Ramanan Report

Ramanan Report

Share

Welcome to our channel, Where we bring you the latest updates and in-depth analysis on current affairs

02/19/2026

மார்க் கானியின் துரோகம் !!
கனடாவிற்கு முதலிடமா ? லிபரல்களுக்கு முதலிடமா ?

08/09/2024

வாடகைக் குடியிருப்பாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பயன்படுத்தும் முக்கிய ஆவணங்கள்

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

முதலீட்டுக்காக வீடுகளை கொள்வனவு செய்து அதில் வாடகைக் குடியிருப்பாளர்களை குடியமர்த்தி அதன் மூலமாக குறிப்பிடத்தக்க வருமானத்தை பெறுவது சாதாரணமான ஒரு விடயமாக காணப்படுகின்றது.

எனினும் வாடகைக் குடியிருப்பாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் அரசாங்கங்கள் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றது.

அந்த வகையில் வீட்டு உரிமையாளர்களுக்கும் வாடகை குடியிருப்பாளர்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு சில முக்கியமான ஆவணங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தின் அடிப்படை வாடகை ஒப்பந்த பத்திரம் ( Residential Tenancy Agreement (Standard Form of Lease ) இதில் முக்கிமானது.

ஒரு வாடகைக் குடியிருப்பாளரை குடியமர்த்தும் போது இந்த ஒப்பந்தம் இரு தரப்பினாலும் மேற்கொள்பட வேண்டும் என்பதை மாகாண அரசாஙகம் கட்டாயமாக்கியிருக்கின்றது.

வீடு விற்பனை முகவர்கள் மூலமான வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாலும் அதற்கு மேலதிகமான இந்த ஒப்பந்தம் அவசியமானது என வலியுறுத்தப்படுகின்றது.

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து தெளிவான அறிவூட்டலை இந்த ஒப்பந்தம் வழங்கும் என்பதோடு சட்டத்திற்கு முரணான செயல்பாடுகளையும் இது கட்டுப்படுத்தும்.

𝐅𝐨𝐫𝐦 𝐍𝟏 – வாடகை அதிகரிப்பு அறிவித்தல்
வீட்டு உரிமையாளர் வாடகைக் பணத்தை அதிகரிப்பது தொடர்பான அறிவுறுத்தலை வாடகைக் குடியிருப்பாளருக்கு வழங்குவதற்கு இந்த பத்திரத்தை பயன்படுத்த முடியும்.

ஆகக் கூடுதலாக 2.5 சதவீத வாடகை அதிகரிப்பினை வீட்டு உரிமையளார்கள் மேற்கொள்ள முடியும். இறுதியாக மேற்கொள்ளப்பட்ட வாடகை அதகரிப்பின் பின்னர் குறைந்த பட்சம் 12 மாதங்கள் கடந்த பின்னரே இந்த அதகரிப்பினை மேற்கொள்ளலாம்.

அத்துடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
எனினும் 2018ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகள் அல்லது நிலக் கீழ் குடிமனைகள், போன்றவற்றிற்கு இந்த வாடகை அதகரிப்பில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பின் இணக்கப்பாட்டுடன் 2.5 சதவீதத்திற்கும் அதிகமான வாடகை அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் இந்த அதிகரிப்பானது குறித்த பகுதியில் காணப்படும் சராசரி வாடகைக்கு அடைவானதாக அமைய வேண்டும் என்பது முக்கியமானது.

𝐅𝐨𝐫𝐦 𝐍𝟒 – வாடகைப் பணம் செலுத்த தவறியமையால் வாகை ஒப்பந்தத்தை முன் கூட்டியே முடிவுறுத்தும் அறிவுறுத்தல்
*******************************************************************

வாடகைக் குடியிருப்பாளர் வாடகைப் பணத்தை செலுத்த தவறினால் வீட்டு உரிமையாளர் வாடகை ஒப்பந்தத்தை முன் கூட்டியே முடிவுறுத்தும் தீர்மானத்தை எடுப்பதற்கான ஏற்பாட்டினை இந்த பத்திரம் கொண்டுள்ளது.

உதாரணமாக வாடகைக் கொடுப்பனவு முதலம் திகதி வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் செய்து; கொள்ளப்படட நிலையில் வாடகைக் குடியிருப்பாளர் முதலம் தகதி வாடகைப் பணத்தை முழமையாக செலுத்தத் தவறினால் அடுத்த நாள் இந்த பத்திரத்தை வீட்டு உரிமையாளர் வாடகைக் குடியிருப்பாளருக்கு வழங்க முடியும்.

இந்த பத்திரம் 14 நாட்கள் கால அவகாசத்தை வாடகைக் குடியிருப்பாளருக்கு வழங்கும்.

இந்த பத்திரம் வழங்கப்பட்டால் வாடகைக்
குடியிருப்பாளருக்கு மூன்று தெரிவுகள் இருக்கும்.

1.குறித்த காலப் பகுதிக்குள் வாடகைப் பணத்தை முழமையாக செலுத்துவதன் மூலம் ஒப்பந்தம் முறிவடைவதை தவிர்ப்பது.
2.வீட்டினை விட்டு குறிப்பிட்ட கால எல்லைக்குள்ள வெளியேறுவது
3.மேற்கூறிய இரண்டு தெரிவுகளையும் தவிர்த்து விட்டு வீட்டு உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பது.

இந்த பத்திரத்தை பூரத்தி செய்யும் போது மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமானது. தவறான தகவல்கள் அல்லது முழுமை பெறாத விண்ணப்பங்கள் அந்த பத்திரத்தை செல்லுபடியற்றதாக்கிவிடும்.

𝐅𝐨𝐫𝐦 𝐍𝟏𝟏 இருதரப்பின் இணக்கத்துடன் வாடகை ஒப்பந்தத்தை முடிவுறுத்தல்
***************************************************************
வாடகைக் குடியிருப்பாளரும் வீட்டு உரிமையாளரும் இரு தரப்பு இசைவுடன் வாடகை ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதற்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் படிவம்.

இதில் கையொப்பமிடுமாறு ஒரு தரப்பு மற்றயை தரப்பை பலவந்த படுத்த முடியாது.

இரு தரப்பும் புரிந்துணர்வுடன் இருதரப்பு இசைவுடன் இந்த படிவத்தை பூரத்தி செய்து கையொப்பமிட வேண்டும்.

𝐅𝐨𝐫𝐦 𝐍𝟏𝟏 வீட்டு உரிமையாளர் அல்லது அவரது குடும் உறுப்பினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு குடியெர்வதால் வாடகை ஒப்பந்தம் முடிவுறுத்தப்படுதல்
*********************************************************************

வீட்டு உரிமையாளர் அல்லது அவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு குடிபெயர்வதாக இருந்தால் அந்த வீட்டின் வாடகைக் குடியிருப்பாளருடன் செய்து கொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை வீட்டு உரிமையாளர் முடிவுறுத்துவதனை அறிவிக்கும் படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து வாடகைக் குடியிருப்பாளரிடம் வழங்க வேண்டும்.

குறித்த வாடகைக் குடியிருப்பாளர் மாதாந்த வாடகை முறையில் குடியிருப்பவராக இருந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் இதனை வழங்க முடியும். ஆனால் குறித்த மாத வாடகைக்கான கால எல்லை முடிவுறும் வேளையில் வாடகைக் குடியிருப்பாளர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

நீண்டகால வாடகை ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருந்தாலும் இந்த படிவத்தை எப்போது வேண்டுமானாலும் வழங்க முடியும் ஆனால் குறித்த ஒப்பந்த காலம் முவடையும் போது தான் வாடகைக் குடியிருப்பாளர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இந்த ஒப்பந்த முறிவுக் கோரிக்கையினை வாடகைக் குடியிருப்பாளர் கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் இதற்கான பிரதிபலிப்பினை வழங்காதிருப்பதற்கு உரிமை உடையவர்கள்.

அவ்வாறான சந்தரப்பத்தில் சட்ட நடவடிக்கை மூலமாகவே அடுத்த கட்ட நகர்வுகளை மே;றகொள்ள முடியும்.

𝐅𝐨𝐫𝐦 𝐍𝟏𝟑 வீட்டு உரிமையாளர் குறித்த வீட்டினை அல்லது வீட்டின் ஒரு பகுதியை திருத்துவதற்கு மாற்றியமைப்பதற்கு தீர்மானித்துள்ளதன் காரணமாக வாடகை ஒப்பந்தம் முடிவுறுத்தப்படுதல்.
*********************************************************************

வீட்டு உரிமையாளர் வாடகைக்கு விடப்பட்டுள்ள வீட்டினை முற்றாக இடித்து புதிய கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்தால் அல்லது குறித்த வீட்டில் பெரியளவிலான திருத்தப் பணிகள் அல்லது கட்டமைப்பு மாற்றங்களை செய்ய முடிவெடுத்தால் வாடகைக் குடியிருப்பாளரை அங்கிருந்து வெளியேற்ற முடியும்.

RE/MAX Community Realty Inc., Brokerage

08/01/2024

A coalition of Ontario developers has written to three levels of government to ask for a reduction in taxes on new housing, saying it will pass on those savings dollar for dollar to homebuyers.

The new group, called the Coalition Against New-Home Taxes, or CANT, is composed of 18 developers who collectively plan to build 100,000 new housing units over the next 10 years.

The coalition wants to see federal and provincial governments remove the harmonized sales tax on all new housing, as they have done for rental housing construction. It would also like the province and the City of Toronto to eliminate the land-transfer tax on new construction homes.

Sales of newly completed and presale units were down 66 per cent year-over-year, and 70 per cent compared to the 20-year average for April through June, the update said.
The coalition would also like to see municipalities reduce development charges to 2009 rates, adjusted for inflation.

Sales figures were especially notable for presale condos. Of the 3,265 units put on the market, only 17 per cent were purchased — the lowest second-quarter uptake in 25 year.

The dramatic slowdown in the new and presale condo market means supply in the region has reached an all-time high of 25,893 units.

"When measured against sales over the past 12 months, unsold inventory equalled 34 months of supply — roughly three times higher than a balanced level of 10-12 months," the update said.


RE/MAX Community Realty Inc., Brokerage

07/18/2024

கடந்த மாதம் கனடாவின் பணவீக்கம் ஜுன் 2.7 சதவீதமாக குறைவடைதுள்ளதாக புள்ளி விபரத் திணைக்கள் குறிப்பிடுகின்றது.

ஜூலை மாதம் 24ம் திகதி கனேடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீத அறிவிப்பினை வெளியிடவுள்ள நிலையில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதான தகவல் முக்கியமானது.

2023ம் ஆண்டு ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2024ம் ஆண்டு வீடுகளின் விற்பனை 16.4 சதவீதம் குறைவடைந்துள்ளதாக ரொரன்ரோ வீடு விற்பனைக் கழகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இந்த வருடத்தின் மே மாதத்தை விட 4.2 சதவீத அதிகரிப்பினை ஜூ; மாத வீட்டுச் சந்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 6,213 வீடுகள் விற்பனையாகியதாகவும் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 7,429 வீடுகள் விற்பனையாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு இதே காலப் பகுதியில் விற்பனையான வீடுகளின் சராசரி விற்பனை விலையாக 1,181,002 டொலர்கள் காணப்பட்டதாகவும் எனினும் இந்த வருடம் ஜூன் மாதம் விற்பனையான வீடுகளின் சராசரி விற்பனை பெறுமதி 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்து 1,162,167 டொலர்களாக பதிவாகியிருக்கின்றது.
பொதுவான இலைதுளிர் பருவகாலம் மற்றும் கோடை காலங்களில் வீடுகளின் விற்பனை அதிகம் இடம்பெறும்
இருந்த போதிலும் இம்முறை இலைதுளிர்கால வீடு விற்பனை என்பது கடந்த காலங்களை விட குறைவடைந்துள்ளது.

வீட்டுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள வீடுகளின் எண்ணிக்கையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்புடுகின்றது.

கடந்த வருடம் ஜூன் 15,995 வீடுகள் விற்பனைக்காக இருந்த நிலையில் இந்த வருடம் இந்த எண்ணிக்கை 17,964 என கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட 12.3 சதவீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

வீடுகள் விற்பனையாவதற்கான காத்திருப்புக் காலம் கடந்த வருடம் 20 நாட்களாக காணப்பட்டது எனினும் இந்த வருடம்; அது 30 நாட்கள் என்ற சாரசரியினை கொண்டுள்ளது.

இந்த புள்ளி விபரங்கள் வீட்டுச் சந்தையில் ஒரு தேக்கமான போக்கினை காணப்பிக்கின்றன.

அதிகரித்துள்ள வட்டி வீதமானது வீட்டுக் கொள்வனவில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்பதடுத்தியுள்ளது.

ஏற்கனவே கனேடிய மத்திய வங்கி தனது பிரதான வட்டி வீதத்தை 0.25 சதவீதத்தால் குறைத்துள்ள போதிலும் வீட்டு சந்தையில் கணிசமான தாக்கத்தை அது ஏற்படுத்தவில்லை என்பதை ஜூன் மாதத்தின் புள்ளி விபரங்களும் எடுத்துக் காட்டியுள்ளன.

எனினும் ஜூலை மாதம் மற்றுமொரு வட்டி வீதக் குறைப்பினை கனேடிய மத்திய வங்கி அறிவிக்குமானால் கோடை காலத்தில் வீட்டுச் சந்தையில் மாற்றம்; எற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை வட்டி வீதங்கள் தொடர்ச்சியாக குறைக்கப்படுமானால் வீடுகளின் விலை அதிகரிப்பிற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிகரித்த வட்டி வீதத்தின் தாக்கத்தை இன்னும் பலர் நேரடியக உணரவில்லை என்றும் அவர்கள் மிகக் குறைந்த வட்டி வீதத்தில் வைத்துள்ள அடமானக் கடன்கள் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் புதுப்பிக்கப்படும் போது அதன் தாக்கத்தை உணர்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பெருந்தொற்று பரவல் காலத்தில் நிலவிய குறைந்த வட்டி வீத்தின் சாதகத் தன்மையினை பயன்படுத்தி அதிக விலை கொடுத்து வீடுகளை கொள்வனவு செய்தவர்கள் அவற்றின் அடமானக் கடன்களுக்கு அதிக வட்டியினை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் போது வீடுகளை விற்பனை செய்ய முற்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் அவர்கள் பெருந்தொற்று பரவல் காலத்தில் கொள்வனவு செய்த விலையை விட கூடுதல் விலைக்கு இப்போதுள்ள சந்தை நிலவரத்தில் விற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
தமது சொந்தப் பயன்பாட்டிற்கான வீடுகளை எவ்வாறாயினும் காப்பாற்றுவதற்கே பெரும்பாலனவர்கள் முற்படுவார்கள்.

முதலீட்டு நோக்கில் கொள்வனவு செய்யப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் அதிகளவான தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புதிய வட்டி வீதத்தில் அடமானக் கடன்களை புதுப்பிக்கும் போது அதற்கான கொடுப்பனவினை வாடகை வருமானத்தால் ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகின்றது.

எனவே சரியான கணிப்பீடுகள் மற்றும் ஆலாசனைகள் இன்றி அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்த வீடுகளின் உரிமையாளர்கள் அந்த வீடுகளை விற்பனை செய்து அதில் இருந்து வெளியேறுவதே சிறப்பான முடிவாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுச் சந்தையின் போக்கினை அடிப்படையாக கொண்டு அதிகளவான பொருளாதார இழப்புகள் இல்லாமல் அவர்கள் வெளியேறுவது பாதுகாப்பாது என பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

விலை அதிகரிப்பிற்காக நீண்ட காலம் காத்திருந்து பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதைக் காட்டிலும் அதில் இருந்து வெளியேறுவது ஆரோக்கியமான முடிவாக கருதப்படுகின்றது.

07/18/2024

“ஒருபோதும் வீழாமல் இருப்பதில் அல்லாமல், ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதிலேயே இருக்கிறது வாழ்வின் மிகப் பெரிய மகத்துவம்.”
- நெல்சன் மண்டேலா

மக்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது தொழில் வாழ்க்கையிலோ தோல்வியைக் கண்டு அஞ்சுகிறார்கள். அடைய முடியாத முழுமையைத் தேடி பாடுபடுகிறார்கள். இருப்பினும், உண்மையான வெற்றி என்பது தோல்வியைத் தவிர்ப்பதில் அல்ல; மாறாக, அதை ஒப்புக்கொள்வதன் மூலமும், அதிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், அதன் விளைவாக வலுவாக வளர்வதில் இருந்து வருவதே என்பதை மண்டேலாவின் ஞானம் நமக்குக் கற்பிக்கிறது.

தங்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் உருவாகும் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்து பவர்களையே உலக சரித்திரம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறது. அப்படி தனக்கு அமைந்த இக்கட்டான சூழல்களை அடிமைப்படுத்தப்பட்ட தன் மக்கள் விடுதலைக்காக சாதகமாக மாற்றிய விடிவெள்ளி நெல்சன் மண்டேலா.

நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது

06/05/2024

The Bank of Canada has lowered its key interest rate to 4.75 per cent.

05/30/2024

‘இக்கிகய்’ என்கிற ஐப்பானிய வார்த்தைக்கு 'எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதனால் வரும் மகிழ்ச்சி' என்று அர்த்தம்.

வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை வரையறுத்து நடைமுறைப்படுத்துவதாகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் ஏன் எழுந்திருக்கிறீர்கள் என்பதற்கான காரணமாகும்.

ஜப்பானியர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான 'இக்கிகய்' இருப்பதாக நம்புகிறார்கள், மேலும் அதைக் கண்டுபிடிப்பது வாழ்க்கைக்கு திருப்தியையும் அர்த்தத்தையும் கொண்டு வருவதற்கான ஒரு இன்றியமையாத பயணம் என்றும் கருதுகிறார்கள்.

கனடிய தேசிய மல்யுத்த வெற்றியாளர்களாக முடி சூட்டப்பட்ட தமிழ் கனடிய உடன்பிறப்புகள் 03/18/2024

2024ஆம் ஆண்டுக்கான கனடிய தேசிய மல்யுத்த வெற்றியாளர்களாக தமிழ் கனடிய உடன்பிறப்புகள் முடி சூட்டப்பட்டனர். அவர்களோடு East FM காற்றலையில் இடம்பெற்ற உரையாடல்.

Tamil Canadian Siblings crowned 2024 National Wrestling Champions.

கனடிய தேசிய மல்யுத்த வெற்றியாளர்களாக முடி சூட்டப்பட்ட தமிழ் கனடிய உடன்பிறப்புகள் Tamil Canadian Siblings Aaharen Piranavan and Adsaya Piranavan from Pickering, have been crowned National winners at the 2024 Canadian Wrestling Championships

03/08/2024

எங்கட படத்தை ஒருமுறயாவது வந்து பாருங்கோ
- ராஜ் சிவராஜ் 🤔⬇️

கறுப்பு அன்னம் 03/01/2024

ராஜ் ராஜரட்ணம் அவர்களின் நீதிக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் “ கறுப்பு அன்னம் “ நூலின் முதல் அத்தியாயத்தின் ஓலி வடிவத்திற்கு குரல் கொடுத்திருக்கின்றேன். கேட்டுப் பாருங்கள்.

“எப்.பி.ஐ! கதவைத் திறவுங்கள்” என்று கடுமையான குரலில் பதில் வந்தது. நான் உடனடியாகக் கதவைத் திறந்தேன். புலன் விசாரணைக் கூட்டாட்சிப் பணியகத்தின் ஓர் அதிகாரி வீட்டுக்குள் பாய்ந்து வந்தார். அவருக்குப் பின்னே மேலும் ஐந்து அதிகாரிகள் உள்ளே நுழைந்து, வீட்டு வாசலின் குறுக்காக வரிசையாக நின்றுகொண்டார்கள். முன்னே வந்த அதிகாரி “நீர் தானே ராஜ் ராஜரட்ணம்?” என்று இறுமாப்பாக அதிகாரக் குரலில் கேட்டார். நான் நிதானமாக “ஆம்” என்றேன்.

“பி.ஜே. காங்” என்ற பெயருடைய அந்த அதிகாரி வன்மம் கொப்பளிக்கும் தொனியில் “நீர் கைது செய்யப்படுகிறீர்” என்றார். என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/--e2gcq8o

முழுமையான கட்டுரைக்கு
http://tinyurl.com/3tz2c3eh

கறுப்பு அன்னம் எப்.பி.ஐ அலுவலத்தில், சாளரங்களே இல்லாத ஆனால், ஒளி பிரகாசித்த ஓர் அறைக்குள் நான் தள்ளப்பட்டேன். அங்கே பகலுக்கும் ...

Want your business to be the top-listed Media Company in Pickering?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

P. O. Box 55
Pickering, ON
L1V2R2