thamizhachi.thangapandian.army?igshid=MzNlNGNkZWQ4Mg==

Photos from Rathinam Ramasamy's post 14/07/2023

#மாவீரன்! படத்தோற்றம்! #சிவ_கார்த்திகேயன்! அவரது #குடும்பப் #படங்கள்! அவரே முகநூலில் பகிர்ந்தது!

12/07/2023

அவனுக்கு காதலியின் தங்கை இருந்தால்...
அவளுக்கு காதலனின் தம்பி இருப்பானே!

இந்த ஆணாதிக்க கவிதைக்கு என் பதில் கவிதை!

"அவன் என்னை விட்டு பிரிந்தால்...
நான் துவண்டு விட மாட்டேன்!
தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்! தொடர்ந்து என் வாழ்க்கையை வாழ்வேன்!
அவனுக்கு ஒரு தம்பி இருப்பான் அல்லவா?
அவன் மார்பு போதும்!

(இது என் கருத்து அல்ல!)

30/06/2023

#அழகான #காலை!
#வெள்ளிக்கிழமை! #விடிந்தது #உலகு! #சூரியன் #போற்றுதும்!
சூரியன் போற்றுதும்!
!

06/06/2023

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

03/04/2023

பறவைக்கும் குடிக்க தண்ணீர் வைக்கும் ஏர்போர்ட் மெட்ரோ நிர்வாகிகளுக்கு நன்றி

03/04/2023
Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

7-4-5, பாஷ்யம் நவரத்தினா குடியிருப்பு, 300, திருநீர்மலை சாலை, Chrompet
Chennai
600044