Akam
உங்கள் இல்லக் கனவுகள் நனவாகும் இடம்..!
வீடு வாங்கலாம் வாங்க.. !
05/03/2022
😒கனேடிய மத்திய வங்கி ( Bank of Canada ) தனது கொள்கை வட்டி வீதத்தை (Policy Interest Rate) மார்ச் மாதம் 2ம் திகதி அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பானது 2018 ம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலாவது அதிகரிப்பாகும்.
🤦♂️இதுவரை 0.25 சதவீதமாக இருந்து வந்த மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அல்லது ஒரு நாளைக்கான வட்டி ( Overnight Interest Rate) வீதம் தற்போது 0.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இந்த வட்டி வீத அதிகரிப்பினையும் இதனால் ஏற்படும் தாக்கங்களையும் புரிந்து கொள்வதற்கு கனேடிய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அல்லது நாளொன்றிற்கான வட்டி வீதம் என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியமானது.😎
கனடாவின் பிரதான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தமக்கிடையிலான பணப்பரிமாற்றத்திற்காக செலுத்த வேண்டிய வட்டி வீதமே கொள்கை வட்டி வீதம் எனப்படுகின்றது.
✨அதாவது நிதி நிறுவனங்கள் தமது தேவைக்கான நிதியினை வேறு ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்று அதனை அடுத்த நாளில் மீளச் செலுத்தும் போது அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தையே வங்கியின் கொள்கை வட்டி வீதம் ( Policy Interest Rate அல்லது ஒரு இரவுக்கான வட்டி வீதம் (Overnight Interest Rate ) என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்த வட்டி வீதத்தை கனேடிய மத்திய வங்கியே தீர்மானிக்கின்றது. இந்த வட்டி வீதம் ஒரு வருடத்தில் 8 தடவைகள் மாற்றப்பட முடியும்.
எந்தெந்த திகதிகளில் இந்த வட்டி வீதம் மாற்றப்படும் என்பதை முன் கூட்டியே மத்திய வங்கி தீர்மானித்து அது தொடர்பான அறிவித்தலையும் வெளியிட்டு வருகின்றது.
2018ம் ஆண்டு ஒக்ரொபர் மாதம் கனேடிய மத்திய வங்கி தனது நள்ளிரவு வட்டி வீதத்தை 1.75 ஆக அதிகரித்திருந்தது. ஆதன் பின்னர் 2019ம் ஆண்டில் இந்த கொள்கை வட்டிவீதம் மாற்றப்படாமல் இருந்தது.
2020 ஆண்டு கொவிட் பெரும்பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் மூன்று தடவைகள் குறைக்கப்பட்டு 0.25 சதவீதம் எனும் ஆகக் குறைந்த கொள்கை வட்டி வீதமாக மாற்றப்பட்டது.
2020ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் இந்த வட்டி வீதம் மாற்றப்படாமல் இருந்த வந்த நிலையில் இந்த மாதம் 0.25 சதவிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
🤷♂️இந்த ஆண்டில் இன்னமும் 6 தடவைகள் வட்டி வீதம் மாற்றப்படுவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றில் ஒரு முறை மட்டுமே வட்டி வீத அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது.
இதன் மூலமாக இந்த ஆண்டு இறுதியில் 0.75 சதவீதமாக கொள்கை வட்டி வீதம் மாற்றமடையும் நிலை காணப்படுகின்றது.
இந்த கொள்கை வட்டி வீதமானது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன், அடமானக் கடன் ஆகியவற்றிற்காக அறவிடும் வட்டி வீதத்தை தீர்மானிக்கும்.
கனேடிய மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதமானது கனடாவின் ஏனைய வங்கிகளின் முதன்மை வட்டி வீதத்தில் ( Prime interest Rate ) தாக்கம் செலுத்துகின்றது.
2018 ம் ஆண்டில் 3.95 சதவீதமாக இருந்த முதன்மை வட்டி வீதம் 2020ம் ஆண்டு கொள்ளை வட்டி வீதம் குறைக்கப்பட்டதை அடுத்து 2.45 சதவீதமான ஆக குறைக்கப்பட்டது.
🍟🍟இதனால் அதிகளவான மக்கள் தமது வீடுகளில் இருந்த மேலதிக நிதிப் பங்கை (Equity) குறைந்த வட்டியில் பெற்று வேறு ஆதனங்களில் முதலிட்டார்கள்.
இதன் காரணமாக வீட்டுச் சந்தையில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது.
தேவையான முற்பணத்தை தமது வீடுகளில் இருந்த குறைந்த வட்டி விதத்தில் பெற்றுக் கொண்ட பலர் தமக்கான முதலீட்டு ஆதனங்களை கொள்வனவு செய்ய முற்பட்டனர்.
இதனை விடவும் அரசாங்கம் அறிவித்த வியாபார ஊக்குவிப்பு உதவித் தொகையினையும் பலர் வீடுகளில் முதலிடுவதற்கு பயன்படுத்தினார்கள்.
குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிகளவான பணவருவாய் வீடுகளுக்கான பெரும் போட்டி நிலையை கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கியது.
இதனை சாதமாக பயன்படுத்தி கட்டுமான நிறுவனங்களும் தமது புதிய வீடுகளின் விற்பனைப் பெறுமதியை மிக கணிசமாக அதிகரித்தது.
சில இடங்களில் இருமடங்காக விலை அதிகரிக்கப்பட்டமையும் அதனை கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளர்கள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டமையினையும் அவதானிக்க முடிந்ததது.
இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் போது சந்தைப் பெறுமதி குறைவடைந்தால் அதற்கான அடமானக் கடனை பெறுவது மிகவும் சிரமமானதாக மாறிவிடும் என்ற அபாய நிலையை பலர் உணரத் தவறியுள்ளனர்.
😢இந்த போட்டி நிலை காரணமாக முதல் தடவையாக வீடுகளை கொள்வனவு செய்வதற்கு காத்திருந்த பலர் தமது சொந்த வீட்டு கனவுகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மறுபுறமாக குறுகிய காலத்தில் வீடுகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்தவர்கள் ( Flipping) அதிக நன்மை அடைந்திருக்கின்றார்கள்.
இன்னும் சில காலம் வைத்திருந்தால் அதிக இலாபம் கிடைக்கும் என்ற நோக்கில் வேறு பலர் முதலீட்டுக்காக கொள்வனவு செய்த வீடுகளை வாடகைக்கு கொடுத்துள்ளார்கள்.
மறுபுறம் சந்தைப்பெறுமதியை விட அதிக விலை கொடுத்து விடுகளை முதலீட்டுக்காக கொள்வனவு செய்தவர்கள் அவற்றினால் கிடைக்கின்ற வாடகை வருமானம் ( Rental income) வீட்டின் அடமானக் கடனை ( Mortgage Loan) செலுத்தவற்கு போதுமானதாக இல்லாத நிலையில் நெருக்கடிக்குள்ள தள்ளப்பட்டுள்ளார்கள்.
😕பணத்தை விழுங்கும் முதலீடுகள் 🐊🐊( Alligator Properties) என அடையாளப்படுத்தப்படும் இது போன்ற முதலீடுகள் மிக ஆபத்தானவை என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றார்கள்.
😭😭சாதாரணமாக மாதாந்த வருமானத்தில் தங்கி வாழும் மக்கள் இது போன்ற ஆபத்தான முதலீடுகளால் பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனையவர்கள் அதிக இலாபமீட்டியதை வைத்து தாங்களும் அது போல் குறுகிய காலத்தில் இலாபமீட்ட முடியும் என்று நம்பி பலர் சந்தைப் பெறுமதியை விட அதிகமாக விலை கொடுத்து வீடுகளை கொள்வனவு செய்திருக்கின்றார்கள்.
அவர்கள் அந்த வீட்டை வாடகைக்கு வழங்கினால் ஒரு வருடத்திற்கு அதனை விற்பனைக்கு விடுவது சாத்தியமற்றதாகி விடும்.
🥺🤬வங்கிகள் வட்டி வீதத்தை அதிகரிக்கும் போது கடன் சுமை அதிகரிக்கும் ஏற்கனவே பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளது. நடைபெறும் உக்ரேனிய யுத்தம் மேலதிக பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில் சரியானதும் பொருத்தமானதுமான ஆலோசனைகளை பெற்று நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனைகள் தெரிவிக்கபட்டுள்ளது.
வீட்டுகளில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது தெளிவான புரிதலொடும் தூரநோக்கோடும் முடிவுகளை எடுப்பத மிக அவசிமானது என்பதையே வீட்டுச் சந்தையில் கடந்த கால மாற்றங்கள் எமக்கு எடுத்தக் காட்டி நிற்கின்றன.
🎇ரொரன்ரோவின் வீட்டுச் சந்தையில் கடந்த இரண்ட ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த உக்கிரமான நிலை அண்மை நாட்களில் மாற்றமடையத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தற்போது பெருமளவு வீடுகள் சந்தைக்கு வருவதையும் கேள்விப் பெறுதியை விட அதிக விலைக்கு விற்பனையாகும் சந்தர்ப்பங்கள் வீழ்ச்சியடைவதையும் காண முடிகின்றது.
புதிய ஆண்டு புதிய நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்திருக்கின்றது.
எமது இலக்குகளை வெற்றி கொள்வதில் நிதி முகாமைத்துவம் Financial Management என்பது மிக முக்கியமானது.
எமது உடல் ஆரோக்கியம் போலவே நிதி ஆரோக்கியம் Financial Health குறித்தும் நாம் அக்கறை கொள்ள வேண்டும்.
குறிப்பாக எமது அடுத்த தலை முறைக்கு நிதி முகாமைத்துவம் குறித்து அறிவூட்டுவது இன்றியமையாதது.
ஆதன முதலீடுகளில் Investing in Properties பலரும் அக்கறை கொண்டுள்ள நிலையில் அதில் முக்கிய கவனம் செலுத்தப��பட வேண்டிய விடயங்கள் குறித்த அறிவு அவசியமாகின்றது.
இந்த விடயங்கள் குறித்தும் Mayuran Tharmapalan Professional Corporation இன் கணக்காளர் மயூரன் தர்மபாலனுடன் உரையாடுகின்றது இன்றைய Let’s Talk with Ramanan