கத்தோலிக்க நிகழ்வுகளை மக்களின் பார்வைக்கு வெளிக்கொண்டுவருதல்.
Wie gewohnt öffnen
யாழ் அச்சுவேலி தூய சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான கொடிக்கம்பம் ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.
யாழ் அச்சுவேலி தூய சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான கொடிக்கம்பம் இன்று வெள்ளிக்கிழமை 22.04.2022 காலை 9:00 மணிக்கு ஆசீர்வதிக்கப்பட்டு ஆலய முன்றலில் பங்கு மக்களின் ஒத்துழைப்போடு ஏற்றி வைக்கப்பட்டது.
தூய சூசையப்பர் நாமம் கொண்ட கொடிகம்பத்தினை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி றோய் பேடினன் அடிகளார் ஆசீர்வதித்து இறை வேண்டுதல் செய்து பங்கு மக்களோடு சேர்ந்து கொடிக்கம்பம் உயர்த்தப்பட்டது.
அச்சுவேலி தூய சூசையப்பரின் திருவிழாவிற்கான நவநாட்கள் இன்றில் இருந்து 22.04.2022 தொடக்கம் 01.05.2022 திருவிழா திருப்பலியுடன் நிறைவடைய உள்ளது என்பதனை இறைமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
நவநாட்கள் ஒவ்வொரு நாளும் மாலை 5:45 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும் என்பதனை அறியத்தருகின்றோம்.
அத்தோடு 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் நன்மைத் திருப்பலியானது காலை 6:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.
30.04.2022 அன்று மாலை நற்கருணை பெருவிழாவானது மாலை 5:45 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நற்கருணை ஆராதனையும் , பவனியும் இடம்பெறும், அதனை தொடர்ந்து தூய வளனாரின் திருச்சுருப பவனியும் இடம்பெறும்.
01.05.2022 ஞாயிறு காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், புனிதரின் திருச்சுருப ஆசீரும் இடம்பெறும்.
தூய சூசையப்பரின் இறையாசீரை பெற்றிட பங்குத்தந்தையுடன் இனைந்து பங்கு மக்கள் உங்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றார்கள்.
#கர்தினால் #தலைமையிலான 60 #பேரடங்கிய #குழு #வத்திக்கான் #பயணமானது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது.
இன்று காலை வத்திக்கான் நோக்கி பயணமான இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோவும் அடங்குகிறார்.
அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமைய, குறித்த குழுவினர் வத்திக்கான் பயணமாகியுள்ளனர்
#உயிர்ப்பு #ஞாயிறு #படுகொலைக்கும் #அவலநிலைக்கும் #யார் #காரணகத்தா #என்பது #வெளியாக #வேண்டும்
"அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார்".
உயிர்ப்பு ஞாயிறு படுகொலைக்கும் அவலநிலைக்கும் யார் காரணகத்தா என்பது வெளியாக வேண்டும் என அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் இவ் நாள் நினைவேந்தலின்போது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மேலும் தெரிவிக்கையில்
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நாங்கள் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலை நடாத்தினோம்.
இந்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பெற வேண்டும்.
அத்துடன் இதில் மரணித்தவர்களின் ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றிக் கிடைக்கப்பெற வேண்டும் என நாங்கள் இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.
அத்துடன் இவ் தாக்குதலில் காணப்பட்டு வாழும் மக்களுக்கு தொடர்ந்து அவர்களின் உடல் உள நலமாக இருக்க வேண்டும் எனவும் இறைவனை நோக்கியவர்களாக இன்றைய நாளில் வேண்டிக்கொண்டோம்.
இன்றைய நாட்டின் நிலையை நோக்கும்போது தொடர்ந்து அவலமான நிலையே தொடர்கின்றன.
மக்கள் மத்தியில் பொருளாதார பிரச்சனை அரசியல் பிரச்சனை இதற்கிடையில் கொழும்பு மறைமாவட்டத்தில் ஆயர்கள் குருக்கள் மற்றும் ஏனைய மறைமாவட்டங்களில் இவ் நாட்டின் நிலைமையை முன்வைத்து செபிக்கின்றார்கள்
அத்துடன் யாராக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்த படுகொலைக்கும் அவலநிலைக்கும் யார் காரணகத்தா என்பது வெளியாக வேண்டும் என அரசையும் அத்துடன் இறைவனையும் நோக்கி வேண்டியவர்களாக இருக்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.
(#தமிழ் #கத்தோலிகாக #சுவிஸ் #இலங்கை #ஊடக #செய்தியாளர் திரு வாஸ் கூஞ்ஞ)
#ஏப்ரல் 21 #உயிர்த்த #ஞாயிறு #அன்று #ஆலயங்களில் #நடாத்தப்பட்ட #தாக்குதலின் #மூண்றாண்டு #நினைவேந்தல் #மன்னாரில் #அனுசரிப்பு
ஏப்பிரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று ஆலயங்களில் நடாத்தப்பட்ட தாக்குதலின் மூண்றாண்டு நினைவேந்தல் மன்னாரில் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் வியாழக்கிழமை (21.04.2022) மாலை ஆறு மணியளவில் நடைபெற்றது.
தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் தாழ்வுபாடு பங்குத் தந்தை அருட்பணி சூ.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மன்னார் மூர்வீதி பெரிய பள்ளிவாசல் மௌலவி அசீம் பிரஜைகள் குழு செயலாளர் ஏ.பத்திநாதன் குரூஸ் உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(தமிழ் கத்தோலிக்க ஊடக செய்தியாளர் (சுவிஸ் இலங்கை) #திரு.#வாஸ் #கூஞ்ஞ)
இன்றைய அவசர உடனடித் தேவையாக இருப்பது இன்றைய நிலையை வேகமாகச் சரி செய்து நாட்டை மேலும் அழிவு நிலைக்குக் கொண்டு செல்லாது பாதுகாப்பதாகும்.
யாழ் ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் #ஈஸ்ரர் #வாழ்த்துச் #செய்தி
அரசியல் பதவியில் இருப்போர் வெற்றி - தோல்வி மற்றும் பதவியில் இருப்பு - பதவி இழப்பு என்ற நிலைப்பாடுகளைப் பெரிதுபடுத்தாது நாட்டு நலனை மட்டும் முன்வைத்து செயற்பட வேண்டும். நாடு இன்னும் மோசமான நிலைக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு துணிகரமான முடிவுகளை அவை தமக்குச் சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நாட்டு நலனுக்காக எடுக்க வேண்டும் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை முதலில் தெரிவிக்கிறோம், அதே வேளை தமிழ் - சிங்கள புத்தாண்டை ஏற்கனவே கொண்டாடியுள்ள அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
இலங்கை நாடு இன்று என்றுமில்லாதவாறு ஒரு மிகுந்த இக்கட்டான கால கட்டத்தில் உள்ளது. இலங்கை மக்கள் எல்லோரும் இன மத பிரதேச வேறுபாடின்றித் தமது எல்லாத் தனித்துவங்களையும் மறந்து அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காக அரச எதிர்ப்புப் போராட்டங்களில் ஒன்றிணைந்துள்ளனர்.
தமிழ் மக்கள் நடந்து முடிந்த கடந்த 30 ஆண்டு காலப்போரில் அனுபவித்த கடினமான அனுபவங்களை மீண்டும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
கோப்பேகடுவ லாம்ப் என அழைக்கப்படும் தேங்காய் எண்ணையும் பஞ்சும் வைத்து எரித்த விளக்கில் பல காலம் வாழ்ந்தவர்கள். வீதி விளக்கில் படித்தவர்கள். சூப்பி போத்தல் என அழைக்கப்படும் சிங்கர் ஒயில் கானில் பெற்றோளை வைத்து ரியூப் மூலம் செலுத்தி வாயால் ஊதி மோட்டார் சைக்கிளை பெற்றோளில் இயக்கத் தொடங்கி மண் எண்ணையில் ஓடியவர்கள், சைக்கிள் பெடலைச் சுற்றி டைனமேற்றில் இருந்து கறண் எடுத்து றேடியோ கேட்டவர்கள், மின்சாரம் உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாமல் ஊரடங்கிலும் உணவுத் தட்டுப்பாட்டிலும் உயிர்ப் பயத்திலும் பல காலம் வாழ்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல மாதங்களாக இன்னும் வீதியில் உள்ளனர். அரசியற் கைதிகள் இன்னும் சிறைகளில் உள்ளனர்.
தமிழ் மக்கள் கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்கள் எப்படியானவை என்பதைச் சிங்கள மக்களும் இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அவற்றைச் சிறிதும் தாங்க முடியாமல் இலங்கையின் பல இடங்களிலும் பல நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் உள்ளனர்.
இலங்கை நாட்டை இந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று யாரும் திட்டமிட்டுச் செயற்படவில்லை. மாறாக அதிகாரத்தில் இருப்போரால் எடுக்கப்பட்ட சில வேண்டாத நடவடிக்கைகளும் தவறான முடிவுகளும் பிழையான வழிநடத்தல்களுமே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
இன்றைய அவசர உடனடித் தேவையாக இருப்பது இன்றைய நிலையை வேகமாகச் சரி செய்து நாட்டை மேலும் அழிவு நிலைக்குக் கொண்டு செல்லாது பாதுகாப்பதாகும். நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள இலங்கை மக்கள் அனைவரும் மண்ணின் சுபீட்சமான எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இக்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மக்கள் அனைவருக்கும் அன்பு அழைப்பு விடுக்கிறோம்.
தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கை நாட்டின் சகோதர இனங்களாகத் தமது இன மத பேதங்களை மறந்து இணைந்து நின்று நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நிறைவேற்று ஜனாதிபதி முறை - குடும்ப அரசியல் - இனவாத ஆட்சி என்பவற்றை ஒழித்து பொருத்தமான அரசியற் திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு புதிய யாப்பு என்பவற்றின்வழி ஒரு புதிய சகாப்பத்தை உருவாக்க வேண்டும். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கொப்ப இலங்கையின் எல்லா இனங்களும் இணைந்து புலம்பெயர் தமிழரின் பொருளாதார பலத்தையும் இணத்து நாட்டை ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.
தமிழ் கட்சிகள் தத்தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்குச் சாதகமாகச் சாதுரியமாகப் பயன்படுத்த வழிமுறைகளை வகுக்க வேண்டும்.
அரசியற் கைதிகள் விவகாரம் - காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண இச்சந்தர்ப்த்தைப் பயன்படுத்தி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அரசியல் பதவியில் இருப்போர் வெற்றி - தோல்வி மற்றும் பதவியில் இருப்பு - பதவி இழப்பு என்ற நிலைப்பாடுகளைப் பெரிதுபடுத்தாது நாட்டு நலனை மட்டும் முன்வைத்து செயற்பட வேண்டும். நாடு இன்னும் மோசமான நிலைக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு துணிகரமான முடிவுகளை அவை தமக்குச் சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நாட்டு நலனுக்காக எடுக்க வேண்டும்.
இந்த இக்கட்டான நிலையில் மக்கள் அவர்கள் ஆதரவாளர்களாகவோ அல்லது எதிர்ப்பாளர்களாகவோ இருந்தாலும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து அவர்களை இன மத பேதமின்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பாரமரிக்க வேண்டிய பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசிற்குரியது.
இன்றைய இக்கட்டான நிலையில் அனைவருக்கும் தேவையானது இறை நம்பிக்கையாகும். இலங்கையின் இன்றைய இக்கட்டான நிலையில் இறைவன் அனைவருக்கும் நம்பிக்கையைத் தந்து பாதுகாத்து வழிநடத்த இறையாசீர் மிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(தமிழ் கத்தோலிக்க ஊடகம் சுவிஸ் இலங்கை செய்தியாளர் #திரு.#வாஸ் #கூஞ்ஞ)
பேசாலை வெற்றிமாதா ஆலயத்தில் இடம்பெற்ற பெரிய வெள்ளி ஆசந்தி திரு நிகழ்வு
பேசாலை இறை மக்கள் இயேசுவின் பாடுகளுடன்....புனித வெள்ளி திருச் சிலுவைப்புதை
பேசாலை வெற்றிமாதா ஆலயத்தில் இடம் பெற்ற திருச்சிலுவைப்பாதை தியான வழிபாடு.
15.04.2022
எதிரிகளின் தூண்டுதலின் பேரில் பொன்டியஸ் பிலாத்துவால் ஆண்டவராகிய இயேசு மரண தண்டனை விதிக்கப்பட்டு துன்பப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாரமான மரச் சிலுவையைச் சுமக்கச் செய்து இறுதியில் அந்தத் தருணத்தை கத்தோலிக்க மக்கள் ஆண்டவரின் பேரார்வத்தின் புனித வெள்ளியை (15.04.2022) உலகம் முழுதும் இன்று நினைவுகூர்ந்து சிந்தித்தனர்.
இந்த வகையில் இலங்கையில் மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கு மக்கள் கிறிஸ்து பாரச்சிலுவையை சுமந்து கல்வாரி மலைக்குச் சென்றதை நினைவுகூர்ந்து தியானிக்கும் திருச்சிலுவைப்பாதை தியானம் மிகவும் பயபக்தியாக இடம்பெற்றது.
(தமிழ் கத்தோலிக்க ஊடகம் சுவிஸ் இலங்கை செய்தியாளர் #வாஸ் #கூஞ்ஞ)
பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பாடுகளின் பெரிய வியாழன் திருச்சடங்கு
Neu in Aarau? Du suchst Anschluss? Es warten tolle Projekte der Jugendarbeit Aarau auf dich!
Die Minoritätsgemeinde ist eine unabhängige, vereinsrechtlich organisierte Kirche. Sie vermittelt das Evangelium von Jesus authentisch und zeitgemäss.
shearing the word of God
Herzlich willkommen bei der reformierten Kirchgemeinde Aarau.