Jet Media

Jet Media

Share

Global Breaking News | Fast Updates | Cinema News | Entertainment

10/09/2026

ரவி மோகனை குறிவைத்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்!

நடிகர் ரவி மோகனுடனான விவாகரத்து சர்ச்சைக்குப் பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் பதிவுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவில், “சூர்யா, அஜித், விக்ரம், கமல்... இவங்க எல்லாரையும் விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. ஆஸ்கர் அவார்ட்ஸ்கூட கொடுக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு ரவி மோகனை மறைமுகமாகக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ரவி மோகன் – ஆர்த்தி ரவி இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்களது பிரிவுக்கு பாடகி கெனிஷா காரணம் என ஆர்த்தி தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், ரவி மோகன் அதனை மறுத்து, தனக்கான மரியாதையும் சுதந்திரமும் பறிக்கப்பட்டதாலேயே பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், இருதரப்பும் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட கருத்துகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆர்த்தி ரவியின் இந்த புதிய பதிவு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

09/09/2026

AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்

சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது AI Prompt-களை பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை 1980களின் தோற்றத்திற்கு மாற்றி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இன்றைய காலத்தில் AI நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது. தகவல்களை தெரிந்துகொள்வது முதல் புகைப்படங்களை நமக்குப் பிடித்த வகையில் மாற்றுவது வரை பல்வேறு தேவைகளுக்கும் AI பயன்படுத்தப்படுகிறது.

அதேவேளை, AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பிரபலங்களை தவறாக சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் உருவாக்கப்பட்டு வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 80களின் காலகட்டத்தில் தாங்கள் எப்படி இருந்திருப்போம் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பலரும் ChatGPT, Gemini உள்ளிட்ட AI தளங்களை பயன்படுத்தி பழைய கால திரைப்பட ஸ்டைலில் புகைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

09/09/2026

ராஷ்மிகாவை திருமணம் செய்தபின் புது தொழில் தொடங்கும் விஜய் தேவரகொண்டா! – வெளியான புதிய தகவல்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கடந்த பிப்ரவரி 26ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

திருமணத்திற்குப் பின்னரும் ராஷ்மிகா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஏற்பட்ட இடுப்பு காயம் காரணமாக அவர் சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, விஜய் தேவரகொண்டா நடிப்புடன் இணைந்து பல்வேறு தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ஆடைத் தொழில், ஹோட்டல் தொழில் மற்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் உள்ளிட்ட தொழில்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மேலும் ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கை தொடங்க விஜய் தேவரகொண்டா திட்டமிட்டு வருவதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள மேட்சல் அல்லது மல்காஜ்கிரி பகுதியில் புதிய திரையரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

08/09/2026

விஜய் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப முடியாது! – மண்டாடி பட விழாவில் நடிகர் சூரி

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தீவிரமான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூரி தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள் கவனிக்கத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விடயம் எனக் குறிப்பிட்ட சூரி, “சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என தெரிவித்துள்ளார்.

‘விடுதலை’ திரைப்படத்திற்குப் பின்னர் கதாநாயகனாகவும் ஆக்ஷன் ஹீரோவாகவும் கவனம் பெற்றுவரும் சூரியின் இந்தக் கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

07/09/2026

துருப்பிடித்த அரசியல் தமிழகத்துக்கு தேவையில்லை – சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் அதிரடி

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளைப் போன்று அரசியல் செய்ய தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சட்டம்–ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளில் உள்நோக்கம் இருந்தாலும், அதில் உண்மை உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்கும் என அவர் கூறினார்.

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் 4,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.

மேலும், இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்ட அவர், கடந்தகால ஆட்சிகளின் குற்றங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய தாம் விரும்பவில்லை என்றும் கூறினார்.

அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றாலும், தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்க்க வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தினார்.

அவரது உரையின்போது அவையில் கூச்சல் மற்றும் குழப்பம் ஏற்பட்டதாகவும், விஜய்க்கு எதிராக திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி அவர்கள் வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07/09/2026

விஜய் சேதுபதியின் மீசை இல்லாத லுக் – மோகன்லாலின் கமெண்ட் வைரல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே நாளில் தொடங்கியதை முன்னிட்டு, பல மொழி தொகுப்பாளர்களும் காணொளி வாயிலாக கலந்துரையாடினர்.

அப்போது விஜய் சேதுபதி மீசை இல்லாத புதிய தோற்றத்தில் இருந்ததை கவனித்த மலையாள நடிகர் மோகன்லால், “மீசை இல்லாமல் சூப்பராக இருக்கிறீங்க!” என பாராட்டினார்.

அதற்கு விஜய் சேதுபதி, “சார், நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து பில்டிங்கில்தான் இருக்கிறோம்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

இரு நடிகர்களின் இந்த கலகலப்பான உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் சென்னையில்தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

06/09/2026

அஜித்தின் அறிக்கையால் வெடித்த சர்ச்சை – ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி, இணையத்தில் இருதரப்பு வாதம்

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் அவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

மேலும், விஜய்யின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அஜித் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

அஜித்தின் அறிக்கைக்கு எதிராக சில ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அதனை வரவேற்று, இருவருக்கும் இடையேயான பரஸ்பர மரியாதையை பாராட்டி வருகின்றனர்.

இதனால் அஜித்தின் அறிக்கை தொடர்பான விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் இருதரப்பு வாதமாக தீவிரமடைந்துள்ளது.

06/09/2026

பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு பட்டியல்! – 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 10

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடக்க விழாவில் எதிர்பாராத திருப்பமாக 35 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மக்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் 11 பேர் தொடக்க விழா மேடையிலேயே வெளியேற்றப்பட்டனர்.

பிக் பாஸ் 10 வீட்டிற்குள் நுழைந்தவர்கள்:

லட்சுமி பிரியா – சீரியல் நடிகை
ஷத்திகா – சீரியல் நடிகை
ப்ரித்விநாத் – மாடல்
ஜாவித் – மாடல்
அஸ்மிதா – மேக்கப் கலைஞர்
முத்தழகி – நடிகை
அவினாஷ் – சீரியல் நடிகர்
ராகவ் ரகுநாதன் – சீரியல் நடிகர்
குமரன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்
சாந்தினி தமிழரசன் – திரைப்பட நடிகை
வினோத் பாபு – சீரியல் நடிகர்
பிளாக் பாண்டி – நகைச்சுவை நடிகர்
முனியம்மா
ஜேசன்
ஷமா

தொடக்க விழாவில் வெளியேற்றப்பட்டவர்கள்:

பிரஷாந்த் – விமர்சகர்
அக்ஷிதா – சீரியல் நடிகை
கவிதா மோகன் – யோகா பயிற்றுநர்
ஷப்னம் – சீரியல் நடிகை
மாளவிகா – மாடல்

05/09/2026

தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு – அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை!

தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் சிட்டி அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் அஜித் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது தீவிர ஆர்வம் கொண்ட அஜித், சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவரது பந்தய அணியும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

பல ஆண்டுகளாக திரையுலகில் போட்டியாளர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்ட விஜய் மற்றும் அஜித், தற்போது வெவ்வேறு துறைகளில் பயணித்து வரும் நிலையில், முக்கியமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்துக்காக அஜித் நன்றி தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

04/09/2026

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா! - திடீர் லண்டன் பயணத்தின் உண்மையான காரணம் வெளியானது

நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற வதந்திகள் சமீபகாலமாக பரவி வந்த நிலையில், தனது புதிய திரைப்பட அறிவிப்பின் மூலம் அந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ‘பனோரமா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் புதிய சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படத்தில் த்ரிஷா நடிக்கிறார். அவருடன் ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இப்படத்தை இயக்குகிறார். இது அவரது முதல் தமிழ் திரைப்படமாகவும், முதல் சைக்கலாஜிக்கல் ஹாரர் படமாகவும் அமைகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருவதாலேயே த்ரிஷா அங்கு தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற பேச்சுக்கும், அவரது லண்டன் பயணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய பல்வேறு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Website